என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    Stock market today: 4 மாதங்களுக்குப் பிறகு 80 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்
    X

    Stock market today: 4 மாதங்களுக்குப் பிறகு 80 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்

    • கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது.
    • ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் இன்று அதிக அளவில் ஏற்றம் கண்டன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்பு காரணமாக இந்த மாதம் தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தன. பின்னர் சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியை 90 நாட்கள் நிறுத்தி வைத்தார். அதன்பின் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது.

    கடந்த 6 நாட்களாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்த நிலையில் இன்று 7ஆவது நாளாகவும் உயர்வுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. மேலும் கடந்த 4 மாதங்களுக்குப் பிறகு சென்செக்ஸ் தற்போது 80 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் 520.90 புள்ளிகள் உயர்ந்து 80,116.49 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நிறைவடைந்தது.

    ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பங்கு 7.72 சதவீதம் உயர்ந்தது. 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டின் நிகர லாபம் 4307 கோடி ரூபாய் என வெளியிட்டிருந்தது. இதனால் அதன் பங்கு அதிக ஏற்றம் கண்டது.

    டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, டாடா கல்சண்டன்சி சர்வீசஸ், டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், மாருதி நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டனம்.

    கோடக் மஹிந்திரா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, எஸ்.பி.ஐ. ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் 161.70 புள்ளிகள் உயர்ந்து 24328.95 புள்ளிகளில் நிறைவடைந்தது.

    வெளிநாட்டு நிதி வரவு மற்றும் நேர்மறையான உலகளாவிய டிரெண்ட்ஸ் ஆகியவை பங்குச் சந்தை உயர்வுக்கு காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×