என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    Stock market today: வாரத்தின் முதல் நாளே ஏற்றம் - சென்செக்ஸ் - நிஃப்டி நிலவரம்!
    X

    Stock market today: வாரத்தின் முதல் நாளே ஏற்றம் - சென்செக்ஸ் - நிஃப்டி நிலவரம்!

    • இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
    • சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் பின்தங்கி காணப்பட்டன.

    வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் குறியீடு ஆரம்ப வர்த்தகத்தில் 599.66 புள்ளிகள் உயர்ந்து 79,152.86 புள்ளிகளில் நிலைபெற்றது.

    தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 152.55 புள்ளிகள் உயர்ந்து 24,004.20 புள்ளிகளில் நிலைபெற்றது.

    சென்செக்ஸ் நிறுவனங்களில், டெக் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, இன்போசிஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

    அதானி போர்ட்ஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல், டைட்டன், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் பின்தங்கி காணப்பட்டன.

    Next Story
    ×