என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    பங்குச்சந்தை கடும் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு!
    X

    பங்குச்சந்தை கடும் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு!

    • சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.
    • பிஎஸ்இ சென்செக்ஸில் டாடா ஸ்டீல் (0.73%), இன்ஃபோசிஸ் (0.08%), மற்றும் ஐடிசி (0.07%) ஆகியவை லாபம் ஈட்டின.

    இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்றைத் தொடர்ந்து இன்றும் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.

    சர்வதேச சந்தைகளின் பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை, சந்தைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 872 புள்ளிகள் இழந்து 81,186 ஆக இருந்தது.

    தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 261 புள்ளிகள் சரிந்து 24,683 ஆக இருந்தது.

    டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.85.63 ஆக உள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸில் டாடா ஸ்டீல் (0.73%), இன்ஃபோசிஸ் (0.08%), மற்றும் ஐடிசி (0.07%) ஆகியவை லாபம் ஈட்டின.

    மாருதி (-2.76%), மஹிந்திரா & மஹிந்திரா (-2.13%), அல்ட்ராடெக் சிமென்ட் (-2.04%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (-2.01%), நெஸ்லே இந்தியா (-1.92%) ஆகியவை அதிக இழப்பை சந்தித்தன.

    நேற்றும் பங்குச் சந்தை சரிவுடனே காணப்பட்டது. சென்செக்ஸில் மட்டும் 443.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதன்மூலம் சமீபத்திய நிலவரப்படி, முதலீட்டாளர்களுக்கு ரூ. 5.47 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×