என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத சரிவு - முதலீட்டாளர்களுக்கு ரூ.19 லட்சம் கோடி இழப்பு
    X

    சென்செக்ஸ், நிஃப்டி வரலாறு காணாத சரிவு - முதலீட்டாளர்களுக்கு ரூ.19 லட்சம் கோடி இழப்பு

    • இன்று சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது.
    • இன்று நிஃப்டி 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன.

    அதன்பின் கடந்த செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் புதன்கிழமை சற்று ஏற்றம் கண்டது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக வியாழன், வெள்ளி

    ஆகிய நாட்களில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.

    கடந்த வாரம் சென்செக்ஸ் 930.67 புள்ளிகளும், நிஃப்டி 345.65 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒன்று ஒருநாளில் மட்டும் ரூ.19 லட்சம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் கடந்த வார வர்த்தக முடிவில் 75,364.69 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று மதியம் 1 மணியளவில் சுமார் 3200 புள்ளிகள் சரிந்து 72,133 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி கடந்த வார வர்த்தகத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று மதியம் 1 மணியளவில் சுமார் 1000 புள்ளிகள் சரிந்து 21, 850 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

    இன்றைய நாள் முடிவில் பங்குச்சந்தை மேலும் சரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×