என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை
    X

    இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை

    • இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது
    • சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2.75% உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயத்தால் கடந்த வாரத்தின் இறுதிநாளில் மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை தலா 1% வரை சரிவை சந்தித்தது.

    இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால் இன்று காலை முதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2.75% உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 79,454.47 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 2145 புள்ளிகள் சரிந்து 81.600 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,008 புள்ளியாக இருந்தது. இன்று காலை 667 புள்ளிகள் சரிந்து 24,675 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×