என் மலர்
வணிகம் & தங்கம் விலை

பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம் - SENSEX - NIFTY எவ்வளவு?.. எந்தெந்த துறைகளில் ஏற்றம்?
- நிஃப்டி மெட்டல் குறியீடு 4.30% மற்றும் பார்மா 2.50% உயர்ந்துள்ளன.
- சீனாவை தவிர இந்தியா உட்பட மற்ற நாடுகளான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தார்.
உலகளாவிய நிச்சயமின்மைக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் வர்த்தமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் சுமார் 1400 புள்ளிகள் (1.54%) அதிகரிப்புடன் 75,200 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டியும் 450 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 22,850 புள்ளிகளில் உள்ளது.
NSE-யில் உள்ள 50 பங்குகளில் 46 பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. நிஃப்டி மெட்டல் குறியீடு 4.30% மற்றும் பார்மா 2.50% உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறை குறியீடுகள் சுமார் 2% அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன.
டிரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பால் உலகளாவிய பங்குச் சந்தைகளில் இந்த வார தொடக்கத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. இதற்கிடையே சீனாவை தவிர இந்தியா உட்பட மற்ற நாடுகளான வரிவிதிப்பை 90 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்த நிலையில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன.






