search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யமஹா YZF-R15 V3.0 இந்திய விலை மாற்றம்
    X

    யமஹா YZF-R15 V3.0 இந்திய விலை மாற்றம்

    யமஹா நிறுவனத்தின் YZF-R15 V3.0 மோட்டார்சைக்கிள் இந்தியா விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய விலை சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Yamaha #motorcycle


    யமஹா நிறுவனம் இந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்த YZF-R15 V3.0 விலையை சத்தமில்லாமல் மாற்றியமைத்தது. இந்தியாவில் ரூ.1.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இதன் விலை ரூ.2,000 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ.1.27 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் கிடைக்கும் 150சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் ஒற்றை ஃபுல்லி-ஃபேர்டு மாடலாக அறிமுகமானது. மோட்டார்சைக்கிளில் மஃப்ளர் வடிவமைப்பு மோட்டார்சைக்கிளின் தோற்றத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. 

    இந்திய மாடலில் YZF-R15 V3.0 அப்சைடு டவுன் முன்பக்க ஃபோர்க், ABS பாதுகாப்பு அம்சங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. மற்ற அம்சங்கள்  முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை போன்றே வழங்கப்பட்டிருக்கிறது. யமஹா YZF-R15 V3.0 ரேசிங் புளூ மற்றும் தண்டர் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. யமஹாவின் R1 சூப்பர்பைக் போன்ற தோற்றத்தை புதிய யமஹா YZF-R15 V3.0 பெற்றிருக்கிறது. மற்ற அம்சங்கள் தற்போதைய R15 போன்றே வழங்கப்பட்டுள்ளது. 



    யமஹா YZF-R15 V3.0 மாடலில் 155சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.03 பி.ஹெச்.பி. பவர், 15 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. ஸ்லிப்பர் கிளட்ச் இடம்பெற்றிருப்பதால் கியர் டவுன்ஷிஃப்ட் செய்யும் போது மென்மையாக இருக்கும். 

    இத்துடன் செயல்திறனை மேம்படுத்தும் VVA சிஸ்டம் எனும் அம்சத்தை யமஹா அறிமுகம் செய்திருக்கிறது. புதிய யமஹா YZF-R15 V3.0 வடிவமைப்பு அதன் முந்தைய YZF-R1  மற்றும் YZF-R6 மாடல்களை தழுவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேம்படுத்தப்பட்ட காற்றோட்டத்துடன் கூடிய முன்பக்க ஃபேரிங் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. 

    இதன் டெயில் பகுதியில் புதிய வடிவமைப்புடன் கூடிய டெயில் லைட் மற்றும் டையர் ஹக்கர் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய யமஹா YZF-R15 V3.0 மாடலில் முற்றிலும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர், 18 பாராமீட்டர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. #Yamaha #motorcycle
    Next Story
    ×