search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிடும் ஹீரோ
    X

    அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிடும் ஹீரோ

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் விரைவில் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




    இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ, விரைவில் அதிவேக இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஹீரோ வெளியிட இருக்கும் புதிய ஸ்கூட்டர் அதிக செயல்திறன் மற்றும் நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட ஃபியூயல் வாகனங்களை பலரும் தேர்வு செய்ய அதன் செயல்திறன் முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது பலரும் இவற்றை வாங்க வேண்டாம் என்ற முடிவையே எடுக்கின்றனர். புதிய ஹீரோ எலெக்ட்ரிஸ் ஸ்கூட்டர் AXHLE-20 என்ற குறியீட்டு பெயர் கொண்டு தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஹீரோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிவேக சீரிஸ் (High Speed series) ரக பிரிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் அதிவேக பிரிவில் நிக்ஸ், ஃபோட்டான் மற்றும் ஃபோட்டான் 72v என மூன்று மாடல்கள் உள்ளன. அந்த வகையில் AXHLE-20 மாடல் விலை உயர்ந்த ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய AXHLE-20 ஸ்கூட்டரில் 4kW மோட்டார் (8 பிஹெச்பி) வழங்கப்படும் என்றும் இது மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய AXHLE-20 ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரை செல்லும் என்றும் கூறப்படுகிறது. 

    ஹீரோ இ-ஸ்கூட்டர் மாடலில் ப்ளூடூத் மொபைல் கனெக்டிவிட்டி வசதியும், இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் ஸ்மார்ட்போன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×