என் மலர்

  செய்திகள்

  பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட ராயல் என்ஃபீல்டு
  X

  பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட ராயல் என்ஃபீல்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 350 ரெடிட்ச் ரெட் நிற மோட்டார்சைக்கிளில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்குகிறது.
  புதுடெல்லி:

  ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 ரெடிட்ச் ரெட் நிற மோட்டார்சைக்கிளில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. 

  ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 சீரிஸ் மாடல்களில் இதுவரை பின்புற டிஸ்க் பிரேக் ஆப்ஷனை கன்மெட்டல் கிரே மாடலில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் இதுவரை இந்தியாவில் ஏபிஎஸ் அம்சம் குறித்து ராயல் என்ஃபீல்டு சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

  ஏப்ரல் 2019-க்குள் இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் வழங்குவதை இந்திய அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. அந்த வகையில் வரும் மாதங்களில் ஏபிஎஸ் அம்சம் வழங்குவது குறித்த தகவல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   பின்புறம் டிஸ்க் பிரேக் மட்டுமின்றி மோட்டார்சைக்கிளில் பின்புரம் ஸ்விங் ஆர்ம் மாற்றப்பட்டுள்ளது. பினபுறம் டிஸ்க் பிரேக் 240 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் வழக்கமான 280 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. 

  ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலில் பின்புற டிஸ்க் பிரேக் கொண்ட வேரின்ட் விலை ரூ.8,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ.1.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் 346 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19.8 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
  Next Story
  ×