என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹோன்டா கிரேசியா: இந்திய வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்
    X

    ஹோன்டா கிரேசியா: இந்திய வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

    ஹோன்டா நிறுவனத்தின் புதிய கிரேசியா பிரீமியம் ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஹோன்டா ஸ்கூட்டரின் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனத்தின் பிரீமியம் ஸ்கூட்டர் மாடலான கிரேசியா இந்தியாவில் நவம்பர் 8-ம் தேதி வெளியிடப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    புதிய கிரேசியா ஸ்கூட்டர் ஜப்பான் நாட்டு நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கும் என்றும் இதன் விலை ஆக்டிவா 125 மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹோன்டா கிரேசியாவிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஏற்கனவே துவங்கியுள்ளது.

    அதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.2,000 செலுத்தி ஹோன்டா கிரேசியா மாடலை முன்பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஹோன்டா விற்பனை மையங்களில் காணப்பட்ட கிரேசியா ஸ்கூட்டர் பிரீமியம் வடிவமைப்பு மற்றும் தலைசிறந்த வடிவமைப்புகளை கொண்டுள்ளது.



    இதன் ஹெட்லேம்ப் வி வடிவில் இருப்பது வாகனத்தை தோற்றத்தை முற்றிலும் வித்தயாசமாக வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டரில் பெரிய முன்பக்க சக்கரம், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. கிரேசியாவில் ஹோன்டாவின் காம்பி-பிரேக் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

    ஹோன்டா கிரேசியாவில் 110சிசி அல்லது 125சிசி இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நவி மற்றும் ஹோன்டா கிளிக் போன்று கிரேசியா மாடலும் பிரீமியம் ஸ்கூட்டர் ஆகும். இதன் வடிவமைப்பு மற்றும் அழகிய தோற்றம் இளைஞர்கள் விரும்பும் வகையில் இருக்கிறது.

    இதன் இன்டீரியர் பேனலில் சிறிய ஸ்டோரேஜ் ஸ்பேஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12 இன்ச் பிளாக் அலாய் வீல்ஸ் மற்றும் முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் ஹோன்டாவின் காம்பி-பிரேக் சிஸ்டம் வழங்கப்பட்டும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×