search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் க்விட் சார்ந்த எம்.பி.வி.
    X

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் க்விட் சார்ந்த எம்.பி.வி.

    ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கும் எம்.பி.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #Renault



    ரெனால்ட் நிறுவனத்தின் புத்தம் புதிய எம்.பி.வி. (என்ட்ரி லெவல் க்விட் சார்ந்த மாடல்) கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. புதிய க்விட் சார்ந்த எம்.பி.வி. ஆர்.பி.சி. என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

    ரெனால்ட் ஆர்.பி.சி. எம்.பி.வி. கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதால் காரின் சில விவரங்கள் மட்டும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய ரெனால்ட் க்விட் சி.எம்.எஃப்-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. அந்த வகையில் புதிய காரில் அதிக வீல்பேஸ் இடம்பெற்றுள்ளது.


    புகைப்படம் நன்றி: Aravind Siddaarth T K

    காரின் முன்பக்கம் தவிர மற்ற அம்சங்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஒரேமாதிரியாக காட்சியளிக்கிறது. எனினும், காரின் உள்புறம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. உபகரணங்களின் படி தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெனால்ட் எம்.பி.வி. மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (க்விட் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்று) வழங்கப்படலாம். இந்த என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்கியூ, 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பவர் வின்டோக்கள், டூயல்-சோன் ஏ.சி. கன்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம். புதிய ரெனால்ட் எம்.பி.வி. மாடலின் விலை இந்தியாவில் ரூ.7 லட்சத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ.11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×