search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜாவா மோட்டார்சைக்கிள்
    X

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜாவா மோட்டார்சைக்கிள்

    மஹிந்திராவின் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #jawamotorcycles



    மஹிந்திரா நிறுவனத்தின் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் மீண்டும் இந்தியா வருயிருக்கிறது. நவம்பர் 15ம் தேதி புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் அறிமுகமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் சோதனை நடைபெறுகிறது.

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜாவா மோட்டார்சைக்கிள் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் புதிய மோட்டார்சைக்கிள் பார்க்க பழைய காலத்து வடிவமைப்பை கொண்டிருக்கிறது. வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், ஸ்போக் வீல்கள், டியர்டிராப் ஃபியூயல் டேன்க், டூயல் எக்சாஸ்ட் மற்றும் ஒற்றை சீட் கொண்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Rushlane | Kiran P Menon

    ஃபியூயல் டேன்க், முன்பக்க ஃபென்டர், பக்கவாட்டு மற்றும் பின்புற மட்கார்டு உள்ளிட்டவற்றில் ஜாவா பிரான்டிங் மறைக்கப்பட்டுள்ளது. புதிய ஜாவா மோட்டார்சைக்கிளில் 293சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய 293சிசி லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜின்களில் ஃபாக்ஸ் கூலிங் ஃபின்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் ஃபியூயல் இன்ஜெக்ஷன் மற்றும் பி.எஸ். VI எமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளது.

    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள் அதிக செயல்திறன் கொண்டு தினசரி பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
    Next Story
    ×