search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய நிறத்தில் ஹூன்டாய் சான்ட்ரோ
    X

    புதிய நிறத்தில் ஹூன்டாய் சான்ட்ரோ

    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய சான்ட்ரோ கார் இன்னும் சில தினங்களில் அறிமுகமாக இருக்கும் நிலையில் நீல நிற சான்ட்ரோ புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Hyundai #Santro



    ஹூன்டாய் நிறுவனம் புதிய சான்ட்ரோ கார் மாடலை அக்டோபர் 23ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய சான்ட்ரோ காரின் பல்வேறு விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், நீல நிறத்தில் சான்ட்ரோ கார் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    நீல நிறம் கொண்ட சான்ட்ரோ விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தின் சான்ட்ரோ பார்க்க மற்ற நிற வேரியன்ட்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. நீல நிற சான்ட்ரோ டாப்-என்ட் ஆஸ்டா வேரியன்ட் ஆகும். காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு பார்க்க நவீனமாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.

    காரின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், குரோம் சரவுன்ட், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப், ஃபாக் லேம்ப்களும், காரின் கிரில், ஃபாக் லேம்ப் மற்றும் புதிய பம்ப்பரை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் புதிய சான்ட்ரோ பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது.

    புதிய சான்ட்ரோ மாடலின் பின்புறம் பெரிய வின்ட்ஷீல்டு, புதிய டெயில் லைட் கிளஸ்டர், பிளாக் பிளாஸ்டிக் இன்சர்ட், காரின் பின்புறம் பழைய சான்ட்ரோவின் சாயலில் நவீன கால வடிவமைப்பு கொண்டுள்ளது. உள்புறத்தில் டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்க் நிற தீம் செய்யப்பட்டுள்ளது.



    டேஷ்போர்டு வடிவமைப்பு அழகாகவும், ஏ.சி. வென்ட், கியர் லீவர் மற்றும் ஸ்டீரிங் வீல்களை சுற்றி சில்வர் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளது. டாப்-என்ட் ஆஸ்டா வேரின்ட்டில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் மிரர்லின்க் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை பின்புற ஏ.சி. வென்ட், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் MID, மின்முறையில் மாற்றக்கூடிய ORVM-கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை டிரைவர் சைடு ஏர்பேக், ABS, EBD மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படுகிறது.

    புதிய ஹூன்டாய் சான்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்த இன்இன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் புதிய சான்ட்ரோ CNG வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    Next Story
    ×