search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவில் வெளியாக இருக்கும் ஃபோர்டு ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட்
    X

    விரைவில் வெளியாக இருக்கும் ஃபோர்டு ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட்

    ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் கார் விரைவில் வெளியிடப்பட இருக்கும் நிலையில் இதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. #Ford



    ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அக்டோபர் 4-ம் தேதி வெளியிட இருக்கிறது. இந்நிலையில் காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

    புதிய ஆஸ்பையர் பல்வேறு புதிய ஸ்டைலிங் மற்றும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஆஸ்பையரின் பெட்ரோல் மாடலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்பை படங்களின் படி ஆஸ்பையர் மாடலில் ஹனிகாம்ப் முன்பக்க கிரில், கிடையான ஸ்லாட்கள் இடம்பெற்றிருக்கிறது.



    மற்ற அப்டேட்களை பொருத்த வரை மேம்படுத்தப்பட்ட ஃபாக் லேம்ப்கள், ஹெட்லேம்ப் மற்றும் பம்ப்பர்கள் இடம்பெற்றுள்ளன.

    முன்பக்க பம்ப்பர்களில் பெரிய ஏர் டேம் மற்றும் பக்கவாட்டுகளில் சி-வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது.



    புதிய ஃபோர்டு ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டெயில்லைட் கிளஸ்டர் தற்போதைய மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகிறது. 

    இத்துடன் பின்புற பார்க்கிங் கேமரா, முற்றிலும் வடிவமைக்கப்பட்ட மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் டூயல்-டோன் கேபின் பிளாக் மற்றும் பெய்க் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.



    டேஷ்போர்டு மேம்படுத்தப்பட்டு புதிய சென்டர் கன்சோல், மிதக்கும் வகையிலான டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் ஆடியோ மற்றும் இதர கன்ட்ரோல்களை கொண்டுள்ளது. இத்துடன் 3-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டிருக்கிறது.

    புதிய ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் பவர் யூனிட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே இன்ஜின் ஆப்ஷன்கள் ஃப்ரீஸ்டைல் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிரான்ஸ்மிஷன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். 
    Next Story
    ×