search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயல் என்ஃபீல்டு ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள்களின் வெளியீட்டு விவரம்
    X

    ராயல் என்ஃபீல்டு ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள்களின் வெளியீட்டு விவரம்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் ஏபிஎஸ் வசதி கொண்ட மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #RoyalEnfield


    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. 

    ஏ.பி.எஸ். வசதி கொண்ட புதிய கிளாசிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் புகைப்படங்களை டீம்பிஹெச்பி வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய மோட்டார்சைக்கிள்கள் நான்கு வித நிறங்களில் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. புதிய ராயல் என்ஃபீல்டு மாடல்கள் ஆகஸ்டு 28-ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் கிடைத்திருக்கும் புகைப்படங்களில் புதிய ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல்களில் புதிய மேட் நிறம் கொண்டிருக்கும் என்றும் அதிக க்ரோம் இல்லாமல், ஹெட்லேம்ப் பெசல் மற்றும் எக்சாஸ்ட் மஃப்ளர் உள்ளிட்டவை பிளாக்டு அவுட் செய்யப்பட்டுள்ளது. இதன் ஃபியூயல் டேன்க் பிரத்யேக நம்பர் பொறிக்கப்பட்டு, 49 எண் வெள்ளை நிறத்திலும், பின்புறம் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம் பூசப்பட்டுள்ளது.



    ஏ.பி.எஸ். வசதி கொண்ட கிளாசிக் மோட்டார்சைக்கிள்கள் பாதுகாப்பு வசதியுடன் வரும் முதல் ராயல் என்ஃபீல்டு மாடல் என்ற பெருமையை பெற இருக்கின்றன. ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல்களின் உற்பத்தி ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், புதிய மாடல்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் மாடல்ளில் ஒன்றாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 இருக்கிறது. மாதம் குறைந்தபட்சம் 35,000 ராயல் என்ஃபீல்டு யூனிட்கள் விற்பனையாகின்றன. அந்த வகையில் புதிய ஏ.பி.எஸ். வெர்ஷன் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஏ.பி.எஸ். வெர்ஷனிலும் தற்போதைய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட்டுள்ள 346 சிசி இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 19.8 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: TeamBHP
    Next Story
    ×