search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    635 விதிமீறல்கள் - போலீசில் சிக்கியவருக்கு அபராத தொகை எவ்வளவு தெரியுமா?
    X

    635 விதிமீறல்கள் - போலீசில் சிக்கியவருக்கு அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

    635 விதிமீறல்கள் நிலுவையில் இருந்த ஹோன்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மடக்கிப்படித்த போலீசார் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவருக்கு பெரிய தொகையை அபராதமாக விதித்தனர். #TrafficOfficers


    மைசூரு நகர போக்குவரத்து காவல் துறைக்கு 'அன்றைய' வாகன சோதனை வழக்கமானதாக இருக்கவில்லை. வாகன சோதனையின் போது சிக்கிய ஹோன்டா ஆக்டிவா காவல் துறையினரின் நீண்ட நாள் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

    போக்குவரத்து காவல் துறையினர் மடக்கிய குறிப்பிட்ட ஹோன்டா ஆக்டிவா மீது ஏற்கனவே 635 போக்குவரத்து விதிமீறல்கள் நிலுவையில் இருந்தது, காவல் துறையினருக்கு அதிர்ச்சி கலந்த ஆனந்த உணர்வை ஏற்படுத்தியது. ஆக்டிவா ஸ்கூட்டரின் பதிவு எண் மூலம் நிலுவையில் இருந்த விதிமீறல் விவரங்களை காவல் துறையினர் தெரிந்து கொண்டனர்.

    சிறிதளவு விதிமீறல் என்றாலே கொதித்தெழும் போக்குவரத்து காவல்துறையினர், இத்தனை விதிமீறல்களுக்கு பெரிய தொகையை அபராதமாக கணக்கிட்டு, வாகனத்தை ஓட்டிவந்தவர் கையில் ஒப்படைத்ததோடு, ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். விதிமீறல்களுக்கு மொத்தமாக குறிப்பிட்ட ஆக்டிவா ஸ்கூட்டருக்கு ரூ.63,500 அபராதமாக விதித்தனர். 



    மேலும் விதிமீறியவர் மீது வழக்க தொடர்ந்து அபராத தொகையை பெற முடிவு செய்துள்ளோம். நீதிமன்ற உத்தரவு வரும் வரை காத்திருப்போம் என போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    மைசூருவில் புத்தம் புதிய ஹோன்டா ஆக்டிவா விலை ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் போக்குவரத்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ள ஹோன்டா ஆக்டிவா 2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஸ்கூட்டரின் உரிமையாளர் குறித்த விவரங்கள் அறியப்படவில்லை. காவல் துறையினர் ஸ்கூட்டரின் உரிமையாளரை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் இத்தகைய அபராத தொகையை எவ்வாறு மீட்பது என்ற யோசனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #TrafficOfficers

    Source: Cartoq
    Next Story
    ×