search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி. வரிமுறை: கார்களின் விலையை அதிரடியாய் குறைத்த மாருதி சுசுகி
    X

    ஜி.எஸ்.டி. வரிமுறை: கார்களின் விலையை அதிரடியாய் குறைத்த மாருதி சுசுகி

    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதும், கார்களின் விலையை மாற்றியமைத்துள்ளது. அதன்படி கார்களின் விலை ஏற்கனவே இருந்ததை விட குறைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி தனது வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதும் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    சுதந்திரத்திற்கு பின் மிகப்பெரிய வரிமுறையாக பார்க்கப்படும் ஜி.எஸ்.டி. நாட்டில் மறைமுக வரிமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கூறப்படுகிறது.  

    மாருதி சுசுகியின் பெட்ரோல் ரக கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வெவ்வேறு பகுதிகளில் உள்ள வாட் வரிக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு ஏற்ற விலையை அனைத்து வாகனங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    அதிகபட்சம் மாருதி சுசுகி செடான் மாடல் காரான சியாஸ் பெட்ரோல் என்ஜின் கொண்ட உயர் ரக மாடலின் விலையில் ரூ.23,400 வரை குறைக்கப்பட்டுள்ளது. எனினும் எலக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தும் சாதாரண டீசல் என்ஜின் கொண்ட கார்களின் விலை ஒரு லட்சம் வரை அதிகரித்துள்ளது. இவற்றுக்கான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து விலை அதிகமாகியுள்ளது.

    எஸ்.யு.வி. மற்றும் ஆடம்பர கார்களின் விலையும் குறைவாகியுள்ளது. பி.எம்.டபுள்.யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர் மற்றும் ஆடி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலாகும் முன்பே இந்த வரிமுறைக்கு ஏற்ப விலையை மாற்றியமைத்து விட்டன. 

    ஆடம்பர கார் நிறுவனங்களின் சில மாடல்களின் விலை ரூ.10 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பி.எம்.டபுள்.யூ ஐ8 மாடல் காரின் விலை ரூ.48 லட்சம் வரை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.2.62 கோடியாக மாற்றப்பட்டுள்ளது.
    Next Story
    ×