search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மினி வேனில் வாக்கு சேகரித்த சீமான்.
    X
    மினி வேனில் வாக்கு சேகரித்த சீமான்.

    மக்கள் பிரச்சினையை என்னால் மட்டுமே தீர்க்க முடியும் என்பதால் போட்டியிடுகிறேன்- சீமான் பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருவொற்றியூர் பகுதியில் மக்களுக்கு அதிக பிரச்சினை இருப்பதால்தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.
    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று அவர், திருவொற்றியூர் குடியிருப்பு பகுதிகளில் மினி வேனில் சுங்கச்சாவடி, ராஜாகடை, காலடிப்பேட்டை, திருச்சினாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:-

    திருவொற்றியூர் பகுதியில் மக்களுக்கு அதிக பிரச்சினை இருப்பதால்தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். இல்லை என்றால் எனது சொந்த தொகுதியான காரைக்குடியில் போட்டியிட்டு இருப்பேன். மக்கள் பிரச்சினையை தீர்க்க என்னால் மட்டுமே முடியும் என்பதால்தான் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்தேன்.

    நான் மக்கள் குறைகளை கேட்க வரவில்லை. தீர்ப்பதற்காக வந்திருக்கிறேன். அதனால் எனக்கு வெற்றி வாய்ப்பு உறுதி. எதிரணி வேட்பாளர்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை. நானும் மக்களும் மட்டுமே களத்தில் இருக்கிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு இருப்பதால் எனக்கு வெற்றி உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×