என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    என்ஆர் காங்கிரஸ்
    X
    என்ஆர் காங்கிரஸ்

    என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் யார்?- தொண்டர்கள் குமுறல்

    ரங்கசாமியை ஏனாம் தொகுதி வேட்பாளர் என மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவித்திருப்பது என்.ஆர்.காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    காங்கிரசிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த அவர் தனது சொந்த தொகுதியான ஏனாமில் போட்டியிட மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஏனாமில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய மல்லாடிகிருஷ்ணாராவ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரங்கசாமியை அறிவித்துள்ளார்.

    அவர் வரும் காலத்தில் முதல்-அமைச்சராக வாய்ப்புள்ளதால் ஏனாம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ரங்கசாமியை ஏனாம் தொகுதி வேட்பாளர் என மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்திருப்பது என்.ஆர்.காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏனாமில் போட்டியிட வரும்படி அழைப்பு விடுக்கலாம். ஆனால், ரங்கசாமி போட்டியிடுவார் என மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவித்திருப்பது எவ்விதத்தில் நியாயம்? என கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். கட்சியின் தலைவர்தான் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பை வெளியிடுவார்.

    ஆனால், காங்கிரசில் இருந்து விலகி முறைப்படி என்.ஆர்.காங்கிரசில் சேராத மல்லாடிகிருஷ்ணாராவ் இந்த அறிவிப்பை வெளியிடலாமா? என குமுறி வருகின்றனர்.

    Next Story
    ×