search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கரும்பு கொள்முதல் விலை உயர்வு- வேளாண் அமைச்சர்

    வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக ஆக்குவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து  பேசியதாவது:-

    *  2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்.

    * கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * 2021-22ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் மத்திய-மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

    * வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக ஆக்குவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தும்.
    Next Story
    ×