search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல் வயல்
    X
    நெல் வயல்

    சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு... வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்

    நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளன எனத் தெரியவந்துள்ளது. 

    * தரிசாக உள்ள நிலங்களில் 11.75 லட்சம் ஹெக்டேர் பரப்பில் குறைந்த நீர் செலவில் சாகுபடி செய்யப்படும்

    * வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

    * நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்

    * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி, பழம் பயிரிட்டு நிகர சாகுபடி பரப்பு 75% ஆக உயர்த்தப்படும்

    * தமிழகத்தின் மரபுசார் நெல் ரகங்களை திரட்டி பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது

    * திருவள்ளூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் மரபுசார் விதை நெல்கள் வழங்கப்படும்

    * மரபுசார் விதை நெல் உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

    * படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல 'ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்' தொடங்கப்படும்.
    Next Story
    ×