search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
    X
    அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வேளாண் பட்ஜெட் காணிக்கை -அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

    வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் ‘வேளாண்மை-உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். 

    அவர் பேசுகையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக குறிப்பிட்டார்.

    ‘வேட்டையாடித் திரிந்த மனிதனை விளைநிலத்தில் ஊன்றி நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி. தன் உணவைத் தானே உற்பத்தி செய்யும் திறனை அடைந்ததும் மனிதன் சிந்திக்கத் தொடங்கினான். நிச்சயமில்லாத வாழ்க்கையில் இருந்து நிம்மதியான வாழ்க்கைக்கு கொண்டு சேர்த்தது வேளாண்மையே. 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த புரட்சியே மனிதனைப் பண்பட்டவனாக மாற்றியது. அமுதசுரபிகளாக மண்ணை மாற்றும் மகத்துவம் பெற்றவர்கள் உழவர்கள். நாட்டுக்கு உயர்வைத் தரும் கூட்டுறவு முக்கியம். வேளாண்மையை தனித்து பிரித்து பார்க்க முடியாது. 

    வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் ‘வேளாண்மை-உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. 18 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை அதிகாரிகளுடன் சேர்ந்து கேட்டறிந்தேன். வேளாண் வணிகர்களின் கோரிக்கைகளையும் கேட்டபின் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
    Next Story
    ×