search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் சுய உதவிக்குழு
    X
    மகளிர் சுய உதவிக்குழு

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன்- பட்ஜெட்டில் அறிவிப்பு

    ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

    * பாசனத்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 6,607.17  கோடி ஒதுக்கீடு
    * 200 குளங்களின் தரம் உயர்த்த ரூ.111.24 கோடி நிதி ஒதுக்கீடு
    * ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்
    * 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்
    * ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்த ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு
    *  ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம்  ரூ.150 கோடி ஒதுக்கீடு

    குளம்

    * அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கிடைப்பது உறுதி செய்யப்படும்
    * கிராமப்புறங்களில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு ரூ.400 கோடி
    * சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி நடப்பாண்டு முதல் மீண்டும் ரூ.3 கோடி அளிக்கப்படும்
    * நமக்கு நாமே திட்டத்திற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
    *  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும்
    * ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
    Next Story
    ×