search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    X
    முதல்வர் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    சமூக பாதுகாப்பு ஓய்வூதிய நிதி ரூ.4,807 கோடியாக உயர்வு- பட்ஜெட்டில் அறிவிப்பு

    வரி அதிகரிப்பின் மூலம் ஒன்றிய அரசுக்கு வரிவருவாய் அதிகரித்தாலும் மாநில அரசின் வருவாய் கடுமையாக சரிந்துள்ளது என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    * ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்; பொது நிலங்கள் மேலாண்மைக்கு தனி அமைப்பு ஏற்படுத்தப்படும் 

    * 20-21ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்துள்ளது. மாநிலங்களின் பங்கு கடுமையாகச் சரிந்துள்ளது. ஆகவே எரிபொருள் மீதான விலையைக் குறைக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கே இருக்கிறது.

    * வரி அதிகரிப்பின் மூலம் ஒன்றிய அரசுக்கு வரிவருவாய் அதிகரித்தாலும் மாநில அரசின் வருவாய் கடுமையாக சரிந்துள்ளது.

    * தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்

    * சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி ரூ.4,807 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * நீதித்துறை நிர்வாகத்திற்கு 1,713.30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×