search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அறிவோம் சிறுநீரகம்
    X
    அறிவோம் சிறுநீரகம்

    அறிவோம் சிறுநீரகம்:13 சிறுநீரக தானம் சிறந்த தானம்- டாக்டர் சவுந்தரராஜன்

    உயிரோடு இருப்பவர்கள் தனது சிறுநீரகத்தை தானம் கொடுப்பதால் பிரச்சினை ஏற்படுமோ என்று தயங்குகிறார்கள். ஆனால் ஒரு சிறு நீரகத்தை தானம் செய்வதால் எந்த பிரச்சினையும் வராது.
    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மருத்துவத் துறை சாதித்து வரும் புதுமை.
    இதில் முக்கியமானது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை. இதற்கு சிறுநீரக தானம் முக்கியம். ஆனால் ரத்ததானம், கண்தானம் செய்யும் அளவுக்கு சிறு நீரக தானத்தை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் ஏற்படவில்லை என்பதே உண்மை.
    உயிரோடு இருப்பவர்கள் தனது சிறுநீரகத்தை தானம் கொடுப்பதால் பிரச்சினை ஏற்படுமோ என்று தயங்குகிறார்கள். ஆனால் ஒரு சிறு நீரகத்தை தானம் செய்வதால் எந்த பிரச்சினையும் வராது.
    ஒவ்வொருவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் உண்டு. அதில் ஒன்றை தானம் செய்வதால் எந்த பாதிப்பும் வராது.
    ஏனெனில் இரண்டு சிறு நீரகங்கள் செய்த வேலையை ஒரு சிறுநீரகம் செய்யும்.
    இரண்டு பேர் செய்யும் வேலையை நம்மில் எத்தனையோ பேர் ஒருவராக செய்வதில்லையா? அதே போல் ஒரு சிறுநீரகம் இல்லாத போது இருக்கும் ஒரு சிறுநீரகம் எல்லா வேலை களையும் செய்து கொள்ளும்.
    பிறவியிலேயே ஆயிரத்தில் ஒருவர் ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பதும் உண்டு. அவ்வளவு ஏன்? விபத்து, கல், புற்று நோய் பாதிப்புகளால் சிலருக்கு ஒரு சிறு நீரகத்தை அகற்ற வேண்டியது வரும். அதன் பிறகு ஒற்றை சிறு நீரகத்துடன் அவர் நூறு வயது வரை கூட உயிர் வாழலாம். அதே போல்தான் தானம் செய்வதும்.
    என்னுடைய அனுபவத்திலேயே சிறுநீரகம் தானம் செய்தவர்களை 30 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். எந்த பிரச்சினையும் இல்லை.
    அடுத்ததாக, யாருடைய சிறுநீரகத்தை எடுத்தும் யாருக்கும் சாதாரணமாக பொருத்திவிட முடியாது. தானம் கொடுப்-பவர்கள் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும். அதாவது பெற்றோர், சகோதர, சகோதரிகள், மகன், மகள் ஆகிய முதல் சுற்றில் வரும் நெருங்கிய உறவினர்கள். அடுத்ததாக தாத்தா&பாட்டி, கணவன்- மனைவி ஆகியோர்தான் கொடுக்க முடியும்.
    அவ்வாறு தானம் செய்ய வருபவர்கள் உண்மையாகவே ரத்த சொந்தம்தானா என்பதை ஆதாரப்பூர்வமாக உரிய ஆவணங்களை பார்த்து உறுதி செய்த பிறகுதான் ஏற்றுக் கொள்வார்கள்.
    அதன் பிறகு தானம் செய்பவர் அதற்கு தகுதியான உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா? பொருத்தப்படுபவரின் உடலுக்கு பொருத்தமானதுதானா? என்-பதற்கு பல விதமான பரிசோதனை கள் செய்யப்படும். அதே போல் அந்த சிறுநீரகத்தை பொருத்தினால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்பு உண்டா? என்பதெல்லாம் உறுதி செய்யப்படும். முக்கியமாக தானம் பெறுபவரை விட தானம் கொடுப்ப வரைத்தான் அதிகமாக பரிசோதிப்போம். ஏனெனில் அவர் இயற்கையாகவே நல்ல ஆரோக்கியமாக இருப்பவர். எனவே அவரை நோயாளி ஆக்கி விடக் கூடாது என்ற முன் எச்சரிக்கைதான்.
    தானமாக பெறப்படும் சிறுநீரகத்தில் பரவும் தன்மை யுடைய  தொற்றுகள் ஏதேனும் இருக்கிறதா? கண்டுபிடிக்க முடியாத புற்று நோய் தொற்று இருக்கிறதா? என்பதை எல்லாம் தீவிரமாக பரிசோதித்து உறுதி செய்வோம். எந்த பிரச்சி னையும் இல்லை என்பதை டாக்டர்கள் குழுவினர் உறுதி செய்த பிறகே சிறு நீரகத்தை எடுக்கும் வேலை தொடங்கும்.
    சர்க்கரை வியாதி, அதிக உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் சிறுநீரக தானம் செய்ய முடியாது. லேசான ரத்த அழுத்தம் இருந்தால் கொடுக்கலாம்.
    சிறுநீரகம் பெறுவதிலும், பொருத்துவதிலும் வயது வரம்பு பிரச்சினை இருக்காது. சிறியவர்களுக்கு பெரியவர்கள் சிறுநீரகத்தை யும், பெரியவர்களுக்கு சிறியவர்கள் சிறுநீரகத்தையும் பொருத்த முடியும். தாத்தா&பாட்டி சிறுநீரகத்தை பேரன்&பேத்தி களுக்கும் பொருத்த முடியும்.
    மூளைச் சாவு ஏற்பட்ட 90 வயதானவரின் இரண்டு சிறுநீரகத்தையும் எடுத்து இரண்டையும் ஒரு இளைஞருக்கு நானே பொருத்தி இருக்கிறேன். பல ஆண்டுகளாக அவர் நலமுடன்  வாழ்ந்து வருகிறார்.
    சிறுநீரக தானம் செய்வது உறுதியானதும் ஆபரேசனுக்கான ஏற்பாடுகள் தொடங்கும். அதாவது யாருக்கு பொருத்த வேண்டுமோ அவரையும், யாரிடம் இருந்து சிறுநீரகத்தை எடுக்க வேண்டுமோ அவரையும் பக்கத்து பக்கத்து அறுவை சிகிச்சை அரங்குகளில் அனுமதிப்பார்கள்.
    ஒரே நேரத்தில் கிட்னி எடுப்பது, பொருத்துவது ஆகிய இரு வேலைகளும் நடக்கும். 3 மணி நேரத்தில் இந்த சிகிச்சைகள் முடிந்து விடும்.
    தானமாக எடுக்கப்படும் சிறுநீரகம் வெதுவெதுப்புடன் இருக்கும். அதை வெளியே எடுத்து வெப்ப நிலையை குறைத்து அதனுள்ளே இருக்கும் தானம் செய்தவரின் ரத்த அணுக்களை முழுவதுமாக வெளியேற்றி சுத்தம் செய்த பிறகுதான் நோயாளியின் உடலில் பொருத்துவோம்.
    நோயாளியின் உடலில் உள்ள நல்ல ரத்தக்-குழாய், கெட்ட ரத்தக்குழாய் இரண்டையும் புதிய சிறுநீரகத்துடன் பொருத்திய மாத்திரத்தில் சர்...சர்... என்று சிறுநீர் பீறிட்டு அடிக்கும் பாருங்கள்... அதைப் பார்த்ததும் ஆபரேசன் செய்த டாக்டர்களுக்கு பயங்கர சந்தோஷ மாகிவிடும். ஒரு நாளுக்குப் பலமுறை கழிக்கிற அதே சிறுநீர் தான் அது. ஆனால், இப்படி ஆபரேஷனுக்குப் பிறகு அது வரும்போது ஏற்படுகிற சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
    உயிருடன் இருக்கிற உறவினரின் சிறுநீரகம்தான் இப்படி உடனடியாக தனது வேலையைத் துவங்கி விடும். மூளைச்சாவு அடைந்-தவரின் சிறுநீரகம் எனில், அது இயங்க சமயத்தில் சில வாரங்கள்-கூட ஆகிவிடும்.
    ஆபரேசன் முடிந்த-பிறகு, நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு ஐ.சி.யூ. பிரிவில் வைத்திருப்போம். அதன்பிறகு, குறைந்த பட்சம் ஐந்து நாட்களுக்கு, தனி வார்டில் தீவிரக் கண்காணிப்பில் வைத்து நிமிடத்துக்கு நிமிடம் கண்காணிப்போம். இன்-பெக்ஷன் ஏற்படாமல் இருப்-பதற்காக இந்த ஏற்பாடு.
    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்றால் நிறைய பேர் நினைப்பது பழுதடைந்த சிறு-நீரகத்தை எடுத்து விட்டுஅந்த இடத்தில் வேறொரு சிறுநீரகத்தை பொருத்து-வார்கள் என்று.
    அது உண்மையல்ல. பழுதடைந்த சிறுநீரகங்கள் அதே இடங்களில் இருக்க மூன்றாவது இன்னொரு சிறு-நீரகத்தை வேறொரு இடத்தில் பொருத்துவது--தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.
    நமது முதுகுபகுதியில் ஏற்கனவே இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதால் பொதுவாக வயிற்றுப்பகுதியில் வலது புறத்தில்தான் மூன்றாவது சிறுநீரகத்தை பொருத்துவோம்.
    இந்த 3&வது சிறுநீரகமும் பழுதடைந்தாலோ, ஒவ்வாமல் போனாலோ நான்கவதாகவும் ஒரு சிறுநீரகம் பொருத்துவதுண்டு. அதை வயிற்றில் இடதுபுறம் பொருத்துவோம்.
    ரத்த சொந்தங்களிடம் இருந்து சிறுநீரகம் தானமாக கிடைக்காத பட்சத்தில் விபத்து களில் சிக்கி மூளைச்சாவு அடைபவர்களின் உடலில் இருந்து சிறுநீரகத்தை தானமாக பெற்று பொருத்தப்படும்.
    உடல் உறுப்பு தானம் பெறுவது தொடர்பாக அரசில் சட்டம் உள்ளது. அதன்படி அரசு ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்ய வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் இது கிடைக்கும்.
    விற்பதும், வாங்குவதும் குற்றம்
    சரி... ஒரு சிறுநீரகத்தை கொடுத்தால் ஆபத்து இல்லையே விற்கலாமே என்று நினைப்பதும் தவறு. சாமானியர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து சிறுநீரகத்தை வாங்கி விடலாம் என்று நினைப்பதும் தப்பு.
    1990 வரை இந்த மாதிரி தப்பு கணக்கு போட்டு பலர் தப்பித்தார்கள் என்பதும் உண்மை. அதன் பிறகு சட்டம் கொண்டு வரப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. இப்போது தானம் உறவினர்களிடம் இருந்து மட்டுமே பெற முடியும். மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் என்றால் காத்திருந்து தான் வாங்க முடியும். இதையும் மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தால் அது தங்க கடத்தல் மாதிரிதான். சிக்கி கொண்டால் ஜெயில் தண்டனை. ஆஸ்பத்திரி உரிமம் ரத்தாகும். சரியான, ஆரோக்கியமான சிறுநீரகத்தை எடுத்து ஒருவருக்கு பொருத் தினால் 25 முதல் 30 ஆண்டுகள் வரை வயதை பொறுத்து ஆரோக்கியமாக வாழலாம்.
    ஒருமுறை மனநிலை சரியில்லாத ஒரு பையனின் சிறுநீரகத்தை அவன் தாய்க்குப் பொருத்த பரிசோதனைகள் செய்தோம். அதற்கு சட்டப்பூர்வ சிக்கல்கள் எழுந்தன. “ஒருவர் மனப்பூர்வமாகச் சம்மதித்தால் மட்டுமே அவருடைய உடலின் உறுப்பை அகற்ற முடியும். மனநிலை சரியில்லாத குழந்தையிடமிருந்து சிறுநீரகத்தை எடுக்க எவருக்கும் உரிமை இல்லை” என்றொரு கேள்வி எழுந்தது.
    அப்போது தீர்ப்பளித்த நீதிபதி, “இந்த மனநிலை சரியில்லாத குழந்தையை, அவனுடைய தாயைத் தவிர யாரால் சிரத்தை யுடன் பராமரிக்க முடியும்? அந்தத் தாயே அவனைக் கவனிக்க முடியாத அளவுக்கு உடல் நலமில்லாமல் கிடந்தால், சிறுநீரகங்களால் அவனுக்கு என்ன லாபம்? ஒரே சிறுநீரகத்தோடு அவனும் இன்னொரு சிறுநீரகத்தோடு அவன் தாயும் நலமுடன் வாழ்வதே சிறந்தது” என்று தீர்ப்பளித்தார். இன்னும் அந்தத் தாயும் மகனும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.
    சிறுநீரக தானம் தருகிறவர்களின் அன்பும் மனசும் பெரிதாக இருப்பது மாதிரி, ஆபரேஷ னுக்குப் பிறகு ஓரிரு மாதங்களில் அவர்களுடைய சிறுநீரகம் முன்பை விடவும் கிட்டத்தட்ட இரண்டு முதல் ஆறு செ.மீ. வரை பெரிதாகிவிடும். இரண் டின் வேலையை ஏற்றுச் செய்யத் தன்னைத் தானே அது வலுப்படுத்திக்கொள்கிற இயற்கையின் அற்புதம்தான் இது.
    Next Story
    ×