என் மலர்
செய்திகள்

ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகி டிடிவி தினகரன்: முதல்வர் பழனிச்சாமி குற்றச்சாட்டு
திமுகவுடன் சேர்ந்து அதிமுகவை அழிக்க டிடிவி தினகரன் நினைக்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். #EdappadiPalanisamy #dinakaran
மதுரை:
மதுரையில் பாண்டிகோவிலில் இன்று நடைபெற்ற அதிமுக அரசின் சாதனை சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலுக்கான வெற்றிபிரச்சாரத்தினை தொடங்கிவிட்டோம். அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.
கட்சி வலிமைபெற ஒற்றுமை அவசியம். தினகரன், அதிமுகவுக்காக உழைத்தவரா? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம்?, திமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிக்க நினைக்கிறார் டிடிவி தினகரன். ஆட்சியை பிடிக்க நினைக்கும் துரோகிதான் தினகரன். ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவுகளை தூள் தூளாக்கி விட்டோம். கொல்லைபுறமாக சிலபேர் ஆட்சியை பிடிக்க முயல்கிறார்கள். கட்சியை உடைக்க நினைத்தவர்களின் சூழ்ச்சியை முறியடித்து ஒற்றுமையாக நிற்கிறோம்.

காவிரி பிரச்னைக்கு நல்ல தீர்வை அதிமுக அரசு பெற்றுத் தந்திருக்கிறது. அப்போது கேட்டும் கிடைக்காத காவிரி நீர், தற்போது கேட்காமலேயே வந்துகொண்டிருக்கிறது’ எனக் கூறினார். #EdappadiPalanisamy #dinakaran
Next Story






