என் மலர்
செய்திகள்

தமிழகத்தில் சரியான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் சரியான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படவில்லை என்று பொன். ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #DMK #PonRadhakrishnan
நெல்லை:
நெல்லையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிரூபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்தவரை பயங்கரவாதத்தை தமிழக அரசு முழுமையாக வேறறுக்க வேண்டும். இப்போது சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிற்காலத்தில் மோசமாகி விடும். பயங்கரவாதிகளுக்கு அரசே ஆதரவாக செயல்படுவதாக அவர்கள் எண்ணிவிடுவார்கள்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசின் உளவுத்துறை நடவடிக்கை எடுத்ததால் 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதே பயங்கரவாதம் பற்றி நான் கருத்து கூறி உள்ளேன். இதைத்தான் சமீபத்தில் ரஜினி கூறியிருந்தார். தமிழகத்தில் சரியான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #PonRadhakrishnan
Next Story






