search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    8 வழிச்சாலை பற்றி கருத்து கூறினால் கைது செய்வதா? - போலீசுக்கு திருமாவளவன் கண்டனம்
    X

    8 வழிச்சாலை பற்றி கருத்து கூறினால் கைது செய்வதா? - போலீசுக்கு திருமாவளவன் கண்டனம்

    சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை பற்றி கருத்து கூறினாலே கைது செய்வதா? என போலீசாருக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். #GreenWayRoad #Thirumavalavan

    மதுரை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 ஆண்டு கால மோடி அரசின் சாதனை இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பின்மையில் முதலிடம் பிடித்தது தான். கடந்த ஆண்டில் 4-வது இடத்தில் இருந்து தற்போது முதலிடம் பிடித்துள்ளது.

    சிறுமிகள், பழங்குடியினர்,சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

    மதவாத சக்திகளிடம் இருந்து தேசத்தை பாதுகாக்க சென்னையில் செப்டம்பர் முதல்வாரத்தில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ராகுல் காந்தி, ஸ்டாலின் பங்கேற்கின்றனர்.

    8 வழி சாலை பற்றி கருத்து கூறினால் காவல் துறை மூலம் கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

    விதிமுறைகளுக்கு எதிராக கவர்னர் அறிக்கை வெளியிடுகிறார். 7 ஆண்டுகள் சிறை என்ற கவர்னரின் போக்கு கண்டிக்கத்தக்கது.


    இது முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா? காவல்துறை தலைமையாரிடம் உள்ளது என்று தெரியவில்லை.

    கருத்து கூறியவர்களை கைது செய்த காவல் துறை தற்போது செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களை தாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தூத்துக்குடியில் துப்பாக்கிசூட்டில் உயிர் இழந்தவர்களுக்காக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கூட்டணி கட்சிகள் இணைந்து 3-ந் தேதி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துகிறது.

    இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

    ஜூலை 17-ந் தேதி திருவண்ணாமலையிலும், 20-ந் தேதி சேலத்திலும் பசுமை வழிச்சாலையை எதிர்த்து மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #Thirumavalavan

    Next Story
    ×