search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைப்பு
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைப்பு

    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் கமிஷனை அரசு அமைத்துள்ளது. #ThoothukudiFiring #SterliteInquiryCommission
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.


    போராட்டக்காரர்களை போலீசார் துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் காட்சி அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனைப்பார்த்த பலரும் காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து கருத்துக்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். துப்பாக்கி சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiFiring #SterliteInquiryCommission
    Next Story
    ×