என் மலர்

  செய்திகள்

  இன்று தொழிலாளர் தினம் - மே தின பூங்காவில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்
  X

  இன்று தொழிலாளர் தினம் - மே தின பூங்காவில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள மே தின பூங்காவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #MayDay #LabourDay #MayDayStalin
  சென்னை:

  தொழிலாளர்களின் உரிமையை பெற்றுத் தந்த தினமான மே தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொழிற்சங்க அலுவலகங்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மே தின விழா நடைபெறுகிறது. கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

  மே தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு தூணுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் அவர்  பேசினார்.

  அப்போது, தொழிலாளர்களுக்கு தி.மு.க. எப்போதும் பக்கபலமாக இருக்கும் இயக்கம் என்றும், தி.மு.க. ஆட்சியில்தான் தொழிலாளர்  தினத்துக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.  #MayDay #LabourDay #MayDayStalin
  Next Story
  ×