என் மலர்

    செய்திகள்

    சேலத்தில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
    X

    சேலத்தில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் அண்ணா பூங்காவில் விரைவில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு, எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், நலத்திட்ட உதவிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

    விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-

    எம்.ஜி.ஆருக்கு திரைப்படத் துறையில் ஏற்றத்தை பெற்றுத் தந்த மாவட்டம் சேலம். சேலம் அண்ணா பூங்காவில் விரைவில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்.

    குறை சொல்வதை மட்டுமே எதிர்க்கட்சிகள் வேலையாக கொண்டுள்ளன. மக்களுக்கு சேவை செய்வதையே நாங்கள் வேலையாக கொண்டுள்ளோம்.

    சிறந்த கல்வி முறையை உருவாக்க படிப்படியாக அனைத்து பாடத்திட்டங்களையும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோப்புகள் தேங்காமல் உடனுக்குடன் முடிவு காணப்படுகிறது. மத்திய அரசுடன் சுமூக உறவு வைத்திருப்பதால் தான் பல்வேறு திட்டங்கள் தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×