என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சஸ்பெண்டா?: எடப்பாடி-ஓ.பி.எஸ். ஆலோசனை
    X

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் சஸ்பெண்டா?: எடப்பாடி-ஓ.பி.எஸ். ஆலோசனை

    அரசுக்கு எதிராக செயல்படும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

    இதற்காக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாகவும் அவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்திருந்தனர்.



    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவதுடன் தனி அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

    அரசு கொறடா பேச்சுக்கு கட்டுப்படாமல் முதல்-அமைச்சரை பற்றி தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

    இதனால் அரசுக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா? என்பது பற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் அவருடனும் ஆலோசித்து உள்ளனர்.

    எனவே 19 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்களா? இல்லையா? என்பது விரைவில் தெரிய வரும்.

    Next Story
    ×