என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா இருக்கும் போது பேசாத அமைச்சர்கள், தற்போது பேசுகின்றனர்: விஜயகாந்த்
    X

    ஜெயலலிதா இருக்கும் போது பேசாத அமைச்சர்கள், தற்போது பேசுகின்றனர்: விஜயகாந்த்

    ஜெயலலிதா இருக்கும் போது வாய் திறந்து பேசாத அமைச்சர்கள், தற்போது பேசுகின்றனர் என விஜயகாந்த் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்தார்.

    நெடுவாசலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  செய்தியார்களிடம் கூறியதாவது:

    நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அதுகுறித்து எனக்கு கவலையில்லை. இந்தியை கற்றுக்கொள்வது இந்தி திணிப்பு ஆகாது. ஜெயலலிதா இருக்கும் போது வாய் திறந்து பேசாத அமைச்சர்கள், தற்போது பேசுகின்றனர். மக்கள் வேண்டாம் என்று சொல்லும் திட்டத்தை அரசு ஏன் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி  ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.


    தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் திமுக தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×