என் மலர்
செய்திகள்

அரசியலுக்கு வர துடிக்கும் ரஜினிக்கு தமிழில் உயிர்மெய் எழுத்து எத்தனை என்பது தெரியுமா?: சீமான் கேள்வி
தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்து எத்தனை உள்ளது என்பதை ரஜினிகாந்த் வேகமாக சொல்லட்டும். அப்புறம் அரசியலுக்கு வரட்டும் என்று சீமான் பேசினார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் மணல் விலை ஏறி விட்டது. பிற மாநிலங்களில் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. வெளிநாடுகளில் ஒரு லட்ச ரூபாயிக்கு மேல் விற்றகப்படுகிறது. இதனை பற்றி நடிகர் ரஜினிகாந்துக்கு எதுவும் தெரியாது.

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் எத்தனை? என்பதை அவர் சொல்லட்டும். தமிழில் உள்ள உயிர் மெய் எழுத்து எத்தனை உள்ளது என்பதை அவர் வேகமாக சொல்லட்டும். அப்புறம் அரசியலுக்கு வரட்டும்.
பொட்டலம் விற்கும் அனைத்து பொருட்களுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியை மத்திய அரசு விதித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






