என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வாடகை ஒப்பந்தம்- கவனிக்க வேண்டியவை
Byமாலை மலர்22 Sep 2021 3:29 AM GMT (Updated: 22 Sep 2021 3:29 AM GMT)
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நீண்ட காலமாக முரண்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய சில அம்சங்களை இருவரும் பின்பற்றினால் பிரச்சினை வராமல் இருக்கும்.
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நீண்ட காலமாக முரண்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. இருவருக்கும் சட்டப்படியான தெளிவு இல்லாதது இந்த முரண்பாட்டுக்கு முக்கிய காரணம். இதில் கவனிக்க வேண்டிய சில அம்சங்களை இருவரும் பின்பற்றினால் பிரச்சினை வராமல் இருக்கும்.
முதலில் ஒப்பந்த பத்திரம் எழுதிக்கொள்வது அவசியம். ஏனெனில் அதிலேயே பல முரண்பாடுகள் தீர்க்கப்படும். அதாவது வாடகை, பராமரிப்புத்தொகை, மின்கட்டணம், வெள்ளையடிப்பு, முன்பணம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். முரண்பாடு ஏற்படும்போது முன்பணத்தொகையை இருவரும் மாற்றிச் சொல்லக்கூடும். மேலும் வெள்ளையடிப்பது எங்கள் பொறுப்பு இல்லை என வீட்டு உரிமையாளர் மறுக்கக்கூடும். வாடகைதாரர் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என்றால் அதைப் பத்திரத்தில் குறிப்பிட்டால் பிரச்சினை இல்லாமல் போய்விடும்.
வாடகை ஒப்பந்தப்பத்திரம் 20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி வாடகைதாரர் - உரிமையாளர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நிரப்ப வேண்டும். இருவரின் நிரந்தர முகவரியும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தம் 11 மாதத்திற்குத்தான் போடுவார்கள். 11 மாதத்திற்கு ஒருமுறை அதைப் புதுப்பித்துக்கொள்ளலாம். 11 மாத காலத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்பதால், வீட்டு வாடகைப்பத்திரங்கள் 11 மாத கால அளவில் போடப்படுகின்றன.
வீட்டுக்கான முன்பணத்தை பொறுத்தவரை அதற்கு ஒரு தெளிவான வரையறை இல்லை. அது ஒவ்வொரு நகரங்களுக்கும் வித்தியாசப்படுகிறது. சென்னையில் 5 மாத வாடகையை முன்பணமாக வாங்குபவர்களும் உண்டு. 10 மாத வாடகையை வாங்குபவர்களும் உண்டு. வீட்டு வாடகையைப் பார்த்தீர்கள் என்றால் அது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டால் சென்னையில் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளது. வாடகை கொடுக்கும்போது ரசீது பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கான ரசீது எழுதுபொருள் விற்பனை கடைகளில் கிடைக்கின்றன.

Next Story
×