search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கொரோனா மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வழிமுறைகள்
    X
    கொரோனா மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வழிமுறைகள்

    கொரோனா மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வழிமுறைகள்

    கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மனஇறுக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளது. உயர் மருத்துவ சிகிச்சையையும், அறுவை சிகிச்சை முறைகளையும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்முறையில் கொண்டுவந்த சுஸ்ருதர்.

    வராகமிகிரர் போன்ற மருத்துவ ஞானிகளை தந்து உலகத்திற்கே முன்னோடியாக விளங்கும் பாரதத்தின் பண்பாடு. கலாச்சாரம், இந்திய மக்களின் அயராத உழைப்பு, இயற்கையாக அமைந்த நோய் எதிர்ப்பு திறன், சூரியஒளி உள்ளிட்ட இயற்கை சக்திகளை கிரகிக்கும் ஆற்றல், நாம் பின்பற்றும் மூச்சுப்பயிற்சி, யோகமுறைகள் இவையே கொரோனாவை நாம் தைரியத்துடன் எதிர்கொண்டுவருவதற்கான முக்கிய காரணிகள் ஆகும்.

    கொரோனாவிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று மருத்துவ உலகம் நம்பிக்கையுடன் உள்ளது. நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அவ்வப்போது நுண் கிருமி நாசினியை கொண்டு கைகளை தூய்மை செய்துகொள்ளுதல், இவற்றுடன் நம்மிடம் பழங்காலம் முதல் நடைமுறையில் உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி போன்ற இயற்கை வழி மருத்துவ முறைகள் கூறும் நோய்தீர்க்கும் மருத்துவ கருத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வழிகளையும் முழுமையாக கடைபிடிக்க செய்வது, நமது மத்திய, மாநில அரசுகளின் தற்போதைய அவசர, அவசியம் சாத்தியங்களாகும். நோய்களின் பாதிப்பை குறைத்து, நோயை அறவே நீக்குவது என்பதே மருத்துவர்களின் தலையாய சவால் நிறைந்த பணியாகும்.

    விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் பொதுஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில் தற்போதைய உலகில் தனிமனித நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைத்துக் கொள்வதிலும், நோய்எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதிலும், மனவளக்கலை பயிற்சி, யோக பயிற்சிகள் நமக்கும் பெரிதும் நம்பிக்கை அளிக்கின்றன. ஆன்லைன் கவுன்சிலிங் ஒரு மாற்றுமுறை தீர்்வாக அமைந்துள்ளது.

    இந்த தருணத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் மனஇறுக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. உலக மருத்துவ தின நன்னாளில், டாக்டர்கள் தங்களிடையே நேர மேலாண்மை, எளிய உடற்பயிற்சிகள், எளிய தியான முறைகள், சீரான உணவுமுறை, நல்ல குடும்ப உறவுகள், மருத்துவர்-நோயாளி சரியான புரிதல் இவற்றுடன் நம்மை தற்காத்துக்கொண்டு, நோயற்ற சமுதாயத்தை உருவாக்க ஒருமித்த எண்ணத்துடன் உறுதியேற்போம். கொரோனா பாதிப்பி்ல் இருந்து நாம் வெகுவிரைவில் விடுபடுவோம்.
    Next Story
    ×