search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மொபைலில் வங்கி சேவை
    X

    மொபைலில் வங்கி சேவை

    தற்போது பலரும் மொபைலில் வங்கி சேவையைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். உள்ளங்கையில் வங்கிச் சேவை வருவதுதான் இதற்கு காரணம்.
    தற்போது பலரும் மொபைலில் வங்கி சேவையைப் பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். உள்ளங்கையில் வங்கிச் சேவை வருவதுதான் இதற்கு காரணம். அதேநேரம், சரி, மொபைல் பாங்கிங் வசதிக்குக் கட்டணம் உண்டா, இல்லையா? என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுந்து நிற்கிறது.

    உலகத்தில் எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு கட்டணம் உண்டு என்ற விதி, ‘மொபைல் பாங்கிங்’குக்கும் பொருந்தும். ஆனால் இந்தச் சேவையை அளிப்பதற்காக வங்கிகள் எந்தக் கட்டணத்தையும் விதிப்பதில்லை. மாறாக, நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ்.களுக்காக செல்போன் சேவை நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

    நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கான கட்டணம், வழக்கமானதை விட சற்று கூடுதலாக இருக்கும். தவிர, நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு குறுந்தகவலும் இரண்டாகக் கருதப்படும். உங்கள் எஸ்.எம்.எஸ்.சுக்கு வங்கி அனுப்பும் பதில் எஸ்.எம்.எஸ்.சையும் சேர்த்து இப்படிக் கணக்கிடுகிறார்கள். நீங்கள் இணையத்தின் வாயிலாக ‘மொபைல் பாங்கிங்’ வசதியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் செல்போன் நிறுவனம் பின்பற்றும் கட்டண முறைப்படி கட்டணம் செலுத்த வேண்டும்.



    ‘மொபைல் பாங்கிங்’ சேவையில் உங்கள் செல்போன் எண்ணுடன் உங்களது வங்கிக் கணக்கு இணைக்கப்படுவதால், நீங்கள் செல்போன் எண்ணை மாற்றினால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு உடனே தெரிவிக்க வேண்டும். நீங்கள் உங்கள் செல்போனை தொலைத்துவிட்டால் அல்லது திருட்டுக் கொடுத்துவிட்டால் செய்ய வேண்டிய முதல் காரியம், உங்கள் செல்போன் நிறுவனத்துக்குத் தொடர்புகொண்டு ‘டீஆக்டிவேட்’ செய்யக் கோருவது. வங்கிக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்மூலம், உங்கள் கணக்கு தொடர்பான விஷயங்கள், தகவல்களை குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்புவதை அவர்கள் நிறுத்துவார்கள்.

    நீங்கள் உங்கள் மொபைல் ‘பின்’னை (‘எம் பின்’) ரகசியமாகப் பாதுகாக்க வேண்டும். மறந்துவிடாமல் இருக்க வேண்டும். மறந்துவிட்டால், உங்களைப் பற்றிய ரகசியம் குறித்த ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு சரியாக பதிலளிக்கும்போது, நீங்கள் மறுபடி ‘எம் பின்’னை பெறுவீர்கள்.
    Next Story
    ×