search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    படுக்கையறையில் அன்யோன்யம் அதிகரிக்க இந்த தவறுகளை செய்யாதீங்க...
    X
    படுக்கையறையில் அன்யோன்யம் அதிகரிக்க இந்த தவறுகளை செய்யாதீங்க...

    படுக்கையறையில் அன்னியோன்யம் அதிகரிக்க இந்த தவறுகளை செய்யாதீங்க...

    வெளியில் இருந்து பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும் தம்பதியர் படுக்கையறையில் சந்தோஷமாக இருப்பதில்லை. இதற்கு அவர்கள் படுக்கையறையில் செய்யும் தவறுகளே ஆகும்.
    திருமணத்தின் போது இளம் தம்பதியர் இடையே இருக்கும் அன்யோன்யம் நாட்கள் செல்ல செல்ல குறைந்துவிடுகிறது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும் தம்பதியர் படுக்கையறையில் சந்தோஷமாக இருப்பதில்லை. இதற்க்கு அவர்கள் படுக்கையறையில் செய்யும் தவறுகளே ஆகும். அந்த தவறுகள் என்னென்ன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

    1. கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் அன்பு, நெருக்கம் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டுமென்றால் உங்களின் படுக்கையறையில் உங்கள் முன்னோர்களின் படங்கள் மற்றும் கடவுள் படங்களையோ உங்கள் படுக்கையறையில் இருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவை தம்பதியர் இடையே ஏற்படும் காதல் உணர்வுகளை முடக்கி விடும்.

    2. தம்பதிகள் அவர்களின் படுக்கையை அறையின் நடுவில் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஒரு தவறான பழக்கமாகும். படுக்கையானது இரண்டு சுவற்றின் மூலையில் மீது படும்படி மட்டுமே அமைக்க வேண்டும்.

    3. படுக்கையறையில் கண்ணாடி இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை தவிர்க்கமுடியாத காரணங்களால் கண்ணாடி இருந்தாலும் தம்பதிகளின் உருவமானது தூங்கும்போது கண்ணாடியில் விழாத வண்ணம் இருக்க வேண்டும்.

    4. படுக்கையில் தம்பதியர் தூங்கும் தலைப்பகுதியானது எப்பொழுதும் அறையின் தெற்கு திசை பார்த்துதான் இருக்க வேண்டும். இது உங்கள் இணையின் மீதான ஆசையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது. வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக தலைவைத்து தூங்கினால் தம்பதிகளுக்கு இடையே ஒருவர் மீது ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்துவத்துவதுடன் தேவையில்லாத பிரச்சினைகளையும் உருவாக்கும்.

    5. வாஸ்து சாஸ்திரத்தின் படி டிரஸ்ஸிங் டேபிள் ஆனது எப்பொழுதும் படுக்கையறைக்குள் இருக்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் அறைக்குள் தொடர்ந்து எதிர்மறை சக்திகளை உண்டாக்கும். இது தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும்.

    6. தம்பதிகளின் படுக்கை அறையின் நிறமானது வெள்ளை நிறத்தில் இருக்க கூடாது. வெள்ளைக்கு பதில் சிவப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் பெயிண்ட் அடிப்பது கணவன், மனைவிக்குள் நெருக்கம் ஏற்பட வழிவகுக்கும். ஏனெனில் நிறத்திற்கும் மனித மனதிற்கும் நிறைய தொடர்புள்ளது.

    7. நம்முடைய சாஸ்திரங்களின் படி தம்பதிகள் படுக்கும் கட்டில் உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. மரக்கட்டிலை தவிர மற்ற உலோகக் கட்டில்களும் தம்பதிகளுக்குள் சண்டையை ஏற்படுத்த காரணமாகிவிடும்

    8. படுக்கையறையில் செல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். படுக்கையறை என்பது அன்பை பரிமாறிகொள்ளும் இடம் மட்டும் தான். அந்த குறுகிய நேரத்திலும் தம்பதிகள் செல்போனை பயன்படுத்தினால் அவர்களின் மனதில் இருக்கும் அன்பானது வெளியே தெரியாமலே போய் விடும்

    9. உங்கள் அறையை அலங்கரிக்க தேவையில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க் வேண்டும். அழகாக இருக்கிறதே என்பதற்காக தேவையில்லாத பொருட்களை வைக்க கூடாது. இது தேவையில்லாத இடைஞ்சல்களை ஏற்படுத்துவதுடன் உங்களிடையே  இருக்கும் நெருக்கத்தையும் குறைத்து விடும். இதனால் தம்பதிகள் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படும்.

    10. படுக்கையறையில் தொலைக்காட்சி இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவற்றை கடைபிடித்தால் தம்பதிகள் இடையே இருக்கும் அன்னோன்யமானது என்றும் குறையாமல் என்றென்றும் நீடித்து இருக்கும்.
    Next Story
    ×