search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    குழந்தையின்மைக்கான மேற்சிகிச்சைகள்
    X
    குழந்தையின்மைக்கான மேற்சிகிச்சைகள்

    கிராம மக்களுக்கும் குழந்தையின்மைக்கான மேற்சிகிச்சைகள்

    குழந்தை பேறுக்கு முன் ஒரு பெண் தாங்க இயலாத துயரையும், குழந்தை பாக்கியம் பெற்ற பின் அளவில்லாத பெரு மகிழ்ச்சியையும் அடைகிறாள்.
    காரைக்குடி கவிதா கருத்தரிப்பு மையத்தின் டாக்டர் கவிதா ரமேஷ் கூறியதாவது:-

    இன்றைய சமுதாயத்தில் குழந்தையின்மை என்பது ஒரு பாவமாகவும், குறையாகவும், தவறாகவும் பார்க்கப்படுகிறது. குழந்தை பேறுக்கு முன் ஒரு பெண் தாங்க இயலாத துயரையும், குழந்தை பாக்கியம் பெற்ற பின் அளவில்லாத பெரு மகிழ்ச்சியையும் அடைகிறாள். அந்த மகிழ்ச்சியை அளிப்பதில் காரைக்குடி கவிதா கருத்தரிப்பு மையம் பெருமையும், நிறைவும் கொள்கிறது.

    கவிதா கருத்தரிப்பு மையம் காரைக்குடி என்ற சிறிய நகரில் பெரு நகரங்களில் வசிக்காத சிறு, குறு நகரம் மற்றும் கிராம மக்களுக்கும் இந்த ஐவிஎப், ஐசிஎஸ்ஐ போன்ற குழந்தையின்மைக்கான மேற்சிகிச்சை முறைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.

    எங்களது உண்மைத் தன்மை, வெளிப்படைத்தன்மை, துறை சார்ந்த அனுபவ அறிவு மற்றும் நோயாளிகளின் நலனில் சிறப்பு கவனம் போன்ற பண்புகளால் கவிதா கருத்தரிப்பு மையம் பல நாடுகளில் அறியப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக வந்து பலரும் பலன் பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு தம்பதியருக்கும் தலைமை மருத்துவரின் தனிப்பட்ட நேரடி மருத்துவ கவனிப்பால் தேவையற்ற பரிசோதனைகளையும், மருந்துகளையும் தவிர்த்து தேவையான வைத்திய முறைகளை மட்டும் உலக தரத்தில் கொடுப்பதனால் நாங்கள் எங்கள் மருத்துவமனையில் கருத்தரிப்பு சதவீதத்தில் அதிக வெற்றி வாய்ப்பை தொய்வின்றி தொடர்ந்து கொடுப்பதில் பெருமை கொள்கிறோம், கருவுற்ற பின் தொடர் கவனிப்பால் அந்தப் பெண் குழந்தை பிரசவிக்கும் வரை நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் நிற்கிறோம்.

    காரைக்குடி போன்ற சிறிய நகரத்தில் 900-க்கும் மேல் ஐவிஎப் மற்றும் ஐசிஎஸ்ஐ முறையில் குழந்தைகள் நலமாக பிறந்துள்ளன என்பதை தெரிவித்துக் கொள்வதில் எங்கள் மருத்துவமனை பெருமை கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் கவிதா ரமேஷ்
    Next Story
    ×