search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    பெண்கள் உடல் எடை
    X
    பெண்கள் உடல் எடை

    பெண்கள் உடல் எடை குறைப்பில் என்னென்ன மாற்றங்களை கடைபிடிக்கலாம்?

    உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.
    இன்று உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதற்கு இயற்கை மற்றும் செயற்கையான வழிகள் உள்ளன. இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

    உடற்பயிற்சி

    உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைய உடல் உழைப்பு மிக மிக அவசியம். இன்று பலரின் வேலை பல மணி நேரங்கள் உட்கார்ந்து செய்வதாகவே உள்ளது. இதனால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டே உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலமே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள், நச்சுக்கள் வியர்வை வழியே வெளியேறும்.ஆக தினமும் தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறிதளவாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். இதை தொடர்ந்து செய்வதன் மூலமே உடல் எடையை நல்ல வழியில் குறைத்துக் கொள்ளலாம்.

    சாப்பிடும் முறை

    சாப்பிடும்பொழுது டிவி மொபைல் போன் போன்ற வற்றை பார்ப்பது கூடாது. இப்படி சாப்பிடும் பொழுது நாம் கவனம் இல்லாமல் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆக இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு உணவின் மீது கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும்.

    தூக்கம் தேவை

    சரியான அளவு தூக்கம் உடலுக்கு கிடைக்காத பொழுது கூட உடல் எடை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆக ஒரு நாளுக்கு 8 முதல் 10 மணி நேரங்கள் தூங்குவது சிறந்தது. அதே போல மதிய தூக்கத்தைத் தவிர்த்து விடுங்கள். மதியம் சாப்பிட்ட உடனே அதிக நேரம் உறங்கும் பொழுது உடல் எடை உள்ளது.

    எண்ணெய் பண்டங்கள் கூடாது

    எண்ணெயில் வறுத்து எடுத்த பண்டங்கள் சாப்பிடவே கூடாது. சிக்கன் 65 போண்டா பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை கையில் எடுக்காமல் இருப்பது நல்லது.

    இனிப்பு வேண்டாம்

    இனிப்பு பலகாரங்கள் சாக்லேட் போன்றவற்றை தொடவே கூடாது. இவற்றை சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் இந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நடந்தே செல்லுங்கள்

    பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்வதற்கு எல்லாம் வண்டியை பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை அடி அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து போங்கள். அதைப்போல மேல் தலங்களுக்கு செல்லும் விழுது லிப்டை பயன்படுத்தாதீர்கள். படிகளின் வழியே நடந்து செல்லுங்கள்.

    மன அழுத்தம் வேண்டாம்

    வீட்டிலோ அல்லது வெளியிலோ ஏதாவது குறைகள் இருந்தால் அதற்காக சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். இந்த மாதிரியான தேவையில்லாத மன அழுத்தங்களை உடல் எடையை சாத்தியப்படுத்தி விடுகின்றன. மனவளக் கொள்வதும் ஒரு சிறந்த கலை தான். அதை இயன்றவரை கடைப்பிடிக்க பாருங்கள்.

    யோகாசனம்

    உடல் எடையை குறைப்பதற்கு என்றே யோகாவில் குறிப்பிட்ட ஆசனங்கள் உள்ளன. இவற்றை முறையாக கற்றுக் கொண்டு நாள் தவறாமல் செய்வதன் மூலம் வியத்தகு பலனை அடைய முடியும்.
    Next Story
    ×