என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள் கருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து வந்தால் படிப்படியாக பிரச்சனைகள் சரியாகும்.
    ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.

    கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது. இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.

    கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.

    தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிடவேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.

    கருஞ்சீரகத்தில் ‘தைமோகியோனின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.

    தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.

    புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிடலாம்.

    சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடவேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.

    பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கருஞ்சீரகம் பல முக்கியமான சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

    உடல் எடையை குறைப்பது அவ்வளவு பெரிய கஷ்டமான ஒரு விஷயம் அல்ல. எப்படி உணவுகள் உடல் எடையை அதிகரிக்கிறதோ, அதே உணவுகளை வைத்தே உடல் எடையையும் குறைக்கலாம்.
    வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டு வேலையை செய்து கொண்டு, நன்கு சாப்பிடுவார்கள். அதனால், அவர்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே அவ்வாறு உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க, பெண்கள் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் போதுமானது.

    மேலும் அந்த உணவுகளோடு, உடற்பயிற்சியையும் தினமும் தவறாமல் செய்து வந்தால், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம். இந்த உணவுகள் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். இப்போது உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

    பப்பாளி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த பழம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புக்கள் தங்காமல் தடுப்பதோடு, தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கிறது. மேலும் இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள லிமினாய்டு மற்றும் லைகோபைன் என்னம் பொருட்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

    பெண்கள் நிச்சயம் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக பசலைக் கீரை மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், வயிறு நிறைந்திருப்பதோடு, கொழுப்புக்களும் கரைந்துவிடும்.

    பெண்களின் டயட்டில் தானியங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த உணவுகளை சாப்பிட்டால், எளிதில் செரிமானமடைவதோடு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

    கார உணவுகள் உடல் எடையை குறைக்கும். மேலும் காரமான உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படாமலும் தடுக்கும்.

    பெர்ரி பழங்களில் ராஸ்பெர்ரியை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்பு செல்களை கரைப்பதோடு, அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தின் வேகத்தை குறைக்கும். இதனால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். பெர்ரிப் பழங்கள் எப்போதும் ஒரு சிறந்த கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருள். அதுமட்டுமின்றி அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவையும் பெண்கள் உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டியுள்ளது.

    நட்ஸில் பாதாம் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். ஏனெனில் நட்ஸில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. எனவே இதனை உணவு நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட்டால், பசியானது நீண்ட நேரம் எடுக்காது.

    உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதில் ஆரஞ்சு பழங்கள் மிகவும் சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, சிட்ரஸ் ஆசிட் இருப்பதால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.

    எலுமிச்சை மற்றும் தேன் கலந்த ஜூஸ் ஒரு சிறந்த பெண்களுக்கான பானம். எலுமிச்சையும் ஒரு சிட்ரஸ் பழம் என்பதால், அவை பசியை தூண்டாமல், கொழுப்புக்களை கரைத்துவிடும்.

    பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
    அது என்ன ஹெர்னியா?

    குடலிறக்கம் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறது.

    ஆண்களைவிட பெண்களே இதனால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    எவ்வாறு அறிவது?

    பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.

    பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, `சிசேரியன்' எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

    அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது. இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது.

    ஆண்களுக்கு வருமா?

    ஆண்களுக்கும் சில காரணங்களால் குடலிறக்கம் ஏற்படலாம். அவர்களது இடுப்புக்கு கீழ், சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பகுதி வலுவிழக்க நேரிடும்போது அவர்களுக்கு அந்த பாதையில் குடல் இறங்கலாம்.

    இதுதவிர, தொப்புள் பகுதியும் வலுவிழக்கும் வாய்ப்பு கள் இருப்பதால் அவற்றின் வழியாகவும் குடலிறக்கம் ஏற்படலாம். மேலும், ஆண்கள் முதுமையடையும் காலத்தில், `புரோஸ்டேட்' சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகும். சிறுநீர் கழிப்பதில் அது சிரமத்தை ஏற்படுத்த... நாளடைவில் அந்த சிரமமே அவருக்கு குடலிறக்கம் ஏற்பட வழிவகுத்து விடுகிறது.

    வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க்.
    பிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர்.

    வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க்.

    கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க் வரலாம்.

    சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைதான் சருமத்தைப் பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் (Dermis) படிமம் உடைக்கப்படுவதால், ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது. அதேபோல், நீண்ட காலமாக உடல் எடை அதிகம் இருந்து, திடீரென எடை குறையும்போது சருமத்தில் உள்ள டெர்மிஸ் படிமம், எலாஸ்டின், கொலஜன் போன்றவை உடைக்கப்படுவதால் தழும்பாக மாறுகின்றன.

    ஸ்ட்ரெச் மார்க் மறைய...

    கர்ப்பகாலத்தின் எட்டு ஒன்பது மாதங்களில் அதிகமாக ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழலாம். கருவுற்ற சமயத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோகோ பட்டர் கலந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை, ஒருநாளுக்கு நான்கு முறை பூசி வரலாம். இதனால், சருமத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பதால் தழும்பாக மாறும் வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும்.

    மேலும், சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பயன்படுத்துபவர்கள், குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும், அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும்.

    சுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக் கூடாது. ஏனெனில், சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால், அது கருவுற்ற சமயத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதுபோல, ரெட்டினோயிக் ஆசிட் கிரீம் (Retinoic acid cream) என்ற சருமப் பூச்சை, கருவுற்ற சமயத்தில் பயன்படுத்தவே கூடாது.

    குழந்தை பெற்று பால் கொடுக்கும் சமயத்திலும், இந்த கிரீம்களைப் பூசக் கூடாது. திடீரென்று, உடல் எடை குறைத்து, ஸ்ட்ரெச் மார்க் தழும்புகள் வந்தால், அதற்கென சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம். பிரசவமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சின்னச்சின்னப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். சிசேரியன் செய்த பெண்களும், நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்சிகளில் ஈடுபடலாம். சரும மருத்துவரிடம் சென்று தரமான கிரீம்களை பூசிக்கொண்டு பயிற்சியும் செய்துவந்தால் ஸ்ட்ரெச் மார்க் மறையும்.

    கருவுற்றிருக்கும்போது நீர்ச்சத்து, நார்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம்.

    நான்காவது மாதத்தில் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை டாக்டர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம் பூசலாம்.

    ஆக்வா, ஆலுவேரா, கிளசரின், ஓட் மீல் போன்ற பொருட்கள் கலந்த கிரீம்களைத் தேர்ந்தெடுத்துப் பூசலாம்.

    பிரசவத்துக்குப் பிறகு, ஃபிட்னெஸ் பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும்.
    பெண்களின் அந்தரங்க உறுப்பில் புண் ஏற்படுவதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
    அந்தரங்க உறுப்பில் புண் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அந்தரங்க உறுப்பு மிகவும் சென்சிவ்வானது. இப்பகுதியில் ஏதேனும் சிறு பிரச்சனை இருந்தாலும், அதனை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

    இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி பின் பயங்கர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தரங்க உறுப்பில் புண் ஏற்படுவதற்கான காரணங்களை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.  அவை என்னவென்று பார்க்கலாம்.

    சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டுகளில் உள்ள கெமிக்கல்கள் சில நேரங்களில் சருமத்தில் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே அந்தரங்க பகுதியில் அதிகமாக சோப்புக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். ஏன் துணிகளில் உள்ள சாயங்களால் கூட சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டு, அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் ஏற்படலாம்.

    அந்தரங்க பகுதியில் அதிகப்படியான வறட்சி ஏற்பட்டாலும், அப்பகுதி காயமடையும். அந்தரங்க பகுதியில் ஹார்மோன் மாற்றங்கள், பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் இதர மருந்துகளாலும் வறட்சி ஏற்படலாம்.

    அந்தரங்க பகுதியில் காயங்கள் மற்றும் கடுமையான எரிச்சலை உணர்ந்தால், ஈஸ்ட் தொற்றுகள் ஏற்பட்டிருக்கலாம். இம்மாதிரி உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி சோதித்துக் கொள்ளுங்கள்.

    பிறப்புறுப்பு ஹெர்பெஸ், கிளமீடியா மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் போன்ற பாலியல் நோய்களாலும் யோனியில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே அந்தரங்க பகுதியில் காயங்கள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

    ஒரு பெண்ணின் கருப்பைக்கு வெளியே திசு வளர்ச்சி அடைந்திருந்தால், அதன் காரணமாகவும் யோனியில் காயங்களையும், வலியையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
    பெண்களின் மார்பக புற்றுநோயை விரட்டும் அருமருந்தாக ஆரஞ்சு பழம் உள்ளது.
    ஆரஞ்சுப் பழத்தில் எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. விட்டமின், "சி' சத்துகள் நிறைந்து காணப்படும் ஆரஞ்சுப் பழம், பெண்களின் அழகை, "தகதக' வென ஜொலிக்க வைக்கும்.

    தொடர்ந்து ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வரும் பெண்களை, மார்பக புற்றுநோய் ஒரு போதும் நெருங்கவே நெருங்காது. மார்பக புற்றுநோயை விரட்டும் அருமருந்தாக ஆரஞ்சு பழம் உள்ளது. உடலில், அளவுக்கு அதிகமாக காணப்படும் கொழுப்பை குறைத்து விடுகிறது.

    பெண்கள் தங்களுக்கு மார்பக புற்றுநோய் வந்து விட்டாலோ, கொழுப்பின் அளவு அதிகரித்து விட்டாலோ, உடனே டாக்டரை தேடி ஓடுகின்றனர். தினமும், சில ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வந்தாலே, மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம்.
    மற்ற பழங்களை விட, ஆரஞ்சுப் பழத்தில் ஏராளமான சத்துகள் உள்ளன. இதில் உள்ள சிட்ரிக் ஆசிட், உமிழ் நீரை தூண்டச் செய்து, பசியை தூண்டுகிறது.

    பொட்டாசியம் சத்து, ரத்தத்தை சுத்திக்கரிக்கிறது. விட்டமின், "சி' சத்து, உடம்பில் உள்ள காயங்களை குணப்படுத்துகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து, உடலுக்கு ஆரோக்கியத்தையும், பலத்தையும் அளிக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை கூட்டுவதால், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, உடலுக்கு உற்சாகத்தை தருகிறது.

    முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் 99% குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவமாக மாற்றிவிடலாம்.
    இந்தியாவில் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை 24% ஆக இருக்கிறது. சிசேரியன் மூலம் பிள்ளை பெறும் நிலைமையைத் தவிர்க்க வேண்டும்.

    இதற்கு காரணம் பெண்கள் வலியில்லாமல் குழந்தை பெறவும், குழந்தையின் ஜாதகம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் சிசேரியன் செய்து கொள்ளவும் விரும்புகிறார்கள் என்றும், குறிப்பாக இத்தகைய விருப்பம் உழைக்கும் மகளிரிடம் அதிகமாக இருக்கிறது என்றும் மருத்துவ உலகம் கூறுகிறது. அண்மையில் இந்திய குடும்ப நலத்திட்ட சங்கம் நடத்திய ஆய்வில் 60% பெண்கள் சிசேரியன் மூலம் குழந்தை பெறுவதையே விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    ஆனால், மருத்துவ உலகுக்கு வெளியே இருப்போர் சொல்வது இதற்கு நேர் எதிரான ஒன்று. குழந்தை மிகவும் பெரிதாக இருப்பதால் சுகப்பிரசவம் மிகமிக அரிது. வலி அதிகமாக இருக்கும். சிசேரியன் மட்டுமே பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் சொன்னதால் ஒப்புக்கொண்டோம் என்பதாகவும், குழந்தை தலை புரண்டு கிடக்கிறது என்றும், பனிக்குடம் உடைந்துவிட்டதால் இனி சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லை என்றும் கூறித்தான் சிசேரியனுக்கு சம்மதிக்க வைத்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.

    உண்மைகளும் பின்னணிகளும் எதுவாக இருந்தபோதிலும் சிசேரியன் தேவைப்படும் நேர்வுகள் மிகவும் குறைவு என்பதும் இவற்றை முறையான பயிற்சி மற்றும் மருத்துவ கண்காணிப்பால் தவிர்த்துவிட முடியும் என்பதுமே நிஜம். இது ஒரு தாயின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு மிகமிக இன்றியமையாதது.

    உழைக்கும் மகளிர் சிசேரியன் செய்துகொள்ளவே விரும்புகிறார்கள் என்கின்ற ஆய்வு முடிவு நம்பும்படியாக இல்லை. சிசேரியன் செய்துகொண்டால், அந்தத் தாய் எழுந்து நடமாட ஒரு வாரம் ஆகும். அவர் அன்றாடப் பணிகளை தானே செய்வதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். இவ்வளவு சிரமங்களை ஒரு கர்ப்பிணி விரும்பி ஏற்கிறார் என்று சொல்லப்படுவது நம்பும்படியாக இல்லை.

    மேலைநாடுகளில், முடிந்தவரை இயற்கையான பிரசவங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் என்பது தாய் சேய் நல மருத்துவருக்கு இழிவு என்பதாகவும், கர்ப்ப நேரத்தில் மருத்துவர் கர்ப்பிணித் தாயைச் சரியாக வழிகாட்டவில்லை என்பதாகவும் அங்கே கருதப்படுகிறது. இந்தியாவின் நிலைமை நேர் எதிராக மாறிக்கொண்டு வருகிறது. இது ஆரோக்கியமான வருங்கால சமுதாயத்திற்கு வழிகோலாது.

    முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தொடர் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் 99% குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவமாக மாற்றிவிடலாம். முந்தைய காலத்தில் மட்டுமல்ல, இன்றைய காலத்திலும் இயற்கையான மக்கட்பேறு சாத்தியமே! அது வலியுறுத்தப்பட வேண்டும்.
    கருவில் உள்ள குழந்தையால் பார்க்க முடியாது. கேட்க முடியாது. எந்த ஒரு மொழியையும் விளங்கிக்கொள்ளவும் முடியாது. ஆனால் அதற்கு, கருவில் இருக்கும்போதே தன்னைச் சுமந்துகொண்டிருக்கும் அம்மாவின் குரல் மட்டும் தெரியும்.
    தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு முகவரி கிடையாது. யாருடைய முகவரியும் அதற்கு தெரியவும் செய்யாது. ஆயினும், அதற்குத் தெரிந்த ஒரே முகவரி தாய்தான் என்றும், தாயின் குரல் வாயிலாக அது தனக்கு என்று ஒரு பந்தத்தைக் கருவிலேயே உருவாக்கிக்கொள்கிறது என்றும் புதிய மருத்துவ ஆய்வு ஒன்று சோதனை ரீதியாக கண்டுபிடித்துள்ளது.

    கருவில் உள்ள குழந்தையால் பார்க்க முடியாது. கேட்க முடியாது. எந்த ஒரு மொழியையும் விளங்கிக்கொள்ளவும் முடியாது. ஆனால் அதற்கு, கருவில் இருக்கும்போதே தன்னைச் சுமந்துகொண்டிருக்கும் அம்மாவின் குரல் மட்டும் தெரியும். மற்ற மனிதர்களின் குரலில் இருந்து தனியாய் பிரித்து தனது அம்மாவின் குரலை மட்டும் அதனால் விளங்கிக்கொள்ள முடியும்.

    ‘குரல் முகவரி’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த மருத்துவ ஆய்வறிக்கை ஆச்சரியமூட்டுகிறது.

    ஆய்வின் போக்கு :

    குழந்தையின் இதயத் துடிப்பின் கால அளவு முக்கியமாய் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    கருவைச் சுமக்கும் தாய் பேசுகிறாள். அப்போது குழந்தையின் இதயத்துடிப்பின் அளவு மளமளவென்று அதிகரிக்கிறது. அதாவது படபடப்பு கூடுகிறது. ஆறு மாத கருக் குழந்தைக்கு இந்த அனுபவம் ஆரம்பமாகிறது. இதற்கு முந்தைய இளைய சிசுவுக்கு இந்த அனுபவம் இருக்காது. ஆறு மாதத்தில் இருந்துதான் சிசு தன்னுடைய அம்மாவின் குரலைக் கிரகிக்க ஆரம்பிக்கிறது.

    சிசுவால் தாயின் குரல் அடையாளம் காணப்படுகிறது. கருவின் சிசுவுக்கு வெளியுலகத்தில் இருந்து முதன் முதலில் அறிமுகமாவது தாயின் குரல்தான். ஒரு சிறந்த கிரியா ஊக்கியாய் இதுவே அமைகிறது.

    இக்காரணத்தால்தான், மனிதனுக்கு சோகமும் அழுகையும் ஏற்படும்போது அம்மாவின் அரவணைப்பு பெரிய பாதுகாப்பாய் அமைகிறது என்கிறது இந்த ஆய்வு. கருவிலேயே ஒரே ஒரு பாதுகாப்பாய் அமைவது அம்மாவின் குரல்தான்.

    அது சரி, அம்மாவின் குரல்தானே ஊக்கமருந்தாய் ஆகிறது? பிறகு எப்படி அம்மாவின் ஸ்பரிசம் ஒரு தெய்வீக மருந்தாய் அமைகிறது என்று கேட்கலாம். அதற்கும் சரியான பதில் கிடைத்துள்ளது.

    குரல் அதிர்வுகளின் அரவணைப்பு :

    மொழி தெரியாத சிசு, அம்மாவின் குரலை இனம் பிரித்து அறிந்து குதூகலம் அடைவது எப்படி? மனித மொழிகள் எதற்கும் இன்னமும் அறிமுகம் ஆகாத ஒரு கருக்குழந்தைக்கு இது எப்படிச் சாத்தியம் ஆகிறது?

    எல்லாம் அதிர்வுகளின் விளைவுதான். அம்மாவாகப் போகிற பெண்மணி பேசும்போது, ஒலி அலைகள் எழுகின்றன. அதற்கு ஏற்றாற்போல அவள் உடம்பில் அசைவுகள் ஏற்படுகின்றன. இவை இரண்டும் அதிர்வலைகளாக மாறி, அவளது உடம்பின் வழியாக கருவைச் சென்று அடைகின்றன.

    ஒலி அலைகள் மற்றும் அங்க அசைவுகள் ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு மட்டுமே, சிசு அடையாளம் கண்டுகொள்ளும் முதல் விஷயம் ஆகிறது. அதன் ஆத்மார்த்தமான, அந்தரங்கமான, அழிக்க முடியாத முதல் முகவரி ஆகிறது இது.

    இப்படித்தான் சிசுவுக்கு தாயின் குரல் அடையாளமாகிறது, அதற்கு பேச்சும் தெரியாது, மொழியும் தெரியாது, ஆனால் தன் அம்மாவின் அதிர்வலைகளை மட்டும் உணர்ந்துகொள்கிறது.

    வெளி மனிதர்கள், குறிப்பாக அன்னியப் பெண்கள் யார் பேசினாலும், அவர்களின் அங்க அசைவுகளின் அதிர்வுகள் சிசுவைச் சென்றடைய வாய்ப்புக் கிடையாது. தவிர, கைரேகைகளைப் போலவே குரலுக்கும் தளித் தன்மை உண்டு. அதன் லயம், அலைவரிசை, ஓசை இதெல்லாம் ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் ஒன்று போல அமைவதே கிடையாது.

    எனவே, அம்மாவின் குரல்தான் அதன் முதல் வெளி முகவரி ஆகிறது.

    ஆய்வு மாதிரிகள் :

    இந்தப் புதிய ஆய்வில், 150 சிசுக்கள் சோதிக்கப்பட்டு உள்ளன. இவற்றிடம் ஒரு கதை இரண்டு நிமிடங்கள் வாசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிசுவிடமும் பல பெண்கள் இதை வாசித்துள்ளனர். அப்போது கரு சிசுவின் இதயத் துடிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அப்போது, அனைத்துப் பெண்களின் குரல்களில் இருந்தும் தனது அம்மாவின் குரலை மட்டும் சிசுவால் பிரித்தறிந்து கொள்ள முடிகிறது என்ற உறுதியான கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    சிசுவின் அம்மா கதை படிக்கும்போது மட்டும், அந்தக் குறிப்பிட்ட சிசுவின் இதயத் துடிப்பு, இதய சமிக்ஞைகளின் வலிமை மற்றும் அதை ஒட்டிய மற்ற அறிகுறிகள் அனைத்தும், சிசுவால் தனித்துவமாய் பிரித்து அறியப்பட்டுள்ளன.

    தனது அம்மாவின் குரல் ஒலிக்க ஆரம்பித்ததும், கதை கேட்ட வீர அபிமன்யுவைப் போல, சிசுவுக்குள் ஒரு குதூகலமும், பரபரப்பும், நம்பிக்கையும், அரவணைப்பு உணர்வும் துளிர்த்துள்ளன.

    பிற உயிரினங்களில்? :

    தற்போது கிடைத்துள்ள புதிய முடிவுகளை உறுதிப் படுத்திக்கொள்ள, குரங்குகளிலும் இதே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் கர்ப்பத்தில் இருந்த குட்டிகளும், தமது தாயின் குரலைக் கேட்டவுடன் உற்சாகம் கொண்டுள்ளன. குரங்கு சிசுக்களின் இதயத் துடிப்பிலும், தமது தாயின் குரல் அலைகள் கிடைத்தபோது நல்ல தாக்கத்தைக் காண முடிந்திருக்கிறது.

    ஆக, மொழி, உச்சரிப்பு, சமுதாயத் தாக்கம் போன்ற அனைத்தையும் கடந்து, பிள்ளைக்கும் அம்மாவுக்கும் இடையே ஓர் இறுக்கமான பிணைப்பு கருவிலேயே முடிவாகி விடுகிறது என்பதை, மிக நுணுக்கமாய் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு விளக்கிவிட்டது என்கிறார்கள், அமெரிக்காவின் இன்ஸ்லேயும், பிரான்சின் சேரியரும்.

    இப்பிணைப்புக்கு எல்லையே இல்லை என்பது, குரங்கில் இவர்கள் நடத்திய ஆய்வில் வெளிவந்திருக்கும் குறிப்பிடத்தக்க அம்சம். ஒரு சில குரல்களுக்கு மத்தியில் தன் அம்மாவின் குரலை இனம் பிரித்து அறியும் பிரச்சினைதான் மனிதக் குழந்தைக்கு இருக்கும்.

    ஆனால் குரங்குக் கூட்டமோ பெரிது. அதன் மத்தியில், தனது தாயின் குரலை மட்டும் அதன் சிசு படக்கென்று கண்டுபிடித்து விடுகிறது என்றால், இது ஓர் அபூர்வ பந்தம்தானே?

    தவிர, இந்தத் திறன், சிசு பிறந்தபிறகும் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் வரை நீள்கிறது என்கிறது ஆய்வு. குழந்தை தனது மிகச் சிறிய வயதிலும் அம்மா முகம் பார்த்துச் சிரிக்கிறது என்றால் அதற்கு இதே திறமைதான் காரணம் என்பதும் ஒரு புத்தம்புது அறிதல்தான்.

    வியக்க வைத்த சாதனை :

    இத்தனை நாட்களாக துல்லியமாக நிரூபணம் ஆகாமல், தற்போது நவீன உபகரணங்களின் உதவியோடு மருத்துவம் கண்டுபிடித்துள்ள இந்த அபூர்வ உறவை, புராணக்கதைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே புட்டுப் புட்டு வைத்திருப்பதை உணரும்போது வியப்பு அதிகமாகிறது.

    சிசுவுக்குள் உருவாகும் உணர்வுப்பூர்வமான பதிவுகளுக்கும், சமுதாயத்தில் அதன் பங்களிப்புகளுக்கும், அதற்குள் பதியும் அம்மாவின் குரல் அலைகள்தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இக்காரணத்தால்தான், கருவைச் சுமக்கும் தாய் கடுமையாகவும், தீவிரமாகவும், கீழான பேச்சுகளுடனும், தரமற்ற உணர்வுகளுடனும் நடந்துகொள்ளக் கூடாது என்று பெரியோர்கள் கண்டிப்பாய் வலியுறுத்துகிறார்கள்.

    ‘தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை’ என்பது எவ்வளவு பொருத்தமான வாசகம்!
    திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகும், தாம்பத்தியத்தில் சிறந்து செயல்பட சில நடுவயது தம்பதிகள் கூறும் ஐடியாக்கள் பற்றி பார்க்கலாம்...
    திருமணமான புதிதில் அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் வாடிக்கை இருக்கும். போக, போக இது குறைந்துவிடும். சிலருக்கு உறவில் ஈடுபடுவதில் சலிப்பு உண்டாகும். இதனால், பெரிதாக ஈர்ப்பு இல்லாமல் இருப்பார்கள். இதை சரிசெய்ய வேண்டும் என்றால் உடலுறவில் வெறுமென எப்போதாவது தோணும் போது ஈடுபடாமல், அதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி, பிறகு ஈடுபட வேண்டும்.

    திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகும், தாம்பத்தியத்தில் சிறந்து செயல்பட சில நடுவயது தம்பதிகள் கூறும் ஐடியாக்கள் பற்றி பார்க்கலாம்...

    காலண்டர்-ல் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த நாளில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்பதை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்வதால். நாளுக்கு நாள் மனதில் ஓர் ஆசை மற்றும் வேட்கை அதிகரிக்கும். இதனால், நீங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்த அதே ஈர்ப்பும், இணைப்பும் உண்டாகும்.

    ஏதோ செயல்பட வேண்டும் என்று இல்லாமல். அதற்கான சூழல் ஏற்படும் போது உறவில் ஈடுபடுங்கள். இது தான் உணர்ச்சி அளவில் அதிகமாக இன்பத்தை எட்ட உதவும். மேலும், பழைய நினைவுகளை அதிகமாக பேசிய பிறகு உறவில் ஈடுபடுவதால் தாம்பத்திய உறவில் உச்சம் அடைய முடியும் என சில தம்பதிகள் கூறுகின்றனர்.

    பருவ வயதுக்கு செல்லுங்கள். ஆம், உங்களுக்கு வயதாகிவிட்டது என்ற நினைப்பை மனதில் இருந்து அகற்றிவிட்டு, நீங்கள் இன்றும் இளம் வயது நபர் தான் என்ற நினைப்புடன் உறவில் ஈடுபடுவது உறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது என தம்பதிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

    மனதளவில் தயாராகுங்கள். உடல் மட்டும் தயாராவது போதாது. கணவன், மனைவி இருவரும் மனதளவில் தயாரான பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடுவது தான் நடுவயதில் உறவில் ஈடுபடும் போது அதிகளவு இன்பத்தை உணர உதவும்.

    மறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒருவயதுக்கு மேல் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் குறைய துவங்கும். எனவே, கணவன், மனைவி யாராக இருப்பினும், ஒருவர் மறுக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இருவரும் இனைந்து செயல்படுவது தான் சிறந்தது.

    ஒருவர் மற்றொருவருக்கு பிடித்த விஷயங்களை செய்து, அதன் பிறகு உறவில் ஈடுபட தயாராகலாம். உதாரணமாக அவருக்கு பிடித்த உடை அல்லது உணவு அல்லது இடங்களுக்கு அழைத்து சென்ற வந்த பிறகு உறவில் ஈடுபடுவது உடல் அளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் அதிகமாக இன்பத்தை அடைய உதவும். இதனால் தாம்பத்திய உறவு சிறக்கும்.

    ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள். உங்கள் மனைவி உங்களிடம் கேட்கும் விஷயங்களை செய்துக் கொடுத்த பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது. இருவர் மத்தியிலும் ஓர் நிறைவு உண்டாகும். இது, உறவு சிறக்க உதவும்.

    எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். இளம் வயதில் ஈடுபட்ட திறனுடன் கணவன், மனைவி இருவரும் நடுவயதிலும் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது. எனவே, உங்களது எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்பு குறையும் போது, மனநிறைவு அதிகரிக்கும்.

    வெறுமென உடல் ரீதியான இணைப்பில் மட்டும் ஈடுபடாமல் கொஞ்சம் கொஞ்சி பேசி தாம்பத்திய உறவில் ஈடுபடுவது. தாம்பத்திய உறவில் உங்கள் இருவருக்குள் அன்யோன்யத்தை அதிகரிக்க செய்யும்.
    குறைபாட்டுக்கு ஏற்ற சிகிச்சை முறையை மேற்கொண்டால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
    * குழந்தைப் பேறை உருவாக்க பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் வருமுன் காப்பதே நல்லது.

    * பெண்கள் மாதவிலக்கு கோளாறுகள், பரம்பரை காரணங்கள் இருப்பின் முக்கூட்டியே பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ளலாம். மது, போதைப் பழக்கத்தை ஆண்கள் கைவிட வேண்டும்.

    * பாலியல் ரீதியான குறைபாடுகளை மறைக்காமல் முன்கூட்டியே சிகிச்சை செய்து கொள்வது அவசியம். ஆண், பெண் இருவருமே.
    தாமதமான திருமணம் மற்றும் 35 வயது வரை குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    * சத்தான உணவு, உடற்பயிற்சி, குறித்த காலத்தில் குழந்தை பெறுவது மற்றும் ஆணும் பெண்ணும் மகிழ்வான சூழலில் அன்பை பகிர்ந்து கொள்வது குழந்தையின்மைப் பிரச்சனைக்கான வாய்ப்புகளை குறைக்கும்.

    * ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
    அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.

    * அமுக்காரா, நெருஞ்சில், கோரைக் கிழங்கு தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டு, இடுப்பு, தொடை வலி குணமாகும். அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.

    * ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தைபேறு உண்டாகும். ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.

    * இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.
    முத்தம் என்ற நான்கொழுத்து தம்பதிகளுக்குள் ஏற்படும் ஆயிரம் சண்டைகளை தீர்க்க வல்லது. முத்தத்திற்கு உள்ள சக்தி வேறு எதற்கும் இல்லை.
    முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோசமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள்.

    அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள். முத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை பார்க்கலாம்.

    அலையடிக்கும் மனதில் அமைதியைத் தருவது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், என்டோர்ஃபின், டோபோமைனின், போன்ற ரசாயனங்கள் சுரக்கிறதாம். இதனால் முத்தம் கொடுப்பவர் மீது காதலும் அன்பும் அதிகரிக்குமாம்.

    வீட்டில் சின்னதாய் சண்டை என்றால் முகத்தை திருப்பிக் கொண்டு போவது சண்டையை அதிகமாக்கும். அதேசமயம் எதிர்பாரத நேரத்தில் நச் என்று ஒரு முத்தம் கொடுங்களேன். சண்டை போட்டவர் கூட சமாதானமாகப் போய்விடுவார்.

    முன் விளையாட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது முத்தம். ஆண்கள் உறவுக்கு முன்பாக அதிகமாய் முத்தமிடுகின்றனர். அதேசமயம் உறவு முடிந்து நன்றி கூறும் விதமாக ஆண்களை முத்தமழையால் நனைக்கின்றனர் பெண்கள்.

    முத்தம் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம். ஆழமாய் அழுத்தமாய் கொடுக்கும் முத்தம் மூலம் 23 கலோரிகள் காணாமல் போகும் என்கின்றனர் நிபுணர்கள்.

    அதுக்கெல்லாம் இவன் சரிப்பட்டு வருவானா? இல்லையா? என்பதை ஆண்கள் கொடுக்கும் முத்தம் மூலம் உணர்ந்து கொள்வார்களாம் பெண்கள். அதேபோல முதல் முதலாக கொடுத்த அல்லது பெற்றுக் கொண்ட முத்தத்தை அதிகமாய் நினைவில் வைத்திருப்பதும் பெண்கள்தானாம்.
    கணவரும், மனைவியும் அவர்களின் உள்மனதினுடைய பயங்களையும், உணர்வுகளையும் அடிக்கடி அவர்களுடனே வைத்துக் கொள்வார்கள்.
    பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வதைப் பற்றியோ, அதைப்பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதைப் பற்றியோ வெட்கமாய்க் கருதுவார்கள். பெண்கள் அவர்களின் மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் கேள்வி கேட்பதற்குத் தயங்குவார்கள்.

    ஒவ்வொரு கணவரும், மனைவியும் அவர்களின் உள்மனதினுடைய பயங்களையும், உணர்வுகளையும் அடிக்கடி அவர்களுடனே வைத்துக் கொள்வார்கள். முக்கியமாக அது முதல் குழந்தையாய் இருந்தால், உங்கள் கர்ப்ப காலம் ஒரு மாறுபட்ட, மனநிலை ஊசலாடும் காலமாயிருக்கும்.

    இது பெண்களுக்கும், அவர்கள் கணவருக்கும் பொருந்தும். தாய்மார்கள் சோர்வடைதல், உற்சாகமடைதல், ஆவலோடிருத்தல், தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல், பயந்து இருத்தல், தாய்மை உணர்வோடும் அழகாகவும் இருத்தல் போன்ற எண்ணங்களோடு இருப்பர்.

    கணவன்மார்கள் ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் போகிறோம் என்ற பெருமையோடும், புதிய பொருளாதாரப் பொறுப்புகளைப் பற்றிய கவலையோடும், குழந்தை வளர்ச்சியைப் பற்றிய புதிய சிந்தனைகளோடும் இருப்பர்.

    இத்தகைய உணர்ச்சி மாற்றங்கள் ஒருவரின் மீது ஒருவருக்கு அவரவரின் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதோடு அதேபோல செக்ஸ் விஷயத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

    இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதோ அல்லது அதைப்பற்றி எவ்வளவு சொற்பமாகச் சிந்திக்கிறீர்கள் என்பதோ அல்லாமல் நீங்கள் எப்படி ஒருவரோடு ஒருவர் அந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதாகும். இவ்வழியில் நீங்கள் செக்ஸ் உறவுகளுக்கான தேவையான மாறுதல்களையும், அமைப்புகளையும் செய்துகொண்டால், இருவரும் அவ்வுறவைத் தொடர்ந்து அனுபவிக்கலாம்.
    ×