என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்பமாக இருக்கும் போது உடல் வறட்சி அடைந்தால் பிரசவமானது சிரமமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.




    dehydration during pregnancy

    கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்தானது அதிகம் இருந்து, பிரசவமானது எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் அந்த பிரசவமானது சிரமமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒரு சில மாற்றங்களும் தெரியும் என்றும் சொல்கின்றனர்.

    மேலும் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் ஒரு டம்ளர் பழ ஜூஸ் ஆவது குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது, கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் அனைத்துமே கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும். மேலும் சில காரணங்களாலும் சக்தியானது வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பிரசவத்தின் போது உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, உடலில் இருக்க வேண்டிய நீர்மத்தன்மையுள்ள பொருளை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாமல் போய்விடும். மேலும் கருப்பையில் இருக்கும் ஆம்னியான் நீர் குறைவாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தையானது கருப்பையில் இருக்க முடியாமல், விரைவில் வெளியே வந்துவிடும். இந்த நிலையிலேயே குறைபிரசவம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கு கை, கால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

    சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது, பிரசவத்தின் போது வெளியேறாது உடலிலேயே தங்கிவிடும். இதற்கு காரணம் நீர்ச்சத்து உடலில் இல்லாததே. ஆகவே உடலில் உள்ள வெப்பத்தை சரியாக வைக்க அதிகமாக தண்ணீரானது குடிக்க வேண்டும். மேலும் அவ்வாறு வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வருவது போல் இருக்கும், அப்போது அந்த காய்ச்சலானது குழந்தைக்கும் வரும். இந்த நிலை முடிவில் குழந்தையின் மூளையை பாதித்து மூளைக்குறைபாட்டை ஏற்படுத்தும்.

    உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் சிறுநீரகத்தில் பிரச்சனையை உண்டுபண்ணும். அதுமட்டுமல்லாமல் தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துதை விட குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் பாதிக்கும். மேலும் தாயின் உடலில் இரத்தக் குறைபாட்டை ஏற்படுத்தும்.

    சொல்லப்போனால், தாய், சேய் இருவருக்குமே மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். உடலை சரியாக முறையாக பராமரித்து, பாதுகாத்து வந்தால் தாய் சேய் ஆகிய இரு உயிருமே நலமோடு ஆரோக்கியமாக இருக்கலாம். எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க!!! குழந்தையை ஆரோக்கியமா பெற்றெடுங்க!!!
    கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் உருவாக பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
    சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாமல் அச்சு அசலாக ஒரேமாதிரி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை யூனியோவலர்ட் ட்வீன்ஸ் என்று அழைக்கிறார்கள். பெலோப்பியன் குழாயில் இருக்கும் கருமுட்டையோடு ஆணின் உயிரணு சேர்ந்து கருவானவுடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.

    ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டைக் குழந்தைகள் என்றாலும், நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்தக் கரு சில சமயம் இரண்டாக உடையும்போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்‘ என்கிறார்கள். குழந்தைகள் எந்த அளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த இருவருக்கும் ஒரே இதயம், இரண்டு கிட்னி, இரண்டே கால்கள் என்று அமைகின்றன.

    இன்னொரு வகையான இரட்டைப் பிறவியும் இருக்கிறது. இதில் ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் கூட பிறக்கும். ஒன்று சிவப்பாகவும் மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்‘ என்று அழைக்கிறார்கள். இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களைவிட, இருவருக்கும் சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.

    இந்த வகை இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கு காரணம் பெண்ணின் சினைப் பையில் பொதுவாக ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவை ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும்.

    அதைவிடுத்து கர்ப்பிணிப் பெண்கள் இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் கேட்டால் எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தில் வீரியம் ஒரே சமயத்தில் ஏழு முட்டைகளைக்கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.
    வயதானால் தம்பதியருக்கு தாம்பத்தியத்தில் இன்பம் குறையுமா இல்லையா என்பதற்கான விடையை கீழே பார்க்கலாம்.
    30 வயதில் செக்ஸில் இருக்கும் வேகம் 50 வயதிலும் வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். வயதானால் செக்ஸில் வேகம் குறையுமே தவிர, திறன் குறையாது. இருபது வயதில் கவர்ச்சி உடையுடன் ஒரு பெண்ணைப் பார்த்தாலே விறைப்புத் தன்மையை அடைந்துவிடும்.
     
    30-35 வயதில் பெண் தொட்டு தூண்டினால்தான் விறைப்புத் தன்மை ஏற்படும். 50 வயதுக்கு மேல் தொடுதலுக்கு மேலும் சில சமாசாரங்கள் தேவைப்படும். 50 வயதுக்கு மேல் தோலில் சுருக்கங்கள் உண்டாவதால் விறைப்புத்தன்மை பெரிய அளவில் இருக்காது. ஆனால், இது கலவிக்கு தடை இல்லை. செக்ஸை தூண்டும் ஹார்மோன்களின் அளவு குறையும்.
     
    உற்பத்தியாகும் விந்தின் அளவு குறைவாக இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது செக்ஸை தூண்டிவிடும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்று விடும். கலவியின் போது வலியும் எரிச்சலும் ஏற்படும். லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம்.
     
    புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது. போர் அடிக்கத் தொடங்கும். இதைப் போக்க இணையுடன் இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு கூடச் செல்லலாம். இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறும். படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், மனதுக்குப் பிடித்த நிறமுள்ள படுக்கை விரிப்புகள் அமைப்பது, இனிமையான இசை கேட்பது என மாற்றிக்கொண்டால் நல்ல கலவியை அந்தச் சூழலே தூண்டும்.
     
    30 வயதுக்கு மேல் ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது அவசியம். உடலுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை கொடுக்கவேண்டும். அவ்வப்போது செக்ஸிலும் ஈடுபடுதல் வேண்டும். வயதானாலும் மனதளவில் இளமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே செக்ஸை வேண்டும் அளவுக்கு அனுபவித்து விடுவது நல்லது. காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.
    கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் மற்றும் டின் வகையிலான பொருட்களால் அடைக்கப்பட்ட உணவு / பானம் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.
    கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களில் சமைத்து உண்பது, வாசனை திரவியம் பயன்படுத்துவது, பூச்சிக்கொல்லி அடித்த உணவுகள் சாப்பிடுவது என அனைத்தும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிப்பவை ஆகும்.

    நாம் இன்று உயர்ந்த தொழில்நுட்பம் என்ற பெயரில் பயன்படுத்தி வரும் பல பொருட்கள் நமக்கே தெரியாமல் நமது உடலுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இது நாம் தினமும் பயன்படுத்தும் டூத்பேஸ்ட்டில் துவங்கி, ஆண்டி-பாக்டீரியா சோப்பு, பிளாஸ்டிக் பொருட்கள், வாசனை திரவியம் என நீள்கிறது.

    சாதாரண மக்களை விட கர்ப்பிணி பெண்கள் மத்தியில் தான் அதிக தாக்கங்களை உண்டாக்குகிறது, குறிப்பாக கருவில் வளரும் சிசுவிற்கு. கர்ப்பிணி பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களில் சமைத்து உண்பது, வாசனை திரவியம் பயன்படுத்துவது, பூச்சிக்கொல்லி அடித்த உணவுகள் சாப்பிடுவது என அனைத்தும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிப்பவை ஆகும்.

    ஃப்தலெட்ஸ் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் கலப்பு கொண்டிருக்கும் பொருளாகும். டிடர்ஜென்ட், பெயின், காஸ்மெடிக்ஸ் மற்றும் உணவு பேக்கிங் செய்ய உதவும் பொருட்கள், போன்றவற்றில் இந்த ஃப்தலெட்ஸ் கலப்பு இருக்கிறது. நீண்ட நாட்கள் பயனளிக்க, சேதமடையாமல் இருக்க இது பயன்படுத்தப்படுகிறது. அதிகமாக கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்துவதால் சிசு வளர்ச்சியில் தாக்கம் மற்றும் கருகலைப்பு ஆகும் அபாயமும் இருக்கிறது என கூறப்படுகிறது.

    முடிந்த வரை பிளாஸ்டிக் கண்டெயினர்கள், டின் கேன்கள், செயற்கை வாசனை திரவியங்கள், இரசாயன டிடர்ஜெண்ட்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மேலும், குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மை, பாட்டில்களிலும் கூட ஃப்தலெட்ஸ் கலப்பு இல்லாத பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

    முடிந்த வரை, ஆர்கானிக் உணவுகளை உண்ணுங்கள். மேலும், ஷாம்பூ, சோப்பு, லோஷன் போன்றவற்றை கர்ப்பக் காலத்தில் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

    மிகவும் மோசமான கெமிக்கல் இந்த டிரைக்ளோசான். நாம் பயன்படுத்தும் ஆண்டி-பாக்டீரியா சோப்பு, டூத்பேஸ்ட் போன்றவற்றில் இது கலப்பு கொண்டிருக்கிறது. பல ஆய்வுகளில் இந்த கெமிக்கல் தீய பக்கவிளைவுகள் ஏற்படுத்துகின்றது என கண்டறியப்பட்டுள்ளது. இது வளரும் சிசுவின் உடலில் தைராயிடு பிரச்சனை உண்டாக காரணியாக இருக்கிறது.

    நாம் கை கழுவ பயன்படுத்தும் திரவியம், சோப்பு, டூத்பேஸ்ட் போன்றவற்றில் இதன் கலப்பு உள்ளது. எனவே, கர்ப்பக் காலத்தில் இவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.

    பி.பி.எ, இந்த கெமிக்கல் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்களில் கலப்பு கொண்டுள்ளது. இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பதில் தாக்கம் ஏற்படுத்துகிறது. இது, சிசுவின், மூளை வளர்ச்சியை கெடுக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும், இது சிசுவின் உடல் எடை குறைவாக பிறக்கவும் ஓர் காரணியாக விளங்குகிறது.

    பல் மேற்பூச்சுகள், பிளாஸ்டிக் மற்றும் டின் வகையிலான பொருட்களால் அடைக்கப்பட்ட உணவு / பானம் உட்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.
    ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும்.
    கருத்தரிக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று ஆரோக்கியமற்ற கருமுட்டை. ஒரு பெண்ணின் உடலில் கருமுட்டை ஆரோக்கியமாக இல்லாமல் இருந்தாலும், கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும். எனவே திருமணமான பெண்கள் ஒருசில உணவுகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் கருமுட்டை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, விரைவில் கருத்தரிக்க முடியும். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று காண்போம்.

    பெண்கள் மீன்களை சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள வளமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் கருமுட்டையின் ஆரோக்கியம் மேம்படும். அதிலும் சால்மன், சூரை மீன் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றை பெண்கள் சாப்பிட்டு வருவது இன்னும் நல்லது.

    முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த புரோட்டீன் கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எளிதில் கருத்தரிக்க உதவும். மேலும் முட்டையில் உள்ள வைட்டமின் டி மாதவிடாய் சுழற்சியை முறையாக்கும்.

    வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 சத்து வளமான அளவில் உள்ளது. வைட்டமின் பி6 குறைபாட்டின் காரணமாகத் தான் கருமுட்டையின் ஆரோக்கியம் மோசமாகிறது. எனவே தினமும் பெண்கள் 2 வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    பெண்கள் கருத்தரிக்க வைட்டமின் டி சத்து அத்தியாவசியமானது. இச்சத்து அவகேடோ பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே திருமணமான பெண்கள் அவகேடோ பழத்தின் மில்க் ஷேக்கை தினமும் குடித்து வர, கருமுட்டையின் ஆரோக்கியம் மேம்பட்டு கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    பருப்பு வகைகளில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. இது முட்டையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. ஆகவே கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் தினமும் சிறிது பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது ஓர் நற்செய்தியைக் கேட்க உதவும்.
    தாய்மார்கள் எப்பொழுதெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்பதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    குழந்தை பிறந்ததுமே தாய்க்கு முதன் முதலில் வரக்கூடிய பாலை சீம்பால் (Colostrum) என்கிறோம். இதன் அருமை பலருக்குப் புரிவதில்லை. இந்த சீம்பாலைக் குழந்தைக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். காரணம் குழந்தைக்கான நோயெதிர்ப்பு சக்தி இதிலிருந்துதான் அதிகப்படியாகக் கிடைக்கிறது.

    குழந்தை தாயிடமிருந்து பாலை உறிஞ்சிக் குடிக்கும்போது அந்தச் செயலானது தாயின் மூளையிலிருந்து ஒரு ஸ்பெஷல் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. அதுதான் தாயின் மார்பகத்தின் மீது செயல்பட்டு பால் சுரக்கவே செய்கிறது! மேலும் அந்த ஹார்மோன் அம்மாவின் கர்ப்பப்பையின் மீதும் செயல்பட்டு அதை இயல்பாகச் சுருங்கச் செய்யவும் உதவுகிறது.

    அம்மாவுக்கு சளி, ஜுரம் பிடித்து அதற்கான மருந்தை அவர் சாப்பிட்டு வந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். அதில் தவறெதுவும் இல்லை. காரணம், இன்று இதற்காக வரக்கூடிய பல மருந்துகள் பாதுகாப்பானவைகயாகவே இருக்கின்றன. ஆனால், தாய் எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் (அது கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவர் பலமுறை பயன்படுத்திப் பழகிய மருந்தாக இருந்தாலும் கூட) டாக்டரின் ஆலோசனை பெற்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்த முதல் சில நாட்களில் மார்பகக் காம்பில் (நிப்புள்) அம்மாவுக்குப் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வலி ஏற்பட்டு சிலர் குழந்தைக்குப் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிடுகிறார்கள். இப்படிச் செய்வது தவறு. தொடர்ந்து பால் கொடுக்கத் தவறினால் அம்மாவுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அதுவும் பெரிய அவஸ்தையாகிவிடும். இதனால் தாய்க்கு ஜுரம் கூட வரும். அதை கவனிக்காவிட்டால் அங்கு சீழ் உருவாகிவிடும் அபாயமும் உள்ளது.

    இப்படி நீங்கள் விஷயத்தை சீழ் வரை எடுத்துச் சென்றால் அதற்கான ட்ரீட்மெண்ட் கொடுக்க, ஒரு சின்ன அறுவை சிகிச்சையேகூட செய்ய வேண்டி வந்துவிடலாம். அதனால் விஷயத்தை சீழ்வரை எடுத்துச் செல்லாமல் ஜாக்கிரதையாக செயல்படுங்கள். ஆனால் இந்த நிலையிலும்கூட அம்மா, குழந்தைக்கு இன்னொரு மார்பகத்தில் தொடர்ந்து பால் கொடுத்து வரலாம்.

    இப்படிப் பால் கட்டிக்கொண்ட சமயங்களில் மார்பகத்தில் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து, கட்டிக்கொண்ட பாலைப் பீய்ச்சி எடுக்கவேண்டும். குழந்தைக்கு சரியான நேர இடைவெளிவிட்டு ஒவ்வொரு தரமும் பால் கொடுக்க வேண்டும். இப்படி பால் கொடுக்கும் நேர இடைவெளி அதிகமாகும் சமயங்களிலும் கூட சில சமயம் அம்மாவுக்குப் பால் கட்டிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
    பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன? என்பதை கீழே பார்க்கலாம்.
    பிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது?

    ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும் அந்த நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது.

    பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்னென்ன?

    மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

    தாய்ப்பால் ஊட்ட வசதியாக முன் பக்கம் திறப்பு வைத்த உடை, நீண்ட கவுன் போன்ற மாற்று உடைகள், காலணிகள், குழந்தைக்குத் தேவையான துணிகள், ஈரம் உறிஞ்சும் துண்டுகள் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.

    அதேபோல் மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தேவையான உடைகள், சோப்புகள், நாப்பிகள், துப்புரவுத் துணிகள் போன்றவற்றை தயாராக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவர், மருத்துவமனை, கணவர், நண்பர், அவசரத்திற்கு கூப்பிட்டால் ஓடிவரும் உறவினர்கள் போன்றோரின் செல்நம்பர்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    அவசர நேரத்தில் அவர்களை அழைப்பதற்கு உதவியாக இருக்கும். பிரசவத்தின் போது மருத்துவமனைக்குச் செல்லும் வாகன ஏற்பாட்டையும் தயார் செய்துகொள்ளுங்கள். முதன்முறையாக குழந்தை பெறும்போது பிரசவ நேரம் பொதுவாக சுமார் பதிமூன்று முதல் பதினான்கு மணிநேரம் வரை ஆகலாம். ஏற்கனவே குழந்தை பெற்றிருந்தால் சுமார் எட்டு முதல் ஒன்பது மணி நேரமே நீடிக்கும்.

    கர்ப்பகாலம் முழுவதும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து பிரசவத்திற்குத் தயாராகும். கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் இந்த சுருக்கங்கள் அடிக்கடி நிகழும். தொடக்கத்தில் மிகக்குறைந்த அளவிலான தசைச் சுருக்கங்களே காணப்படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும்.

    இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாகவே இருக்கும். இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம். பிரசவவலி எப்போது எடுக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதிகமாக வலி எடுத்தால் சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளை குளிப்பாட்டுவர். இளஞ்சூடான நீரில் குளித்தால் ஆரம்பகால பிரசவ வேதனையை சற்று தணிக்கும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள்.

    தாங்க முடியாத வலி ஏற்படும்போது சில குறிப்பிட்ட வலி நிவாரணிகளை மருத்துவர் தருவார். பேறு காலத்தில் ஏற்படும் வேதனையை நினைத்து கவலைப்படுவதால் வலி அதிகரிக்கும். எனவே, வலியைக் குறைக்க மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    சுவாசிக்கும்போது மார்பகச்சுவர் விரி வடைந்து, உதரவிதானம் அதிகளவு கீழ் இறங்குவது தான் முழுமையான சுவாசம்.

    நீங்கள் சரியான வழியில் சுவாசித்தால் குழந்தைப்பேற்றின்போது மிகச்சுலபமாக குழந்தை வெளித்தள்ளப்படும். பிரசவவலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதியிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதற்கு `பிரசவத்திற்கு முன்னான கோழைக் கசிவு’ என்று பெயர்.

    இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும் இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும்.

    இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரை தாரையாக வெளியேறும். பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும். வலி அதிகமாக இருக்கும்.

    ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரும்போதும் கருவை உந்திவெளியே தள்ளவேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கல் கூடாது. கர்ப்பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

    இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகமாகி, குழந்தையைப் பிடுங்கி வெளியே போட்டுவிடலாமா என்று கூட எண்ணத் தோன்றும். கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்தவுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும்.

    ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின் தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும்.

    இதனால் குழந்தையோனிக்குள் தள்ளப்படுகிறது. யோனித்திறப்பில் குழந்தையின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும்.

    இல்லையென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும். தலை வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். சில சமயங்களில் குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டால், சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுப்பார்கள்.

    எல்லா நேரங்களிலும் சிசேரியன் செய்ய வேண்டிய அவசியமில்லை. பனிக்குடத்தில் அதிக நீர் இருத்தல், கருப்பைக் கோளாறுகள், பிரசவத்தின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, குழந்தை தடம் மாறியிருத்தல், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படுதல் போன்ற சிக்கலான நேரங்களில் மட்டுமே சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. மயக்கமருந்து கொடுத்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும்.
    பெண்களுக்கு மாதம்தோறும் வரும் மாதவிடாய் சமயங்களில் இந்த செயல்கள் செய்வதை கண்டிப்பாக தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4-6 நாட்கள் மிகுந்த தொல்லை தரக்கூடியதாய் இருக்கும். இந்நாட்களில் பெண்களின் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும். அதோடு ஒருசில செயல்களைத் தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    நாள் முழுவதும் ஒரே பேடைப் பயன்படுத்தும் பழக்கத்தை முதலில் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது யோனிப் பகுதியில் நோய்த்தொற்றுகள் மற்றும் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இரத்தக்கசிவு உள்ளதோ இல்லையோ, 3-5 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடை மாற்ற வேண்டியது அவசியம்.

    மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்தொற்றுக்களால் மிகுந்த அவஸ்தைப்படக்கூடும். ஆகவே மாதவிடாய் சுழற்சியின் போது சற்று கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

    மாதவிடாய் சுழற்சியின் போது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடலுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகளை கொண்டு வரும். எனவே அந்த நாட்களில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.

    மாதவிடாய் காலத்தில் டயட் என்ற பெயரில் உணவுகளைத் தவிர்க்காதீர்கள். ஏற்கனவே இக்காலத்தில் ஆற்றல் குறைவாக இருப்பதோடு, இரத்தமும் வெளியேறி இருக்கும். ஆகவே தினமும் மூன்று வேளை தவறாமல் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி அடிக்கடி ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

    மாதவிடாய் கால பிடிப்புக்களால் இரவில் தூங்குவது என்பது கடினமாக இருக்கும். ஆனால் உடலை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

    பால் பொருட்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை மோசமாக்கும். இதற்கு பால் பொருட்களில் உள்ள அராசிடோனிக் அமிலம் தான் காரணம். ஆகவே பால் பொருட்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
    பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    * சில பெண்களுக்கு மீன் அலர்ஜியாக இருக்கும். அத்தகைய பெண்கள் அதற்கு சிறந்த மாற்றாக, அதே சத்துக்கள் நிறைந்த தயிர் மற்றும் ஆளி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    * கர்ப்பிணிகள் அளவாக பப்பாளி சாப்பிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லப்பட்டாலும், பப்பாளி விதை மற்றும் பச்சையான பப்பாளியை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

    * கர்ப்ப காலத்தில் பெண்கள் பான் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    *  கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களை சமநிலையாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். சோயாபீன்ஸில் புரோஜெஸ்டிரோன் உள்ளது. இது உடலில் ஈஸ்ட்ரோஜென் செயல்பாட்டைத் தூண்டி, ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாத காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருந்தால், அது குமட்டலை ஏற்படுத்தும்.

    * கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிக்கும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் க்ரீன் டீயில் உள்ள காப்ஃபைன், உடல் கருவளர்ச்சிக்குத் தேவையான போலிக் அமிலத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்திவிடும்.


    பெண்களுக்கு 30 வயதுக்கு பின் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க வழிகள் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
    மார்ப்பகப் புற்றுநோய், 40 வயதைக் கடந்த பெண்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம். மார்பகத்தில் கட்டி அல்லது மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தில் கட்டி உள்ளதா என்பதை மாதத்துக்கு ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    அறிகுறிகள்  :

    மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசௌகரிய உணர்வு ஏற்படுதல்.

    மார்பகத்தின் அளவு, வடிவத்தில் திடீர் மாற்றம் ஏற்படுதல்.

    மார்புக்காம்பு அல்லது வெளிச்சதை பகுதி சிவந்து போகுதல். உட்பக்கமாக இழுத்துக் கொள்ளுதல் அல்லது வீக்கமடைதல்.

    சிலருக்கு மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டாலும் வலி மட்டும் இருக்காது. வலி இல்லையென்று அலட்சியமாக இருக்காமல், அறிகுறிகளில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவர் மேமோகிராம், பயாப்ஸி உள்ளிட்ட சில பரிசோதனைகளை செய்து அது புற்றுநோய்தானா என்பதை உறுதி செய்வார்.

    மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க  :

    30 வயதுக்கு பிறகு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

    தாய்மார்கள் குழந்தைகளுக்கு குறைந்தது ஓராண்டு வரை கட்டாயம் பாலூட்ட வேண்டும்.

    உயரத்துக்கு ஏற்ற எடை என்பதற்கு கவனம் கொடுக்க வேண்டும்.

    மாதவிலக்குக்கு இடைப்பட்ட நாட்கள், கர்ப்பகாலம், பாலூட்டும் காலம் ஆகிய காலங்களில் ஏற்படும் இயல்பான மாற்றங் களைத் தெரிந்துவைத்துக் கொண்டால்தான், இயல்புக்கு மாறான மாற்றங்கள் தோன்றினால் அதை உடனே உணர முடியும்.

    தக்காளி, கேரட், கருப்பு திராட்சை, மாதுளை, குடமிளகாய், முட்டைக்கோஸ் பப்பாளி, புரொகோலி, பூண்டு ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த புற்றுநோய்க்கு எதிரான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தினமும் உணவில் குறைந்தது மூன்று வகையான, ரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங்கள் அவசியம் இடம் பெற வேண்டும்.

    பெண் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகள், துரித உணவுகளைத் தவிர்த்தாலே, அவர்கள் அதிவிரைவாகப் பூப்பெய்துவதை தவிர்க்க முடியும்.

    மிளகாய்த் தூள், மசாலா வகைகளில் சிவப்பு நிறத்தை கூட்டசூடான் ரெட் டை கலக்கப்படுகிறது. இது  புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. எனவே, வீட்டிலேயே மசாலாப் பொருட்களைத் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

    ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது.

    தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனுடன் யோகா, தியானம் செய்வது உடலை ஃபிட்டாகவும், ஹார்மோன்களை சீராக சுரக்கவும் வைக்கும்.
    வயதான காலத்தில் பெண்களை தாக்கும் நோய்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
    முதுமையில் இருபாலாருக்குமே (ஆண்,பெண்) நோய்கள் வர வாய்ப்புண்டு. ஆனால் பெண்கள் தான் ஆண்களைவிட நீண்டகாலம் வாழ்கிறார்கள். அதற்கான காரணங்கள் - மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஆண்களுக்கே அதிகம். ஆண்களுக்குத்தான் அதிக அளவில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் போன்றவற்றால் பல நோய்கள் வர வாய்ப்பு உண்டு.

    பெண்களைவிட ஆண்கள்தான் விபத்துக்களில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மனஅழுத்தம் ஆண்களுக்கே அதிகம். பெண்களுக்கு வயதானகாலத்தில் வரும் நோய்களை பற்றி பார்க்கலாம்.

    வயதான காலத்தில் பெண்களைத் தாக்கும் முக்கிய நோய்கள் :

    - மாதவிடாய் நிற்பது (Menopause).

    - எலும்பு வலிமை இழத்தல்.

    - மாதவிடாய் நின்ற பின்பும் ரத்தப்போக்கு (Post menopause bleeding)  ஏற்படுதல்.

    - இன உறுப்பில் அரிப்பு.

    - கருப்பை கீழ் இறங்கல்.

    - சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை.

    - புற்றுநோய்கள்.

    -  தைராய்டுத் தொல்லைகள்.

    - அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia)

     - உடற்பருமன் மற்றும் மலச்சிக்கல்.

    பிரசவத்திற்கு பின் பெண்களால் ஏன் மீண்டும் தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட முடிவதில்லை என்பதை கீழே பார்க்கலாம்.
    பெண்களின் வாழ்வில் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு பின்னான காலங்களில் தான் உடலிலும், மனதிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும். இக்காலங்களில் பெண்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபட விருப்பம் மனதில் இருந்தாலும், சில நேரங்களில் முடியாமல் தவிப்பார்கள். இங்கு பிரசவத்திற்கு பின் மீண்டும் உடலுறவில் ஈடுபடுவதில் பெண்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை கீழே பார்க்கலாம்.

    பிரசவத்திற்கு பின் பெண்களால் மீண்டும் கணவருடன் உறவில் ஈடுபட முடியாமல் போவதற்கு, உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இறுக்கமான மனநிலையில் இன்னும் இருப்பதும் தான் காரணம்.

    குழந்தை பிறந்த பின் பெண்கள் பல முறை உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்சனையை சந்திப்பார்கள். இதற்கு பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி இன்னும் இருப்பது தான். அதிலும் சிசேரியன் செய்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

    பிரசவத்திற்கு பின் பெண்களின் மார்பகங்கள் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், மார்பகங்களில் இருந்து பால் வடியும். இதன் காரணமாக முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டால், கடுமையான வலியை உணரக்கூடும்.

    பிரசவத்திற்கு பின் பெண்கள் உறவில் ஈடுபடுவதில் சிரமத்தை அனுபவிக்க காரணம், பிரசவத்தினால் யோனியில் சுவர்கள் விரிவடையும். யோனி சுவர்கள் இறுக்கமாக இருந்தால் தான், உறவில் இன்பத்தைக் காண முடியும்.

    பிரசவத்திற்கு பின்னான உடல் பருமன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள், தளர்ந்த சருமம், தழும்புகள் போன்றவை, அவர்களது அழகைக் கெடுப்பது போன்று உணர்வார்கள். இப்படி மனதில் தங்கள் அழகு குறைந்துள்ளதை நினைத்து பெண்கள் புலம்புவதாலும், உறவில் ஈடுபடுவதில் இடையூறாக இருக்கும்.

    பிரசவத்திற்கு பின் குழந்தையைக் கவனித்துக் கொள்வதிலேயே நேரம் சரியாக இருக்கும். இதில் எப்படி உறவில் ஈடுபட நேரம் இருக்கும்.
    ×