என் மலர்
பெண்கள் மருத்துவம்
கர்ப்பப்பை புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்பதையும் அதை தவிர்க்கும் வழிமுறைகளையும் கீழே பார்க்கலாம்.
கர்ப்பப்பையின் கீழ் பகுதியானது பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய்போன்ற அமைப்பில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின் போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே இதை எதிர்த்து வெற்றி பெறுகிறது.
சில பெண்களுக்கு இந்த கிருமியானது சில நாட்களுக்கு உடலுக்குள்ளேயே காத்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலத்தில் தாக்குலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் இயல்பாக உள்ள செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் அடைந்த இந்த செல்கள் அதிவேகத்தில் பெருக்கம் அடைந்துவிடுகிறது.
இந்த செல்கள் இறப்பதில்லை. பாலியல் உறவின்போதே இந்த வைரஸ் கிருமியானது பரவுகிறது. என்ன தான் வைரஸ் கிருமியால் புற்றுநோய் பரவுகிறது என்றாலும் இளம் வயதிலேயே உடல் உறவு (15 வயதிற்கு கீழ்) பலருடன் உறவு, சிகரெட் பிடித்தல், சுகாதாரமற்ற நாப்கின் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில காரணிகள் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடுகிறது.
ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களால் ஹியூமன் பாப்பிலோமா வைரஸை எதிர்த்து போராட முடிவதில்லை.
கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்பட்டு இருந்தால் அதன் அறிகுறிகளானது எதுவும் தெரியாது. கர்ப்பவாய் புற்றுநோய் முற்றிய நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். இதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற வலியுறுத்தப்படுகிறது..
அறிகுறிகள் :
பிரச்சனை முற்றிய சமயத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அதிகவலி அல்லது இரத்தபோக்கு ஏற்படலாம். வழக்கத்துக்கு மாறாக வெள்ளைப்படுதல், மாதவிலக்கின் போது இரத்தம் கட்டியாக வெளியேறுதல் அல்லது மிகக்குறைந்த அளவில் இரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். மெனோபாசுக்குபிறகு உதிரப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவரின் ஆலோசனை பெறவேண்டும்.
தவிர்க்க வேண்டியவை என்ன?
திருமணத்திற்கு முன்பான உடலுறவையும், புகைபிடித்தலையும் தவிர்க்கவேண்டும். 9 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். முதல் ஊசிக்கு பிறகு 8 வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ், 6 வாரங்கள் கழித்து மூன்றாவது டோஸ் என எடுத்துக்கொள்ளலாம். பெற்றோரும் சிறுவர்களும் இதை போட்டுக்கொள்ளலாம். பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பூசி போட்டாலும் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் புற்றுநோயை தடுக்கலாம்.

மார்பகங்களின் அளவை அதிகரித்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கைதான் மளமளவென உயர்ந்துகொண்டிருக்கிறது.
‘உடையால் மூடப்படும் பகுதிதானே, அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா?’ என்ற கேள்வியை, மார்பகங்கள் விஷயத்தில் எந்த பெண்ணும் கேட்பதில்லை. ஏன்என்றால் உடலுக்கு பொருத்தமான, அழகான மார்பகங்களை எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். அவை பொருத்தமாக இருந்தால்தான் ஆடை முதல், தாங்கள் செய்துகொள்ளும் அத்தனை அலங்காரங்களும் எடுபடும் என்று நம்புகிறார்கள். அதனால் ஆபரேஷன் மூலம் தாங்கள் விரும்பும் அளவுக்கு மார்பகங்களை சீரமைத்துக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை உலகஅளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக மார்பகங்களின் அளவை அதிகரித்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கைதான் மளமளவென உயர்ந்துகொண்டிருக்கிறது.
இப்போது பெரும்பாலான பெண்கள் மெலிந்த உடலோடுதான் தோன்ற விரும்புகிறார்கள். மெலிந்த உடலுக்கு பெரிய மார்புகள் பொருத்தமாக இருப்பதில்லை. பெரிதாக இருந்தால் கொழுப்பின் அளவு உயர்ந்து, மார்பகங்கள் தொங்கிவிடும். பெரிய மார்பகங்களால் தோற்றப் பொலிவில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் சிக்கல் ஏற்படும். பெரிய மார்பக பெண்கள் முதுகுவலி மற்றும் தோள் வலியால் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட மார்பகங்களில் இருந்து கொழுப்பை நீக்கிவிட்டு சீரமைத்து பொலிவாக்க பெண்கள் விரும்புகிறார்கள்.
பெரும்பாலான பெண்கள் இப்படி மார்புகளை சீரமைக்க விரும்பினாலும், தயக்கம், ஆபரேஷனை பற்றி பயம், அதற்கான அதிகபட்ச செலவு, பின் விளைவுகளை பற்றிய கவலை போன்றவைகளை கருத்தில்கொண்டு ஆபரேஷனை தள்ளிப் போட்டுவிட்டு மாற்றுவழிகளை பற்றி சிந்திக்கிறார்கள். அப்படி சிந்திப்பவர்களால் மசாஜ் கிரீம் வகைகளும், சில வகை எண்ணெய்களும், அதிர்வு மூலம் கொழுப்பை குறைப்பதாக கூறும் கருவிகளும் நன்றாக விற்பனையாகின்றன.
மார்பகங்கள் தசையால் ஆனவை அல்ல. லிம்ப்நோடுகள், பால் உற்பத்தி சுரப்பிகள், கொழுப்பு போன்றவைதான் அதில் இருக்கின்றன. மொத்தமாக பார்த்தால் 75 சதவீதம் கொழுப்புதான் இருக்கிறது. கொழுப்புதான் மார்பகங்களுக்கு வடிவம், அளவு, பொலிவு போன்றவைகளை தருகின்றன.
தாய் வயிற்றில் சிசுவாக இருக்கும்போதே மார்பக அடிப்படை கட்டமைப்பு உருவாகிவிட்டாலும், பெண் வயதுக்கு வந்த பின்புதான் வடிவம் பெற்று, கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறுகிறது. மார்பு காம்பு வளரத் தொடங்குவது முதல் மார்பகங்கள் முழுமை பெறுவது வரை, மார்பக வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக பிரிக்கலாம்.
சமச்சீரான சத்துணவும், ஈஸ்ட்ரோஜன் போன்ற பெண்மைக்கான ஹார்மோன்களும் மார்பக வளர்ச்சிக்கும், வடிவத்திற்கும் காரணமாக இருக்கின்றன. சிறுமிகளுக்கு வளரும் பருவத்தில் சமச்சீரான சத்துணவுகள் தரப்படாவிட்டால், அவர்கள் உடல் எடை குறைவதோடு, மார்பக வளர்ச்சியும் பாதிக்கப்படும். உடல் எடை அதிகரித்தால் மார்பகத்தின் அளவும் அதிகரிக்கும்.
வயதுக்கு வந்த பின்பு ஏற்படும் வளர்ச்சிக்கு பிறகு, கர்ப்பமாகும்போதுதான் அடுத்தகட்ட மாற்றங்கள் உருவாகும். கர்ப்பகாலத்தில் மார்பகங்கள் பெரிதாகும். மார்பு காம்புகளும் பெரிதாகும். அடுத்தகட்ட மார்பக மாற்றங்கள் 40 வயதை கடந்த பின்பு தோன்றும். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறையும். அதனால் மார்பகங்களுக்கு அவைகளின் பங்களிப்பும் குறையும். கிளான்டுலர் திசுக்களின் அளவுகள் குறையக் குறைய மார்பகங்கள் சுருங்கத் தொடங்கும்.
மார்பகத்தில் 75 சதவீதம் கொழுப்பு அம்சம் என்பதால், கொழுப்பு கலந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மார்பகம் நன்றாக வளர்ந்து விடும் அல்லவா? என்ற கேள்வி பலருக்குள்ளும் எழும். அது தவறு. கொழுப்பு கலந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மார்பகம் வளராது. மார்பகத்தை வளரச்செய்யும் ‘மேஜிக் உணவு’ எதுவுமே கிடையாது. ஆனால் உடல் வளர்ச்சிக்கு தேவையான சமச்சீரான சத்துணவுகள் மார்பக வளர்ச்சிக்கும் உதவும்.
ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகளும், ஆரோக்கிய கொழுப்பு உணவுகளும் மார்பக வளர்ச்சிக்கு துணைபுரிகின்றன. முட்டை மஞ்சள் கரு, சூரியகாந்தி விதை, சோயா உணவுப் பொருட்கள் ஏற்றது. தவிடு நீக்காத தானியங்கள், வெந்தயம், கறுப்பு எள், கிராம்பு, வெள்ளை கடலை, கோழி இறைச்சி, சிறிய வகை மீன்களையும் சாப்பிடுங்கள். கீரை வகைகள் மார்பக வளர்ச்சி, ஆரோக்கியத்திற்கு சிறந்தது. வளர் இளம் பருவ பெண்களது உணவில் இவைகளை தாய்மார்கள் சேர்க்கவேண்டும். ஐஸ்கிரீம், வறுத்த- பொரித்த உணவுகள், இனிப்புகளை சிறுமிகளுக்கு அதிகம் கொடுக்காதீர்கள்.
மார்பகத்தின் அளவை அதிகரிக்க சிலிக்கான் மெட்டீரியல்களை மார்பகத்திற்குள் இணைக்கிறார்கள். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.
சிலிக்கான் இம்ப்ளான்ட்டை விரும்பாதவர்களுக்காக, ‘கொழுப்பு இடமாற்றம்’ செய்வது மூலமாக மார்பகங்கள் பெரிதாக்கப்படுகின்றன. அதே பெண்ணின் தொடை மற்றும் பின்பகுதியில் இருக்கும் அதிக கொழுப்பை எடுத்து, ஊசி மூலம் மார்பகப்பகுதிக்குள் செலுத்தப்படும். ஒரே தடவையில் இது முழுமையடையாவிட்டால், அடுத்தடுத்து செய்யவேண்டியதிருக்கும். இந்த சிகிச்சை செய்தால், மார்பகத்தில் அடையாளம் எதுவும் தெரியாது.
தொங்கிய மார்புகளை தூக்கி நிறுத்த ‘அப்லிப்டிங்’ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது ஒரு சீரமைப்பு முறையாகும். மார்புகள் தொங்கிப்போய் காட்சியளிக்க என்ன காரணம் என்ற கேள்வி எல்லா பெண்களிடமும் எழுகிறது. பலரும், பிரசவித்த குழந்தைக்கு பால் புகட்டுவதால் மார்புகள் தொங்கிப்போவதாக நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. மார்பக உருவாக்கத்தின் நோக்கமே பால்புகட்டுவதுதான்.
மார்புகள் தொங்குவதற்கு என்ன காரணம் என்றால், பிரசவம் நடந்த தொடக்க காலத்தில் மார்பகங்களின் அளவு பெரிதாகும். நெஞ்சுப்பகுதி சருமமும் இழுத்து கீழ் இறங்கும். அதனால்தான், பின்பு மார்பக கொழுப்பு குறைந்துவிட்டாலும் மார்பகங்கள் தொங்கிய நிலையிலே இருக்கின்றன. மார்பகத்திற்கான விசேஷ உடற்பயிற்சிகள் சிலவற்றை செய்தால், மார்பகம் தொங்கும் நிலையை தவிர்க்கலாம்.

இன்றைய சூழலில் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்து கொண்டு, வேலைக்குச் செல்லும் நிலையில் பல உடல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.
பொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிலக்கு சுழற்சியின் காரணமாக பலவகையான சத்துக்குறைபாடுகள் உண்டாகிறது. இத்தகைய சத்துக் குறைபாட்டால் உடல் பலவீனமடைந்து பாதிப்படைகிறது. இதனால் பெண்களுக்கு கூடுதல் ஊட்டசத்து தேவைப்படுகிறது.
நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்க வைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து, மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்பி பயணத்தின் போதே சாப்பிடுகின்றனர், அல்லது பட்டினி கிடக்கின்றனர்.
மேலும் மாதவிலக்கு காலங்களில் 3 அல்லது 5 நாட்கள் தனியாக அமர வைத்து, எந்த வேலையும் செய்யவிடாமல், ஓய்வு கொடுத்தனர். அதை நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம். அந்த காலங்களில் போதிய ஓய்வு தேவை என்பதாலேதான் அவ்வாறு செய்தனர் என்பதனை உணரவேண்டும்.
போதிய சத்து குறைப்பாட்டால் குடலில் புண், பித்தம், அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடும்.
இத்தகைய உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு எடுத்து கொள்வது அவசியமாகும். அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்கி உண்பது நல்லதல்ல. அவை உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவையாக உள்ளது.
நம்முடைய அன்றாட உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பலபேர்களின் பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்த வேண்டும். முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கருப்பையினுள்ளே குழந்தைகள் இறந்து போக பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
கருப்பையில் இருக்கும் போதே குழந்தை இறந்துவிடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வாரங்களுக்கு பின்பு கருப்பையிலே இறந்து விட்டால் அது intra uterine death(IUD) எனப்படுகிறது.
அதாவது 28 வாரங்கள் (7 மாதம் ) ஆன குழந்தைகள் இறந்தால் அது குழந்தையின் இறப்பு எனப்படுகிறது. அதற்கு முந்தி இறந்தால் அது கருக்கலைவதை(miscarriage or abortion ) எனப்படுகிறது.
என்ன காரணத்தினால் இந்தக் குழந்தைகள் இறக்கலாம்?
உள்ளே இருக்கும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பதார்த்தங்கள் அனைத்தும் தொப்புள் கொடியின்(umbilical cord) ஊடாகவே குழந்தைக்கு கிடைக்கிறது. சிலவேளை இந்த தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொள்வதால் அதனூடாக ரத்த ஓட்டம் நடைபெறாமல் குழந்தை இறக்கலாம்.
இந்த தொப்புள் கொடி சூழ் வித்தகம் (placenta) மூலமே தாயில் இருந்து ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும். இந்த சூல்வித்தகம் கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயில் இருந்து குழந்தைக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொடுக்கும். இந்த சூழ் வித்தகம் குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரியும். சில வேளை இது குழந்தை பெற முன்பே பிரிந்து விட்டால் குழந்தை இறந்து விடலாம்.
போதிய வளர்ச்சியில்லாத குழந்தைகள் கருப்பையின் உள்ளேயே இறந்து விடலாம்.
குழந்தையின் உடலிலே பிறப்புக் குறைபாடுகள் ஏதாவது இருப்பதால் குழந்தை இறக்கலாம்.
இப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தக் காரணமும் இல்லாமலும் குழந்தை சடுதியாக கருப்பையின் உள்ளேயே இறந்து விடலாம்.
எப்படியான தாய்மாரின் குழந்தை இப்படி இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்?
35-வயதிற்கு மேற்பட்ட தாய்மார்
நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தாய்மார்
உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார் (pregnancy induced hypertension)
போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்ட தாய்மார்
மது மற்றும் புகைப் பிடிக்கும் தாய்மார்
இப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாத தாய்மாரின் குழந்தைகளும் சடுதியாக இறந்து விடலாம்.
இதைத் தடுப்பதற்கான வழிகள்?
முற்று முழுவதாக இதைத் தடுக்க முடியாவிட்டாலும் மேலே நான் சொன்ன பிரச்சினைகள் உள்ள தாய்மார்கள் தொடர்ச்சியாக வைத்தியரைச் சந்தித்து தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மற்றைய விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.
மேலும் நீரழிவு நோயினால் மற்றும் உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மாரின் குழந்தைகள் கொடுக்கப்பட்ட தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னே பிறக்க வைப்பது (மருத்துவ முறை மூலம்) உகந்தது. ஏனென்றால் இந்தக் காலத்திற்குப் பிறகு இந்தத் தாய்மார்களில் குழந்தைகள் சடுதியாக இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
கருப்பையினுள்ளே போதிய வளர்ச்சியைப் அடையாத குழந்தைகளை கூட குறிப்பிட்ட காலத்திற்கு முன்னமே பிறக்க செய்ய வேண்டி ஏற்படலாம்.

கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கும் வழிமுறைகளை கீழே விரிவாக பார்க்கலாம்.
ways to maintain healthy baby weight duringpregnancy
கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 - 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மருத்துவர் வயிற்றில் வளரும் குழந்தை எடை குறைவாக உள்ளது என்று கூறினால், குழந்தையின் எடையை அதிகரிக்க கர்ப்பிணிகள் முயல வேண்டும்.
வயிற்றில் வளரும் குழந்தையின் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
கர்ப்பத்தின் கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட கூடுதலாக 300 கலோரிகளை எடுக்க வேண்டும். பழங்கள், புரோட்டீன் உணவுகள், முழு தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும்.
அன்-சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொப்புள் கொடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். ஆகவே ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், சால்மன் மீன் போன்றவற்றை சற்று அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.
மன அழுத்தம் அல்லது பதற்றத்துடன் இருந்தால், அது உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து, குழந்தையின் எடையைப் பாதிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
பொதுவாக மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அந்த வைட்டமின் மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலம், குழந்தைக்கு கூடுதலாக சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் எடை ஆரோக்கியமாக இருக்கும்.
தொடர்ச்சியாக மகப்பேறு மருத்துவரை சந்தித்தால், குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடையைப் பற்றி தெரிந்து, அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ள முடியும். எனவே சோம்பேறித்தனப்பட்டு மருத்துவரிடம் மட்டும் செல்லாமல் இருக்காதீர்கள்.
உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதோ என்ற சந்தேகம் மனதில் எழுகிறதா? அப்படியெனில் அதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறிய முடியும்.
உங்கள் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதோ என்ற சந்தேகம் மனதில் எழுகிறதா? அப்படியெனில் அதை ஒருசில அறிகுறிகள் கொண்டு அறிய முடியும். அந்த அறிகுறிகள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
50 சதவீத கர்ப்பிணிகள் கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் வாந்தி அல்லது குமட்டலை சந்திப்பார்கள். ஆனால் அது சொல்ல முடியாத அளவில் அதிகமாக இருந்தால், இரட்டைக் குழந்தைகள் வயிற்றில் இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக பல கணிப்புக்களில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். ஆனால் அப்படி அதிகரிக்கும் உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், அது இரட்டைக் குழந்தை வயிற்றில் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
AFP (ஆல்பாஃபெடோபுரோட்டீன்) என்பது கர்ப்பிணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ஒரு இரத்த பரிசோதனை. இது கர்ப்பத்தின் இரண்டாம் மூன்று மாத காலத்தின் போது மேற்கொள்ளப்படும் சோதனையாகும். இந்த சோதனையின் போது, குழந்தைக்கு பிறப்பு குறைபாடு உள்ளதா என்பதைக் கண்டறிய உதவும். இந்த சோதனையின் போது இரட்டைக் குழந்தைகள் வயிற்றில் இருந்தால், அசாதாரணமாக அதிகம் இருப்பதாக முடிவு வரும்.
வயிற்றில் சிசுவின் அசைவை மிகவும் வேமாக ஒரு தாய் உணர்ந்தால், அது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர் என்பதைக் குறிக்கும்.
இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்த நிறைய அனுபவமிக்க பெண்கள் கூறும் ஓர் பொதுவான பிரச்சனை தான் அளவுக்கு அதிகமான களைப்பு. அதுவும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் கடுமையான களைப்பை அனுபவிப்பார்கள்.
பல காரணங்களுக்காக மருத்துவர்கள் ஹெச்.சி.ஜீ அளவுகளைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள். ஹெச்.சி.ஜீ என்னும் ஹார்மோன் பெண்களின் இரத்தம் அல்லது சிறுநீரில் உள்ளது. கருத்தரித்த 10 நாட்கள் கழித்து இச்சோதனையை சோதிக்கும் போது, அளவுக்கு அதிகமாக ஹெச்.சி.ஜீ அளவுகள் இருந்தால், இரட்டைக் குழந்தைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதை அறியலாம்.

கர்ப்ப காலத்தில் மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதிப்படுபவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் மசக்கை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் மசக்கை ஏற்படுகிறது என்று உறுதியாக கூற முடியாது. சில பேருக்கு கர்ப்ப காலம் முழுவதும் மசக்கை அறிகுறிகள் பிரச்சனையாகவே இருந்து கொண்டிருக்கும்.
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்று. மசக்கையின் ஆரம்பமும், எத்தனை நாட்கள் தொடரும் என்பதில் மட்டும் சிறிய வேறுபாடுகள் இருக்கும். கர்ப்பம் தரித்ததும் பெண்ணின் தேகம் ஹெச்.சி.ஜி என்ற ஹார்மோனை சுரக்க ஆரம்பிக்கிறது. இரட்டை குழந்தைகள் என்றால் ஹெச்.சி.ஜி சுரப்பு அதிகமாக இருக்கும்.
மசக்கையை முழுவதும் தவிர்ப்பது என்பது முடியாத காரியம். ஆனால் குறைக்க வழிகள் இருக்கிறது.
வயிறு நிறைய சாப்பிட்டு இருந்தாலோ அல்லது காலியான வயிற்றோடு இருந்தாலோ குமட்டல் அதிகமிருக்கும். மூன்று வேளைச் சாப்பாட்டிற்குப் பதில் கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி உணவருந்துவது நல்லது. திரவ ஆகாரம் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஓரே நேரத்தில் அனைத்தையும் அருந்தக்கூடாது.
இஞ்சி குமட்டலை தவிர்க்க வல்லது. நீங்கள் சாப்பிடும் உணவில் காரம், கொழுப்பு சத்துகள் கொண்ட எண்ணெய் பலகாரங்கள் போன்ற பதார்த்தத்தை குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இவை குமட்டல், வாந்தியை ஏற்படுத்தக்கூடியது.
குறிப்பிட்ட சில உணவுகளின் வாசமே மசக்கை பெண்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சில வைட்டமின் மாத்திரைகளை காலையில் உட்கொள்கிற போது சிலருக்கு குமட்டல் இன்னும் மோசமாகலாம். இவர்கள் மாத்திரையை எடுத்துக்கொண்டதும் சாக்லேட் சாப்பிடலாம். இதனால் குமட்டல் குறைய வாய்ப்புண்டு.
வயிறு நிறைய தண்ணீர் குடிக்கக்கூடாது. போதுமான அளவு மட்டுமே தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடியுங்கள். நாள் முழுவதும் திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ளுங்கள். சாப்பாட்டின் போது தண்ணீர் குடிக்க வேண்டாம்.
தர்பூசணியும் குமட்டலுக்கு நிவாரணம் தரும். சாப்பிட்டதும் படுக்ககூடாது. குமட்டலை காரணம் காட்டி உணவை தவிர்க்காதீர்கள். அளவுக்கு அதிகமாக குமட்டல், வாந்தி இருந்தால் வாந்தியோடு வலி, காய்ச்சல் வந்தால், மூன்று மாதங்களைத் தாண்டியும் மசக்கை அறிகுறிகள் தொடர்ந்து கொண்டிருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
மசக்கை கர்ப்பிணி பெண்களுக்கோ, வயிற்றில் வளரும் சிசுவிற்கோ தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் வாந்தி அதிகம் இருந்தால் உண்ணும் உணவை தங்கவிடாமல் இருக்கலாம். இந்த நிலை கடுமையாக இருந்தால் ஊட்டச்சத்து கிடைப்பது குறைந்து போய் குழந்தைக்கும், தாய்க்கும் பாதிப்பு ஏற்படலாம். இந்த நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

பெண்கள் ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும்.
ஹை ஹீல்ஸ் போட்டு நடப்பதால் முதுகு தண்டுவட எலும்புகளில் தேய்மானம் ஏற்படும். தண்டுவட எலும்புகளில் உள்ள அனுலார் சவ்வு கிழிபட்டு முதுகு வலி பிரச்சனையை ஏற்படுத்தும். முதுகுப் பகுதியில் லம்பார் லார்டோசிஸ் வளைவை அதிகப்படுத்தி தண்டுவட எலும்புகளில் லி5, ஷி1 பகுதியில் அதிக தேய்மானம் ஏற்படுத்தி வலியை உருவாக்கவும் ஹை ஹீல்ஸ் முக்கிய காரணம்.
சிலருக்கு Intervertebral disc prolapse என்னும் தண்டுவட எலும்புகளின் நடுவே உள்ள தட்டுகள் தேய்மானம் அடைந்து முதுகுவலி ஏற்படும். ஆரம்ப கட்டத்தில் மருந்து, மாத்திரைகள், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளை கொடுத்து சரி செய்து விடலாம். பிரச்சனை வளர்ந்த நிலையில் வலி குறையாமல் இருந்தால் அறுவை சிகிச்சை செய்துதான் சரி செய்யவேண்டியிருக்கும். இப்போது பதின்ம வயது பருவப்பெண்களும் ஹை ஹீல்ஸ் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இப்பழக்கம் அவர்களின் எலும்புகளின் வளர்ச்சியை பாதித்து, இளம் வயதிலேயே கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும். இவ்வளவு பிரச்னைகளை ஏற்படுத்தும் ஹை ஹீல்ஸ் தேவையா என்று இளம்பெண்கள் யோசிக்க வேண்டும்.
* பாதங்களில் வலி உள்ளவர்கள் கான்ட்ராஸ்ட் பாத் என்ற சிகிச்சையை வீட்டிலேயே எடுத்துக்கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் சாதாரண தண்ணீரையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். அதில் கணுக்கால் வரை நீரில் முக்கி பாதத்துக்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். இருவகை தண்ணீரிலும் மாற்றி மாற்றி பயிற்சிகளை செய்ய வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளைகளும் செய்ய வேண்டும்.
* நீண்ட நாட்கள் ஹை ஹீல்ஸ் அணிந்து பழகியவர்களால் வழக்கமான செருப்புகளுக்கு உடனே மாற முடியாது. பாதங்களின் கீழ் உள்ள ஆர்ச் எனப்படும் வளைவுகள் மிகவும் குறைந்துவிடும். ஒரு இஞ்ச் அளவுள்ள ஹீல் உள்ள செருப்புகளுக்கு மாறி அதன் பிறகுதான் ஹீல் இல்லாத செருப்புகளுக்கு மாற வேண்டும்.
* குதிகால், பாதம் ஆகியவற்றுக்கு சீராக இயங்கத் தேவையான பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.
* முதுகு மற்றும் மூட்டுவலி உள்ளவர்கள் எலும்பியல் நிபுணரை ஆலோசித்த பிறகே சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
விரல்களில் ஏதேனும் வேறுபாடு தெரிந்தால் ஹை ஹீல்ஸ் அணிவதை நிறுத்திவிட வேண்டும்...
ஹை ஹீல்ஸ் காரணமாக ஏற்படும் ஒருவகை முதுகுவலி ஆரம்ப கட்டத்தைத் தாண்டிவிட்டால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்...

சாப்பாட்டு விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டியது சாப்பாட்டு விஷயத்தில்தான். சும்மா இல்லை. இரண்டு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட்டாக வேண்டுமே.. கால்சியமும் இரும்புச் சத்தும் மிகமிக அவசியம். தினமும் ஒரு வகை கீரை, பருப்பு, பால், தயிர் இவை தவறாமல் இருக்க வேண்டும்.
தினம் ஒரு ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல் வராமல் இருக்கும். அசைவம் சாப்பிடுபவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு முட்டை, சிக்கன் சூப் சாப்பிடலாம். மட்டன், சிக்கன், மீன் வகைகளை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் இரவில் வேண்டாம்.
சாப்பாட்டில் மட்டுமல்ல குடிநீர் விஷயத்திலும் கவனம் தேவை. சுத்தமான குடிநீர் என்றாலும் ஒரு முறை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிப்பது நல்லது. இல்லாவிட்டால் அசுத்தமான நீரால் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் வரலாம். சாப்பிட்டதும் படுக்கக்கூடாது. அப்படிப்படுத்தால் நெஞ்சை அடைப்பதுபோல் அவஸ்தையாக இருக்கும்.
இரண்டு பேருக்குச் சாப்பிட வேண்டுமே என்று ஊட்டமாகச் சாப்பிட்டு அதனால் உடல்எடைஅதிகரித்தால்..?
அதிலும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும் அதே சமயம் முடிந்த அளவுக்கு வேலைகள் செய்தும், நடை பயிற்சியின் மூலமும் உடல் எடை அதிகரித்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்களை விட கர்ப்ப காலத்தில் அதிகபட்சம் பத்து கிலோ எடை கூடுதலாக இருக்கலாம். அதற்குமேல் அதிகரிக்கக் கூடாது. கர்ப்ப காலத்தில் சாதாரணமாகவே ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எடை அதிகரித்தால் அந்த அளவு மேலும் கூடி பல்வேறு பிரச்னைகளைத் தரும். பிரசவத்திலும் சிக்கல் வரும்.
சில பெண்களுக்கு, எட்டாம், ஒன்பதாம் மாதங்களில் உடம்பில் நீர்கோத்து, கை கால்கள் வீங்கிவிடும். இவர்கள் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். பார்லியை நிறைய தண்ணீர் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தாலும் உடல் நீர் சிறுநீராக வெளியேறி எடை குறையும்.
புத்தம்புது உயிர் ஜனிக்கும் இனிய நிகழ்வுதான் பிரசவம். அதைப் பரவசத்தோடு எதிர்கொள்ள வேண்டும். பிரசவம் என்பதே வலியுடன் கூடிய நிகழ்வு தான் என்பதை கூடியவரை நினைவில் வைத்துக்கொண்டால் பிரசவ நேர பயத்தையும் டென்ஷனையும் தவிர்க்கலாம்.

அபார்ஷனுக்கு பிறகு உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்....
பதின் வயது முதல் இளம் வயது வரை இடைப்பட்ட காலத்தில் கருகலைப்பு செய்வது, பிற்காலத்தில் கருத்தரிக்க முயலும் போது பெரும் தடையாக அமையும்.
ஏதோ வேகத்தில் உடலுறவில் ஈடுபட்டு, பொய் கூறி கருகலைப்பு செய்துவிடலாம். ஆனால், இது கருப்பையை வலிமை இழக்க செய்யும். இதனால், நீங்கள் பின்னாளில் கருத்தரிக்க முயலும் போது பல சிக்கல்களை நேரிட செய்யும்.
வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு போன்ற சிறிய அளவிலான பாதிப்புகளும்,
அதிக / தொடர்ந்து இரத்தப்போக்கு தொற்று அல்லது சீழ்ப்பிடிப்பு கருப்பை வாய் சேதம், கருப்பை புறணி வடுக்கள், கருப்பை துளை மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு இறப்பு போன்ற பெரிய அளவிலான பாதிப்புகளும் ஏற்படலாம்.
எழுந்து நிற்க முடியாத அளவிற்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வலியை ஏற்படுத்தும். சாதாரணமா மாதவிடாய் நாட்களை காட்டிலும் அதிகமாக இரத்தப்போக்கு போகும். பிறப்புறுப்பில் வெளியேற்றம் அடையும் போது துர்நாற்றம் வீசும் 100.4 F அதிகமான அளவில் காய்ச்சல் வரும்.

மீன் உணவுகளில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.
அசைவ உணவு வகைகளில் அதிக நன்மை தருவதாகத் திகழ்பவை, மீன்கள்.
குறிப்பாக, எண்ணெய்ச் சத்துள்ள மீன்களில் உள்ள முழுமைபெறாத ஒமேகா 3 பேட்டி ஆசிட், நம் உடம்பில் கொழுப்புச் சேராமல் பாதுகாக்கிறது.
ஒரு வேளை மீன் சாப்பிடுவது இரண்டு வேளை உணவுக்குச் சமமானது என்று கூறத்தக்க வகையில் அதில் சத்துகள் நிறைந்துள்ளன. முக்கியமாக புரதம், வைட்டமின்கள் ஏ, டி மற்றும் பி, இரும்பு, அயோடின், செலினியம், துத்தநாகம் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அரிதான தனிமச் சத்துகளும் உள்ளன.
பெண்கள் உடல் வளர்ச்சிக்கு மீன் உணவு அவசியம். குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அரிதான அயோடின் சத்து மீன்களில் கிடைக்கிறது. குழந்தைப் பிறப்புக்கு பிறகும் தேவையான பால் சுரக்க மீன்கள் சிறந்த உணவாக உள்ளன.
மீன்கள், மற்ற அசைவ உணவுகளைவிட குறைந்த கலோரியை கொண்ட புரதத்தைப் பெற்றிருப்பது ஆரோக்கியத்துக்கு உகந்தது.
நுண்சத்துகளும் மீன்வகைகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. ரத்தத்திற்கு தேவையான நுண்சத்து, எலும்புக்கு தேவையான கால்சியம் போன்றவை தாவர உணவுகளைவிட மீன்களில் சிறப்பான வகையில் உடலுக்கு கிடைக்கின்றன.
இதய நோயாளிகள் குறைவான அளவில் ஒழுங்கான இடைவெளியில் மீன் சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு உயிர் அபாயத்தை கூடியவரை தவிர்க்கலாம்.
காரணம், மீனில் அதிகமாக உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட், ஈகோசெபென்டனாயிக் அமிலம், டொகொசஹெக்சோனிக் அமிலம் போன்ற சத்துகள் மாரடைப்புக்கான ரத்தக்குழாய் படிவுகளைக் கரைக்க வல்லவை. அதனால், மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பு வாய்ப்பு குறைகிறது என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

30 வயதுக்கு மேல் பெண்களுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணம் மற்றும் உணர்வுகள் சற்று வேகமாகவே குறைய துவங்கும்.
தாம்பத்தியம் இல்லற வாழ்வில் இன்றியமையாத ஒன்று. மனிதர்களாகிய நாம் தான் உடலுறவை அழகுடன் ஒப்பிட்டு மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றை அதிகரித்து கொண்டு, இல்வாழ்க்கையில் தாக்கம் ஏற்பட வழிவகுத்துக் கொள்கிறோம். பெரும்பாலும் பெண்கள் மத்தியில் தான் 30களில் பயணிக்கும் போது தாம்பத்தியத்தின் போது உடல் சார்ந்த அழகியல் எண்ணங்கள் காரணமாய் தாக்கங்கள் உண்டாகின்றன.
பிரசவம், தாய்மை, தாய்ப்பால் ஊட்டுதல் போன்ற காரணத்தால் பெண் உடலில் மார்பகம், வயிறு, கீழ் உடல் பகுதிகளில் தசை அதிகரித்து, தொங்குதல் உண்டாகின்றன. சிசேரியன் செய்யும் பெண்கள் மத்தியில் இது அதிகப்படியாக காணப்படுகிறது. இதன் காரணத்தால் உடல் வடிவம் மாறுவதால் பெண்களுக்கு இந்த எண்ணம் அதிகரிக்கிறது.
பொதுவாகவே உடல் அழகு, வடிவம் இருந்தால் தான் ஆண்கள் தாம்பத்தியத்தில் விரும்பி ஈடுபடுவார்கள் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. மிக நடுவயதில் தாம்பத்தியம் என்பது அரிதாக நடக்கும் செயல். மேலும், நடுவயதில் கூடுதல் என்பது மனதின் பால் கொண்ட அன்பினால் தான் அதிகம் உண்டாகும். எனவே, ஆண்கள் மத்தியில் நடுவயதிலும் வடிவம் சார்ந்த தாம்பத்திய ஈடுபாடு மிக குறைந்த அளவில் தான் இருக்கிறது.
பெண்கள், தன் துணை உடல் ரீதியாக தன்னிடம் வடிவத்தை எதிர்பார்க்காமல் செயற்படும் போது, அவர் வேறு பெண்ணுடன் உறவு அல்லது ஈர்ப்பு கொண்டதால் தான் தன்னிடம் அதிகம் எதிர்பார்ப்பது இல்லையோ என்ற எண்ணத்திலும் வாழ துவங்குகிறார்கள். இது போன்ற எண்ணத்தால் அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும், சோர்வு தான் உண்டாகிறதே தவிர, எந்தவிதமான நல்லதும் நடப்பதில்லை.
ஆண்களை விட, பெண்களுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணம் மற்றும் உணர்வுகள் சற்று வேகமாகவே வயதாக, வயதாக குறைய துவங்கும். இதற்கு காரணம் அவர்களது உடல் கூறு. மாதவிடாய் மற்றும் மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளில் தாக்கதை உண்டாக்குகிறது.
உண்மையில் நடுவயதில் பெண்கள் உடல் வடிவ மாற்றங்களால் சண்டைகள் எழுவதை விட, அவர்கள மன அழுத்தம், அவர்கள் எப்போதும் இதை காரணம் கொண்டு சோகமாக காணப்படுவது தான் சண்டைகள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.