என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்பக் காலத்தில் எதனால் களைப்பு ஏற்படுகிறது. அதனை போக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்ககலாம்.
    கர்ப்பக் காலத்தில் முதல் மூன்று மாதங்கள் வரை இவ்வாறு களைப்பு ஏற்படுவது இயல்பு. இந்தக் காலக்கட்டத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் பழக்கிக் கொள்ள உடலுக்கு அவகாசம் தேவைப்படும்.

    பன்னிரண்டாம் வாரம் வரை ஹார்மோன் மாற்றங்கள் தொடரும். கர்ப்பக் காலம் முழுவதிலும் கர்ப்பிணிக்கு களைப்பு ஏற்பட்டு அடிக்கடி சோர்ந்துவிடக் கூடும். குறிப்பாக நிறை மாதத்தின் போது களைப்பு அதிகரிக்கும்.

    இளஞ்சிறார்களை உடையவர்களுக்கும், களைப்பைத் தரும் வேலையில் இருப்பவர்களுக்கும் இந்தச் சூழலைக் கையாள்வது மிகவும் சிரமமான ஒன்றாகும்.

    கர்ப்பிணிகள் பகலில் இரண்டு மணி நேரமாவது முழு அளவில் ஓய்வெடுக்க வேண்டும். நாளொன்றுக்குப் பத்துமணி நேரம் உறங்கி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓய்வெடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    சில சமயம் மனக் கவலையால் சோர்வு வந்துவிடும். நீங்கள் எதைப் பற்றியாவது கவலைப்படுவதாக இருந்தால், அதைப்பற்றி உங்கள் கணவர், மருத்துவர் அல்லது நண்பருடன் மனம் திறந்து பேசுவது பயனுள்ளதாக இருக்கும்.
    சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இன்றைய பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக காரணத்தை கீழே விரிவாக பார்க்கலாம்.
    இயல்பாகப் பிறக்கும் குழந்தைகளில் ஐம்பதில் ஒன்று குறைபாடுகளுடன் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு எண்ணிக்கையான குறைபாடுகள் சோதனைக்குழாய் மூலம் கருத்தரிப்பு உண்டாகும்போது ஏற்படுவதில்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

    சோதனைக்குழாய் முறையில் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களுக்கு சில மருந்து மாத்திரைகள் சினைப்பைகளைத் தூண்டுவதற்காகத் தரப்படுகின்றன. இது தற்காலிகமாக சினைப்பையைத் தூண்டி நீர்க் கழலைகளை உண்டாக்குகிறது. இதை ஹைபர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் என்பார்கள்.
     
    லேப்ராஸ்கோப்பியை விட அல்ட்ராசோனிக் முறையில் கரு முட்டையை எடுக்கும்போது பிரச்சினைகள் அதிகம் வருவதில்லை.
     
    சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் எதிர்ப்பார்ப்பான ஒன்று. இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட தூரத்திலிருந்து வருவதால் ஏற்படும் அலைச்சல், முட்டை எடுப்பதற்காகத் காத்திருத்தலால் வரும் சோர்வு ஆகியவற்றால் சோதனைக் குழாய்க் குழந்தை பெறும் சில பெண்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இவையெல்லாம் சாதாரணமான பிரச்சினைகள்தான்.
     
    ஆனால் இந்தக் பிரச்சைனைகள் எதுவும் ஆணுக்கு ஏற்படுவதில்லை. அவை விந்தளிப்பதோடு அவரது கடமை முடிந்துவிடும்.
     
    சிகிச்சைக்கு வரும்போதே, சோதனைக் குழாய்க் குழந்தைக்கு எப்படி தயாராக வேண்டும் என்ற விவரங்கள் சொல்லப்பட்டு விடுவதால் பெரும்பாலும் எந்தவிதமான பதற்றமும் தம்பதியருக்கு ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற சூழலில்தான் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது.
     
    பல கருவாக்க மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் கருவாக்கம் செய்கிறார்கள். சிறப்பான கருவாக்க மையங்களில் சோதனைக்குழாய் மூலம் கருத்தரிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் உண்டாக்கிய பின்னரே கருத்தரிக்கச் செய்வதால் ஒரே ஒரு முறையில் கருவாக்கம் செய்ய முடிகிறது.
    ஆண்கள், மாதவிடாய் காலத்தில் தங்கள் எதிர்கால மனைவியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    திருமணம் செய்துக் கொள்ள போகும் ஆண்கள், மாதவிடாய் காலத்தில் தங்கள் எதிர்கால மனைவியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்....

    முன்னர் மாதம் மூன்று நாட்கள் பெண்களை வீட்டுக்கு வெளியே இருக்க கூறினார்கள் என்றால், அன்று நாப்கின் போன்ற உபகரணங்கள் இல்லை. இன்று முழுக்க பாதுகாப்புடன் இருப்பதற்கான அனைத்து வழிவகைகளும் இருக்கும் போதும், அவர்களை மூன்று நாட்கள் நெருங்க தயங்குவது, அருவருப்புடன் காண்பது எல்லாம் மனிதத்தன்மை அற்ற செயல். இதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
     
    பெண்களுக்கு ஏறத்தாழ 15 - 45 வயதுக்குட்பட்ட 30 வருடங்கள் மாதவிடாய் மாதாமாதம் ஏற்படும். இந்த காலத்தில் இரத்தப்போக்கு மற்றும் பிடிப்பு காரணமாக அவர்களுக்கு ஏற்படும் வலி சொல்லி மாளாது. எனவே, வருடம் முழுக்க குடும்பத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ளும் அவர் மீது, இந்த மூன்று நாட்களாவது நீங்கள் அக்கறை எடுத்துக் கொண்டு அன்பும், அரவணைப்புடன் கவனித்துக் கொள்ளுங்கள்.
     
    சில வீடுகளில் மாதவிடாய் காலத்தில் அவர்கள் பயன்படுத்திய உடைகளை, போர்வைகளை எல்லாம் அவர்களையே துவைக்க கூறுவார்கள். இதுவும் ஒரு வகையில் கொடுமை படுத்தும் செயல் தான். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நோய்வாய்ப்பட்டு போகும் போது கழிவறை வரை வந்து உதவும் பெண்களுக்கு கணவன்மார்கள் இந்த உதவியை கூட செய்யக் கூடாத என்ன.
     
    இந்த மூன்று நாட்களும் அவர்களே தான் சமைக்க வேண்டும், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும், துணிகளை துவைக்க வேண்டும் என எல்லா வேலைகளையும் அவர்கள் மீது திணிக்க வேண்டாம். அவர்களை குறைந்த பட்சம் அதிக இரத்தப்போக்கு போகும் முதல் நாளாவது அவர்களுக்கு ஓய்வளியுங்கள்.
     
    மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதில் தவறில்லை என மருத்துவர்கள் கூறினும், தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

    ஆனால், இதை எல்லாம் தாண்டி, பெண்களின் வலி மிகுந்த அந்த மூன்று நாட்களிலும் தாம்பத்தியத்திற்கு அழைப்பது, தாம்பத்தியத்தில் ஈடுபட விருப்பத்தை வெளிப்படுத்துவது சரியல்ல.
     
    பெண்கள் உடல் ரீதியாக வலி அனுபவிக்கும் அந்த மூன்று நாட்கள், அவர்கள் மனம் ரீதியாகவும் புண்படும் படி நடந்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் தவறே செய்திருந்தாலும், கோபப்பட்டாலும் மாதவிடாய் நாட்களில் ஆண்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

    ஏனெனில், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மூட்ஸ்விங் ஏற்படும். இதனால், அவர்களால் கட்டுப்படுத்த முடியாத மன மாற்றங்கள், கோபம் வெளிப்படலாம். இது, இயல்பு. இதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
     
    முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் பெண்களை அவர்கள் போக்கில் ஃப்ரீயா விட்டுவிடுங்கள். கணவர்கள் அவர்கள் வேலையை அவர்களே முடிந்த வரை செய்துக் கொள்ளுங்கள்.
     
    வருடம் 330 நாட்கள் இல்லறம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் ஆண்கள் பெண்களின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இன்பத்தை பகிர்ந்து கொள்வது மட்டுமல்லவே இல்லற உறவு. பெண்களின் வலியை வாங்கிக் கொள்ள முடியாது எனினும், அரவணைத்து வலி குறைவாக உணர வைக்க ஆண்களால் முடியும்.
    தற்போது நிறைய பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளால் அவஸ்தைப்படுகின்றனர். கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்க உதவும் சில இயற்கை வழிகளை கீழே பார்க்கலாம்.
    தற்போது நிறைய பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளால் அவஸ்தைப்படுகின்றனர். கருப்பை நீர்க்கட்டிகள் இருந்தால், அது அப்பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதுடன், கருவுறுவதிலும் பிரச்சனையை ஏற்படுத்தும். கருப்பையில் நீர்க்கட்டிகள் இருந்தால், சில சமயம் வயிற்று உப்புசம், குடலியக்கத்தின் போது கடுமையான வலி, தசைப்பிடிப்புகள், மாதவிடாய் சுழற்சியின் போது தாங்க முடியாத வலி, உடலுறவின் போது வலி, முதுகு அல்லது தொடைகளில் வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

    கருப்பை நீர்க்கட்டிகளை கரைப்பதற்கு கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு முன், இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள். இயற்கை வழிகளால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதுடன், விரைவில் நல்ல பலனும் கிடைக்கும். இங்கு கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்க உதவும் சில இயற்கை வழிகளை கீழே பார்க்கலாம்.

    சுடுநீரை வாட்டர் பாட்டிலில் நிரப்பி, அதனைக் கொண்டு அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த முறையை அடிவயிறு வலிக்கும் போது மேற்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை என, மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் விரைவில் கரைந்துவிடும். குறிப்பாக இந்த விளக்கெண்ணெய் பேக்கை கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் ஓவுலேசனுக்கு பின் பயன்படுத்தக்கூடாது மற்றும் மாதவிடாய் காலத்தில் இந்த முறையைப் பின்பற்றக்கூடாது.

    ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அத்துடன் 10 துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, உப்பு கரைந்த பின், உடலை அந்நீரில் 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை பின்பற்றினால் கருப்பை நீர்க்கட்டிகள் அகலும்.

    சீமைச்சாமந்தி டீயை தினமும் 2-3 கப் குடித்து வந்தால், சீமைச்சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைப்பதுடன், அதனால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து விடுவிக்கும்.

    1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 1-2 டம்ளர் குடித்து வர, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.
    பொதுவாக ‘கடலை எண்ணெய்’ எனப்படும் வேர்க்கடலை எண்ணெயில் பெண்களுக்கு தேவையான கணக்கற்ற நன்மைகள் அடங்கி இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    பொதுவாக ‘கடலை எண்ணெய்’ எனப்படும் வேர்க்கடலை எண்ணெயில் கணக்கற்ற நன்மைகள் அடங்கி இருக்கின்றன.

    போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமானது. அவர்கள் தினமும் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் மகப்பேறில் சிரமம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.

    கடலை எண்ணெய், நீரிழிவு நோயைத் தடுக்கும். நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்கனீஸ் முக்கியப் பங்காற்றுகிறது.

    நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருக்கிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது.

    நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன், இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.

    நிலக்கடலையில் உள்ள வைட்டமின் 3 நியாசின், மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா 6 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

    பெண்களுக்கு மார்பகக் கட்டி உண்டாவதை வேர்க்கடலை தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை இதில் நிறைந்துள்ளன.

    பெண்களுக்கு கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் வேர்க்கடலை தடுக்கிறது.
    கருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
    கருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல் நிலையை ஏற்ப உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதுண்டு.

    இதற்கு காரணம் பிள்ளை பிறந்த போது அவர்களது பிறப்புறுப்பு விரிவடைந்ததன் காரணமாக மிகுந்த வலி பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனவே, அவர்களது பிறப்புறுப்பு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலும், அவர்களது அங்கு ஏற்பட்ட காயங்கள் குணமடையும் வரையிலும் உடலுறவு வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    இது போன்ற ஏறத்தாழ நான்கைந்து மாதங்கள் உடலுறவில் ஈடுபடாமல் இருந்து, குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் என்ன உணர்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

    முதன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதி மத்தியில் ஏறத்தாழ மூன்றில் இருந்து ஐந்து மாதமாவது இந்த உடலுறவு வாழ்க்கை தடைப்பட்டு போயிருக்கும். இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு, தங்கள் துணைக்கு தன் மீதுள்ள ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் பிறக்கிறது.

    குழந்தை பிறந்த பிறகு மாறும் தன் உடல்வாகினை தனது கணவனுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆயினும் 14% பெண்கள் குழந்தை பிறந்த பிறகு தைரியத்துடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.

    குழந்தை பிறப்பது என்பது வரம் போன்றது. வரம் கிடைத்த பிறகு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமே தவிர அச்சம் கொள்ள கூடாது.

    கணவன், மனைவி குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போதும் சராசரியாக ஆண்கள் வாரத்திற்கு இருமுறையும், பெண்கள் வாரத்திற்கு ஒருமுறையும் தான் ஈடுபட விரும்புகிறார்கள்.

    வலி ஏற்படலாம் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களுக்கு ஆரம்பத்தில் வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட காயங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.
    ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும்.
    ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும்.

    இப்போது ஒரு பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.

    கர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே, அவர்களின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என அறியலாம். அதில் கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

    கர்ப்ப காலத்தில் பெண்களின் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் இருக்கும். அதில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை. அதுவே ஒருவித மேகமூட்டமான வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

    கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் மற்றும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அதில் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

    கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப மார்பகங்கள் பெரிதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இடது மார்பகங்கள் தான் பெரிதாகும். ஆனால் ஆண் குழந்தையைச் சுமக்கும் பெண்களுக்கு இடது மார்பகத்தை விட, வலது மார்பகம் பெரிதாகும்.

    கர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்யும் போது, மருத்துவர்கள் குழந்தையின் இதயத் துடிப்பையும் அளவிடுவார்கள். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தித்திகு 140 முறை துடித்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

    வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்தால், கர்ப்ப காலத்தில் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதுவும் சாதாரண நிலையை விட சற்று அதிகமாகவே முடியின் வளர்ச்சி இருக்கும்.

    ஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கர்ப்பிணிகளுக்கு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்குமாம்.

    கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும். இந்நிலையில் தூங்கும் போது, எப்போதும் இடது பக்கமாக தூங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

    பொதுவாக கர்ப்ப காலத்தில் காலை வேளையில் பெண்கள் வாந்தி அல்லது குமட்டல் உணர்வால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் இம்மாதிரியான அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.

    கர்ப்ப காலத்தில் வயிறு வட்டமாகவும், வயிறு மட்டும் பெரியதாகவும் இருக்கும். இப்படி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.
    கர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கமின்மையை விரட்டும் எளிய வழிகளை பற்றி கீழே பார்க்கலாம்.
    • கர்ப்ப காலத்தில் பணி நேரம் மாற்றம் போன்ற காரணத்தால் சில சமயம் தூக்கமின்மை ஏற்படலாம். இது உடல் வலி அல்லது வயிற்றுக் கோளாறு போன்றாவற்றால் கூட தூண்டப்படலாம். அவ்வாறு தூண்டப்பட்டால் ஒரு சிலருக்கு தன்னிச்சையான வாந்தி ஏற்படலாம் அல்லது கர்ப்பிணிகள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடலாம்.

    • கர்ப்ப காலத்தில் கெட்ட கனவுகள் மற்றும் தூக்கத்தில் நடக்கும் வியாதி போன்றவையும் கூட தூக்கமின்மை வர காரணமாகலாம். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பித்து அல்லது போபியா போன்ற மன நோய்கள் உருவாகலாம். மருந்து எடுத்துக் கொள்ளுதல், உடல் வறட்சி மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற வெளிப்புற காரணிகள் கூட தூக்கமின்மையை தூண்டலாம்.

    • கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. அவ்வாறு வருவதற்கு குழந்தையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒரு கர்ப்பிணி தாய் கருவுற்ற பிந்தைய கால கட்டங்களில், கரு நன்கு வளர்ந்து விடுவதால் அவரது வயிற்றின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் சங்கடங்கள் கூட தூக்கமின்மை வர காரணமாக இருக்கலாம்.

    • ஒரு சில தாய்மார்களுக்கு குழந்தையின் அதிக எடை காரணமாக முதுகு வலி வரும். அவ்வாறு உண்டாகும் முதுகுவலியானது அந்த தாய்க்கு தூக்கமில்லாத இரவுகளை நிச்சயம் பரிசளிக்கும். குழந்தையின் அதிக எடையானது தாயின் சிறுநீர்ப்பை மீது ஒரு அழுத்தத்தை உருவாக்கும். அதன் காரணமாக அந்த தாய்க்கு இரவு முழுவதும் அடிக்கடி சிறுநீர் வரும். இதன் காரணமாக அந்தத் தாயால் கண்டிப்பாக இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க இயலாது.

    • கர்ப்ப கால கவலைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலைகள் கண்டிப்பாக தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒரு தீய சுழற்சியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துவதால், ஒரு தாய் இயற்கையாகவே அடிக்கடி இரவில் விழித்து இருப்பாள்.

    • ஒரு தாய் தன் தூக்கமின்மைப் பற்றி கவலைப்பட்டால் அது அவளது குழந்தையையும் கண்டிப்பாக பாதிக்கக்கூடும். இந்தப் பதற்றம் தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை எவ்வாறு சமாளிக்க முடியும்?. கருவின் எடை காரணமாக உங்களுடைய வயிற்றின் அளவு, வடிவம் மற்றும் எடை, உங்களை கட்டாயம் கஷ்டப்படுத்தும். எனவே நீங்கள் புதிய நிலைகளில் தூங்க முயற்சி செய்வீர்கள். அது உங்களுக்கு கட்டாய முதுகு வலியைத் தரும்.

    • கர்ப்பிணிகள் இடது பக்கமாக தூங்குவதோடு, ஒரு குஷன் அல்லது மென்மையான பொருள் எதையாவது உங்களுடைய வயிற்றுக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்யலாம்.

    • தூங்க முயற்சிக்கும் முன் சூடான வெந்நீரில் குளியல் போடுவது உங்களுடைய அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தைப் பரிசளிக்கும்.

    • நல்ல மனதுக்கு பிடித்த இசை இங்கே சில நன்மைகளைத் தருகின்றது. கர்ப்ப காலத்தில் இயற்கையான ஒலிகளான பறவைகளின் ரீங்காரங்கள் அல்லது கரையில் மோதும் கடலின் ஒலி போன்றவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

    • கர்ப்ப காலத்தில் இரவு நேரங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது, மூளை அதிக அளவில் செரோட்டினை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும். செரோட்டின் ஆனது கர்ப்பிணிகள் நன்றாக தூங்க உங்களுக்கு துணை புரியும்.

    சிசேரியன் செய்த பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கான சில வழிகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.
    • சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு.

    • சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    • சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்காமல், நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலில் இரத்த கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.

    • சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள். இவை, தசை வலிமை அடைய வெகுவாக உதவும் உணவுகளாகும்.

    • பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. உணவில் நார்ச்சத்து உணவுகள் அதிகம் எடுத்துக்கொண்டால் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்க முடியும்.

    • தாய்பால் தருவது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் நல்லது. எனவே, குறைந்தபட்சம் ஆறு மாதத்தில் இருந்து 1 ஆண்டு வரைக்குமாவது தாய்பால் கொடுக்க வேண்டும்.

    • அதிக எடை கொண்ட பொருட்களை தூக்க வேண்டாம். இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும்.

    • ஜிம்மிற்கு செல்லும் பெண்கள், சிசேரியன் செய்த சில மாதங்கள் வரை க்ரஞ்சஸ் பயிற்சி செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடையை ஆரோக்கியமாக பராமரிக்க வழிகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.
    கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதத்தில், குழந்தையின் எடையானது 1.5 - 1.8 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறக்கும் போது, அதன் எடை ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் மருத்துவர் வயிற்றில் வளரும் குழந்தை எடை குறைவாக உள்ளதாக கூறினால், குழந்தையின் எடையை அதிகரிக்க கர்ப்பிணிகள் முயல வேண்டும்.

    • கர்ப்பத்தின் கடைசி மூன்று மாத காலத்தில் தினமும் உட்கொள்ளும் கலோரிகளை விட கூடுதலாக 300 கலோரிகளை எடுக்க வேண்டும். அதற்கு பழங்கள், புரோட்டீன் உணவுகள், முழு தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும்.

    • அன்-சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொப்புள் கொடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். ஆகவே ஆலிவ் ஆயில், நட்ஸ், அவகேடோ, விதைகள், சால்மன் மீன் போன்றவற்றை சற்று அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.

    • மன அழுத்தம் அல்லது பதற்றத்துடன் இருந்தால், அது உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து, குழந்தையின் எடையைப் பாதிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

    • பொதுவாக மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். அந்த வைட்டமின் மாத்திரைகளை எடுத்து வருவதன் மூலம், குழந்தைக்கு கூடுதலாக சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் எடை ஆரோக்கியமாக இருக்கும்.

    பெண்கள் கர்ப்பமாவதை தடுப்பதில் பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான்.
    கர்ப்பம் தரிப்பது என்பது எளிமையான காரியம் அல்ல. சமீபத்தில் அதிகமான பெண்கள் கர்ப்பமாவதில் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு பெரிதும் காரணமாக இருப்பது இன்றைய வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கங்களும்தான். இவை உடல் நலத்தை கெடுத்து, கர்ப்பமாவதில் பிரச்சினையை உண்டாக்குகின்றன.

    ஒருசில உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் எளிதில் கர்ப்பமாகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சில உணவுகளில் கருத்தரிப்பதற்கு தேவையான சத்துக்களான வைட்டமின் ஏ, ஈ, டி, ஒமேகா 3, பேட்டி ஆசிட் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் கர்ப்பம் தரிக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    இந்த உணவை ஆண், பெண் இருவருமே சாப்பிடவேண்டும். ஏனென்றால் இதில் உள்ள முட்டை மற்றும் காளானில் ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் ஜிங்க், வைட்டமின் டி இருப்பதால் இது பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்திற்கு தேவையான வலுவையும் வீரியத்தையும் தருவதால் விரைவில் கர்ப்பம் உருவாகலாம்.

    காலை உணவாக கோதுமை மாவில் பாதாம் பவுடரை சேர்த்து, அதனை சப்பாத்தி போட்டு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். கருத்தரிப்பதை அதிகரிக்கும் உணவில் மிக முதன்மையானது, சால்மன் மீன்கள். இந்த மீன்களை கழுவி, அதில் இஞ்சியை துருவிப்போட்டு, வினிகர், மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி, 20 நிமிடம் ஊறவைத்து, கிரில் செய்து சாப்பிட்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.

    சீஸ் உணவில் பெண்கள் கருத்தரிக்க தேவையான கால்சியம் அதிகம் இருக்கிறது. இதனை சாண்ட்விச் போன்று செய்து சாப்பிடுவது நல்லது. கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் இருப்பதால் ஆண்கள் இதை அதிகம் சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கு காம உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோனை அதிகப்படுத்தும் மற்றொரு இயற்கை உணவாக சிப்பி உள்ளது. அதிலும் கடல் சிப்பியில் ஆலிவ் எண்ணெய், மிளகாய்த் தூள், பூண்டு சேர்த்து பிரட்டி, ஊற வைத்து 10 நிமிடம் கிரில் செய்து சாப்பிட்டால் சுவையாக இருப்பதோடு விந்தணுவின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

    பெண்களுக்கு மிகவும் அவசியமான தாதுக்களில் ஒன்றாக போலிக் அமிலம் உள்ளது. உடல் மற்றும் வலிமையைப் பொறுத்தவரை ஆண்களைவிட பலம் குறைந்தவர்களாக பெண்கள் இருப்பதால், அவர்களுடைய உடலை பலமாகவும் திறனாகவும் வைத்திருக்க போலிக் அமிலம் உதவுகிறது. கர்ப்பமாவதில் பிரச்சினை உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்த்து, பசலைக் கீரை, பார்லி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து மாலையில் குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
    கர்ப்ப காலத்தில் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது நல்லதா? இல்லையா என்பதை கீழே பார்க்கலாம்.
    கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக் கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.  இது தவறு.

    குழந்தை 3 கிலோ அளவில்தான் பிறக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்கள் 6 முதல் 10 கிலோ மட்டும் எடை கூடினால் போதுமானது. தற்போது, பல கர்ப்பிணிகள் 10 மாத காலத்துக்குள் 20 கிலோவுக்கும் அதிகமாக எடை அதிகரித்துவிடுகின்றனர்.  சிலர் பி.எம்.ஐ அளவு 32 ஐ தாண்டிவிடுகிறார்கள்.

    இதற்கு, உடற்பயிற்சி இன்மை மற்றும் உணவுக்கட்டுப்பாடு இன்மையே காரணம். கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அதிக அளவு உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்.

    கர்ப்ப காலத்தில் அதிக அளவில் உடல் எடை கூடவில்லை என்றால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும், அறுவைசிகிச்சை செய்வதாலும், ஹார்மோன்கள் கோளாறு காரணமாகவும் குழந்தை பெற்ற பிறகு, அதிக அளவு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. எனவே, கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை.
    ×