என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் டயட்டில் இருக்கும் பெண்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
    வெளி தோற்றத்தின் மேல் அதீத அக்கறை காட்டுவதில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

    அதனால் கொஞ்சம் உடல் எடை கூடினாலும் டயட் மேற்கொள்கிறேன் என எதையாவது பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.

    பெண்கள் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் தங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கின்றனர். அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் எந்த ஒரு உணவும் உங்கள் உடலுக்கு கெடுதல் தரும் என்பதை பெண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். அதேபோல உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் உங்கள் உடலிற்கு தேவையான உணவுகளை அறவே ஒதுக்குவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஆலிவ் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது தான். ஆனால் நிறைய பெண்கள் தங்களது உணவுக்கட்டுப்பாட்டில் அளவிற்கு அதிகமாக ஆலிவ் எண்ணெயை சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் உடல் எடை குறையாது, அதிகம் தான் ஆகும். ஆலிவ் எண்ணெயை 1 டீஸ்பூன் அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

    சில பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் பெரும்பாலான சத்துமிக்க பழங்களையும், அதில் கொழுப்புச்சத்து இருக்கிறது என தவிர்த்து விடுகின்றனர். பழங்களில் உள்ள அனைத்து சத்துகளும் உடலுக்கு தேவைப்படுகிறது என்பதை பெண்கள் உணர வேண்டும். ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, திராட்சை மற்றும் தர்பூசணி போன்ற உணவுகள் உணவுக் கட்டுப்பாட்டிற்கும் நல்லது, உங்கள் உடல் நலத்திற்கும் நல்லது.

    குறைந்த உணவு, நிறைய உடற்பயிற்சி பெண்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டில் செய்யும் மிகப்பெரிய தவறு, உடல் எடையை குறைக்கிறேன் என்று குறைவாக உணவு சாப்பிடுவது மற்றும் அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்வது. உடற்பயிற்சி மேற்கொண்டால் அதற்கு ஏற்ப உணவை சாப்பிடுவதும் அவசியம். குறைவான உணவை உட்கொண்டு அதிக உடற்பயிற்சி செய்தால், வாந்தி, மயக்கம் ஏற்படும்.

    பெண்களுக்கு பிடித்த உணவுகளில் நட்ஸ் முதன்மையாக இருக்கிறது. நட்ஸை அவர்கள் ஒருவகையில் உணவுக் கட்டுப்பாட்டிற்காக சாப்பிடுகிறார்கள். வெறும் நட்ஸ் உணவு மட்டும் சாப்பிடுவது உங்கள் உடல் எடையை குறைத்துவிடாது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உள்ளடங்கிய உணவுகளையே உட்கொள்ள வேண்டியது அவசியம்.

    திணை மற்றும் தானிய வகை உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
    கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதில் இருந்து, அதன் பிறகு எப்போது கருத்தரிக்க முயலலாம் என்பது வரையிலான தகவல்கள் பற்றி காணலாம்.
    கருத்தரிப்பதை தடுக்க பல உபகரணங்கள் இருக்கின்றன. ஆனால், யாவும் உதவாத நிலையில் தம்பதிகள் தேர்ந்தெடுப்பது கருத்தடை மாத்திரைகள். கருத்தடை மாத்திரைகள் மற்றவையுடன் ஒப்பிடுகையில் கருத்தரிப்பை தடுக்க பயனளிக்கும் என்றாலும் கூட, அதனால் பெண்களுக்கு நிறைய பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வதில் இருந்து, அதன் பிறகு எப்போது கருத்தரிக்க முயலலாம் என்பது வரையிலான தகவல்கள் பற்றி காணலாம்.

    பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக கருத்தரிக்காமல் இருக்க, கருத்தரிப்பை தடுக்க தம்பதிகள் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்கின்றனர். அல்லது வேறு கருத்தடை கருவிகள் / உபகரணங்கள் பயனளிக்கவில்லை என்ற காரணத்தாலும் பலர் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள முனைகின்றனர்.

    மகப்பேறு மருத்துவர்கள், தம்பதிகள் அவர்களது வாழ்நாளிலேயே ஓரிரு முறை தான் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். அதுவும் மருத்துவர் பரிந்துரை பேரில். தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது, பிறகு நீங்களே நினைத்தலும் கருத்தரிக்க முடியாத நிலைக்கு எடுத்து செல்லும் என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெரும்பாலும் மகப்பேறு மருத்துவர்கள் குறைந்தபட்சம் ஒரு குழந்தையாவது இருக்கும் நபர்களுக்கு தான் கருத்தடை மாத்திரைகளை பரிந்துரை செய்கின்றனர்.

    கருத்தடை மாத்திரை உட்கொண்ட பிறகு, சரியான மாதவிடாய் சுழற்சி அமையும் போது கருத்தரிக்க முயற்சி செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    கருத்தடை மாத்திரை காரணமாக சிலருக்கு ஓரிரு மாதங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் உண்டாகலாம். எனவே தான் தம்பதிகள் கருத்தடை மாத்திரை உட்கொண்ட பிறகு சரியான மாதவிடாய் சுழற்சி ஏற்பட்ட பிறகு கருத்தரிக்க முயல்வது சரி என கூறுகின்றனர். இல்லையேல் கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

    யாராக இருப்பினும் தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது சரியானது அல்ல. எனவே, இதை தவிர்ப்பது தான் சரி என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு கருத்தடை மாத்திரை உட்கொண்டும் கூட கருத்தரிக்க வாய்ப்புண்டு. இதனால் பக்கவிளைவுகள் வருமா என அஞ்ச வேண்டாம். அப்படி எதுவும் நடக்க வாய்ப்புகள் இல்லை என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனார்.

    கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.
    ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம்.

    திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்…

    முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும்.

    நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.

    மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச்சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியம்

    புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

    அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும்.

    பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது.

    அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம்.

    கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.

    படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும்.

    உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.

    கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

    ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.

    சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.

    பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள் .85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

    சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம்.

    அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம். எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.

    இதற்காக ஒரு பெண் தனது மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய்  ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.
    கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவை என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் ஒன்று தான் கர்ப்ப கால சர்க்கரை நோய். பிரசவத்திற்கு பின் இரத்த சர்க்கரை அளவை பழைய நிலைக்கு திரும்பிவிடும். இருப்பினும் கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்ற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

    அதுமட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தையையும் பெரிதாக தாக்கும். இங்கு அந்த கர்ப்ப கால சர்க்கரை நோய் பற்றி இதுவரை உங்களிடம் யாரும் தெளிவாக கூறாத விஷயங்களை பார்க்கலாம்.

    கர்ப்ப கால சர்க்கரை நோய்க்கு சிகிக்கை அளிக்காவிட்டால், அதனால் வயிற்றில் வளரும் குழந்தை அளவுக்கு அதிகமான உடல் எடையுடன் பிறக்கும். ஒருவேளை கர்ப்பிணியின் இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருந்தால், அதனால் குழந்தை இறக்கும் வாய்ப்பு உள்ளது. முக்கியமாக கர்ப்ப கால சர்க்கரை நோய் குழந்தையின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருக்கும் தாய்க்கு பிறந்த குழந்தை உடல் பருமனால் அவஸ்தைப்படுவதோடு, சர்க்கரை நோயாலும் கஷ்டப்படும்.

    கர்ப்ப கால சர்க்கரை நோய் கொண்டிருந்த பெண்களுக்கு, அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதனால் இந்த பெண்களின் அடிவயிற்றுப் பகுதி மட்டும் பெரிதாக இருக்கும்.

    கர்ப்ப கால சர்க்கரை நோயால் கஷ்டப்பட் பெண்கள், டைப்-2 சர்க்கரை நோயாலும் அவஸ்தைப்படக்கூடும். கடந்த 20 வருடங்களில் கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுள் பாதி பேர் டைப்-2 சர்க்கரை நோயாலும் அவஸ்தைப்பட்டுள்ளனர்.

    கர்ப்ப கால சர்க்கரை நோய் சீரம் கொழுப்பு அளவுகளை பாதித்து, உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்கி, பல்வேறு இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

    முதல் கர்ப்பத்தில் சர்க்கரை நோயை சந்தித்தால், மீண்டும் கருவுறும் போதும் கர்ப்ப கால சர்க்கரை நோயால் அவஸ்தைப்படக்கூடும்.
    அபார்ஷன் செய்வதும் எளிதல்ல, அதன் பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.
    நீங்கள் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ள மறுத்தாலும் சரி இது தான் உண்மை. அபார்ஷன், இன்று நகர்புற கல்லூரி பெண்கள் வாழ்வில் மெல்ல, மெல்ல... சாதாரணம் தானே என்பது போன்ற பிம்பமாய் வளர்ந்து வருகிறது. இந்த விஷச்செடியை ஆரம்பத்திலேயே அழிக்க வேண்டியது சமூகத்தின் கடமை.

    பார்ஷன் என்பது பிறக்கும் முன்னரே ஒரு உயிரை கொல்வது. திருமணத்திற்கு பிறகோ, முன்னரோ கருத்தரிக்க விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபடும் போது பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த தவற வேண்டாம். அபார்ஷன் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் நிறைய பாதிப்புகளை உண்டாக்கும்....

    பதின் வயது முதல் இளம் வயது வரை இடைப்பட்ட காலத்தில் கருகலைப்பு செய்வது, பிற்காலத்தில் கருத்தரிக்க முயலும் போது பெரும் தடையாக அமையும்.

    ஏதோ வேகத்தில் உடலுறவில் ஈடுபட்டு, பொய் கூற கருகலைப்பு செய்துவிடலாம். ஆனால், இது கருப்பையை வலிமை இழக்க செய்யும். இதனால், நீங்கள் பின்னாளில் கருத்தரிக்க முயலும் போது பல சிக்கல்களை நேரிட செய்யும்.

    வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு குமட்டல் வாந்தி வயிற்றுப்போக்கு இரத்தப்போக்கு போன்ற சிறிய அளவிலான பாதிப்புகளும், அதிக / தொடர்ந்து இரத்தப்போக்கு தொற்று அல்லது சீழ்ப்பிடிப்பு கருப்பை வாய் சேதம் கருப்பை புறணி வடுக்கள் கருப்பை துளை மற்ற உறுப்புகளுக்கு பாதிப்பு இறப்பு போன்ற பெரிய அளவிலான பாதிப்புகளும் ஏற்படும்.

    எழுந்து நிற்க முடியாத அளவிற்கு வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வலி ஏற்படுத்தும் சாதாரணமா மாதவிடாய் நாட்களை காட்டிலும் அதிகமாக இரத்தப்போக்கு போகும் பிறப்புறுப்பில் வெளியேற்றம் அடையும் போது துர்நாற்றம் வீசும். 100.4 F அதிகமான அளவில் காய்ச்சல் வரும்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்து கொள்ளலாமா என்ற சந்தேகம் உள்ளது. அதற்கான விடையை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    கர்ப்ப காலத்தில் உங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படலாம். அதில் ஒன்று நீங்கள் உட்கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரைகளைப் பற்றியதாக இருக்கலாம். ஆன்டி பயாடிக் மாத்திரைகளைப் பற்றிய உண்மைகளை விரிவாக பார்க்கலாம்.

    கர்ப்ப காலத்தில் உடல் பாகங்கள் வீக்கம், மலச்சிக்கல், முதுகு வலி, உடல் எடை அதிகரிப்பு, போன்ற பல்வேறு விரும்பத்தகாத பிரச்சனைகளால் அவதிப்படுகின்றார்கள். மேலே தெரிவித்துள்ள உடல் பிரச்சனைகளைத் தவிர்த்து கர்ப்பிணிப் பெண்கள் பல்வேறு மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆட்படுகின்றனர். அவர்களுக்கு மன மாறுதல், எரிச்சல், கவலை போன்ற மனப்பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகள் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படுகின்றது.

    பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற நுண்ணுயிரிகளால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல், ஈஸ்ட் தொற்று, பாக்டீரியா தொற்று முதலிய நோய்களை குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் ஆன்டிபயாடிக் மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. ஆன்டி பயாடிக் மருந்துகள் நம்முடைய உடலுக்குள் நுழைந்து நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழித்து அல்லது அவற்றின் வளர்ச்சியை தடுத்து வியாதிகளை குணப்படுத்துகின்றது.

    கர்ப்பிணி பெண்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கு பாக்டீரியா தொற்று, வைரஸ் காய்ச்சல், ஈஸ்ட் தொற்று போன்ற பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படலாம். சில நேரங்களில் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் அவற்றை குணப்படுத்த ஆன்டி பயாடிக் மருந்துகள் தேவைப்படலாம். அத்தகைய சந்தர்பங்களில் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக ஆன்டி பயாடிக் மருந்துகள் எடுத்தே ஆக வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதா?

    ஒரு ஆய்வு கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருத்துகளை எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள், பிரசவத்திற்கு பின் ஆஸ்துமா பாதிப்பிற்கு அதிகம் ஆட்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றது. எனவே, உங்களுடைய கர்ப்ப காலதில் ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக்கொள்ளும்போது உங்களுடைய மருத்துவர்களின் ஆலோசனையை கண்டிப்பாக கேளுங்கள். தேவைப்பட்டால் ஆன்டி பயாடிக் மருந்துகளை மிகக் குறைந்த அளவே எடுத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமானது.

    பொதுவாக கர்ப்பத்தின் மூன்று மாதத்திற்கு பிறகு ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது என கருதப்படுகின்றது. எனினும் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள கூடாது.
    கருச்சிதைவு ஏற்பட போகிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பத்தின் ஆரம்ப மூன்று மாத காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களுக்கு எளிதில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் ஒரு பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அறிவது என்பது சற்று கடினம்

    ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணிற்கும் அதற்கான அறிகுறிகள் வேறுபடும். இங்கு கருச்சிதைவிற்கான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

    கருச்சிதைவிற்கான முதல் அறிகுறி இரத்தப்போக்கு. சில நேரங்களில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கரு உருவாவதால் இரத்தக்கசிவு ஏற்படுவது சாதாரணம். ஆனால் தொடர்ச்சியாக இரத்தக்கசிவு ஏற்பட்டால், சற்று தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

    இது மற்றொரு அறிகுறி. கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் கடுமையான வலியை உணர்வதோடு, இரத்தக்கசிவும் ஏற்பட்டல், அது கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். இம்மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

    யோனியில் இருந்து வெள்ளைக் கசிவு ஏற்பட்டால், அது கருச்சிதைவு ஏற்படப் போவதற்கான ஆரம்ப அறிகுறியாகும். அதுவும் இந்த வெள்ளைப்படிதல் இரத்தக்கட்டிகளுடனும், துர்நாற்றத்துடனும் இருந்து, யோனியில் அரிப்புக்களை ஏற்படுத்தினால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும்.

    கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் கருப்பை சுருக்கங்கள் ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். இம்மாதிரியான நேரத்தில் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

    தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று பார்க்கலாம்.
    வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இங்கு ஒரு பெண்ணின் கருவளமிக்க நாட்களை கண்டறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

    நன்கு முதிர்ந்த கருமுட்டை அண்டகத்தில் இருந்து கருப்பையினுள் வெளித்தள்ளும் நிகழ்வு தான் அண்டவிடுப்பு அல்லது ஓவுலேசன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பெண் கருத்தரிப்பதற்கு ஓவுலேசன் மிகவும் முக்கியமானது. ஓவுலேசன் காலத்தில் உடலுறுவில் ஈடுபடும் போது, பெண்ணின் உடலினுள் நுழையும் விந்தணு கருமுட்டையுடன் இணைந்து கருப்பையினுள் கருவாக உருவாகும்

    ஆகவே வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், ஓவுலேசன் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் விரைவில் கருத்தரிக்கலாம். இருப்பினும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை எப்படி கண்டறிவது என நீங்கள் கேட்கலாம். அதைத் தெரிந்து கொள்ளவும், ஓவுலேசன் காலத்தின் போது வெளிப்படும் சில அறிகுறிகளையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    ஓவுலேசன் காலமானது முதல் மாதவிடாய் சுழற்சி ஆரம்பித்த 13 அல்லது 14 நாட்களில் ஆரம்பமாகும். சில பெண்களுக்கு இது வேறுபடும். இங்கு குறிப்பிட்ட நாட்களில் இருந்து சிலருக்கு முன்பும், இன்னும் சிலருக்கு தாமதமாகவும் கூட ஆரம்பமாகலாம். இருந்தாலும் குறிப்பிட்ட அறிகுறிகளைக் கொண்டு, பெண்ணின் ஓவுலேசன் காலத்தை அறியலாம்.

    சில நாட்களாக உங்களது பாலுணர்ச்சி அதிகமாக இருந்தால், அது ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும். இக்காலத்தில் உடலுறவு கொண்டால், வேகமாக கருத்தரிக்கலாம்.

    ஓவுலேசன் காலத்தில் பிசுபிசுப்பான வெள்ளை நிறத் திரவம் யோனியில் இருந்து வெளியேறும். இதுவும் ஒரு பெண்ணின் ஓவுலேசன் காலத்தை சுட்டிக் காட்டும்.

    நிறைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக்குப் பின் மார்பகங்கள் புண்ணாக இருக்கும். இது குறைந்த முக்கியத்துவமுடைய அடையாளம் தான். இருந்தாலும், மாதவிடாய் சுழற்சிக்கு பின் இந்த அறிகுறி தென்பட்டால், அது ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும்.

    ஒரு பெண்ணிற்கு ஓவுலேசன் காலத்தின் போது, தன் துணையின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். இதற்கு ஆணின் உடலில் உள்ள செக்ஸ் ஹார்மோன் பெண்ணின் வாசனை உணர்வை அதிகரித்து ஈர்ப்பது தான்.

    ஓவுலேசன் காலமாக இருந்தால், யோனியின் வாய் திறந்தும், மென்மையாகவும் இருக்கும். மேலும் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது, குறைவான வலியை உணரக்கூடும். அதுமட்டுமின்றி, ஓவுலேசன் காலமாக இருந்தால், யோனிப்பகுதி வறட்சியுடனேயே இருக்காது.

    சில பெண்களுக்கு அடிவயிற்று லேசான வலி ஏற்படும். அதுவும் இந்த வலி சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் வரை நீடித்திருக்கும். அதோடு, குமட்டல் அல்லது வெள்ளைப்படுதலுடன் வலியையும் அனுபவித்தால், அதுவும் ஓவுலேசன் காலத்தைக் குறிக்கும்.

    ஓவுலேசன் காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு யோனியில் இருந்து, இரத்தம் கலந்த நிறத்தில் வெள்ளைப்படிதல் ஏற்படும். எனவே இம்மாதிரியான அறிகுறி தென்பட்டால், ஓவுலேசன் காலம் ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம்.
    பெண்களுக்கு கருக்குழாய் கர்ப்பம் ஏற்பட காரணமும், அதனால் ஏற்படும் ஆபத்தையும், அதனை எப்படி கண்டறிவது என்பதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
    கருக்குழாய் கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும்.

    சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டிருக்கும், ஆனாலும் அந்தக்கர்ப்பம் ஆரோக்கியமானதா கர்ப்பப்பையில்தான் வளர்கிறதா என்பதை அந்தத்தாய் அறிய வாய்ப்பில்லை.

    கர்ப்பப்பையில் வளர்வதற்குப் பதில் கருக்குழாயில் வளர்ந்தால் அந்தக்கருவை காப்பாற்றமுடியாது. கவனிக்காமல்விட்டால் தாயின் உயிருக்கும் ஆபத்தாகலாம்.

    இயற்கையாக பெண்ணின் கருமுட்டையும் ஆணின் உயிரணுவும் சேர்ந்து கரு உருவாகிறது. இதை கருக்குழாயானது எடுத்துச்சென்று கர்ப்பப்பையினுள் வைக்கிறது.

    அங்கு அது வளர்கிறது. இது ஆரோக்கியமான கர்ப்பம். கருக்குழாயில் தொற்று இருந்தாலோ சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும்.

    கர்ப்பப்பை மட்டுமே கருவைத்தாங்கி அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கும் சக்தி உடையது.

    மிகவும் குறுகலான கருக்குழாயினுள் கருவானது வளரமுடியாமல் 40 முதல் 70 நாட்களுக்குள் குழாயையே வெடிக்கச்செய்துவிடும். சில நேரங்களில் கருவானது குழாயிலேயே அழுகிப்போகலாம்.

    அதுவும் தாய்க்கு ஆபத்தானது. சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டாலும் கருவானது கர்ப்பப்பையில் இருப்பதை 38 முதல் 45 நாட்களில்தான் தெரிந்துகொள்ளமுடியும்.

    அப்படித்தெரியாவிட்டால் கருக்குழாய் கர்ப்பமாக இருக்கலாம் என சந்தேகப்படலாம். இரத்தப்பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கருக்குழாய் கர்ப்பமா என கண்டுபிடிக்கலாம். கருக்குழாயில் தங்கி வளரும் குழந்தையைக் காப்பாற்றமுடியாது.

    அதை வளர விடுவது தாயின் உயிருக்கே ஆபத்தானது என்பதால் ஊசி அல்லது மாத்திரை மூலம் அதை மடியச்செய்யவேண்டும்.

    அறுவை சிகிச்சையின் மூலம் கருவை வெளியே எடுத்து கருக்குழாயை பாதுகாக்கலாம். சிலருக்கு கருக்குழாயானது அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் கருக்குழாயையும் நீக்கவேண்டி வரும்.

    இரண்டில் ஒரு கருக்குழாயை மட்டும் நீக்குவதால் அந்தப்பெண் பயப்படத் தேவையில்லை. கர்ப்பம் தரிக்க ஒரு கருக்குழாயே போதுமானது.
    போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும்.
    நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக் கேட்டதும், பலரும் இது ஆண்மை பற்றிய விவகாரம் என்று நினைக்கலாம். ஆனால், இது பெண்களுக்கான விஷயம். பெண்களுக்கு மட்டுமல்ல, வருங்கால சந்ததிகளை ஆரோக்கியமாக உருவாக்கும் அவசியமான ஒன்று. நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 3 சதவீதம் பேர், பிறவிக் கோளாறுடன் பிறக்கின்றனர்.

    இதனால் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூளையில் நீர்க்கோர்ப்பது, குடல் வெளியில் தள்ளி இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை-கால் எலும்புகள் வளராமல் இருப்பது போன்ற குறைகள் குழந்தைகளுக்கு இருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது. இந்த குறைகளில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகள் 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன. மீதி 30 சதவீத குறைகளை கண்டு பிடிக்கவே முடியாது. அதிலும் காது கேளாமல் இருப்பது போன்ற பிறவிக் கோளாறுகள் குழந்தைகள் வளர வளரத்தான் தெரிய வரும். ஸ்கேன் மூலம் உயிர் பாதிப்பு பிரச்சினைகளை மட்டும் தான் கண்டுகொள்ள முடியும் என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    சரி, பிறவிக் கோளாறு ஏற்படுவதற்கு, மரபு ரீதியான, சுற்றுச்சூழல் காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத் தண்டு பிரச்சினைகளுடன் பிறக்கும் குழந்தைகள்தான் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் இந்த குறைபாடுடன் குழந்தைகள் பிறக்க, போலிக் ஆசிட் குறைவு தான் காரணம். ஆனால், இந்தப் பிறவிக் கோளாறை பெண்கள் நினைத்தால், தங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடியும் என்கிறது, மருத்துவம்.

    மிகக் குறைவான விலையில் கிடைக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும். இந்தியா தவிர உலகம் முழுவதும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்கிறார்கள். நமது நாட்டில் கூட பருவமடைந்த வளரிளம் பெண்களுக்கு அரசுப் பள்ளிகளில் இரும்புச் சத்து மாத்திரையுடன் சேர்த்து, போலிக் ஆசிட் மாத்திரையும் இலவசமாக கொடுக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு திருமணம் என்பது 20 வயதுக்கு மேல் தானே நடக்கிறது.

    கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு போலிக் ஆசிட் மாத்திரையை மருத்துவர்கள் கொடுப்பார்கள். ஆனால், அதற்கு முன்பு கர்ப்பத்திற்கு தயாராகும் போதே பெண்ணின் உடலில் போலிக் ஆசிட் போதுமான அளவு இருந்தால், பிறவிக் கோளாறுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்க முடியும். வெளிநாட்டுப் பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் போதே போலிக் ஆசிட் மாத்திரையை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் வெளிநாட்டினர் இந்த மாத்திரைக்கு ‘என்கேஜ்மெண்ட் பில்‘ என்ற பெயரை வைத்தார்கள்.

    நமது நாட்டிலும் பெண்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற இந்த நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து கொடுத்து வந்தால், பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க முடியும். கரு உருப்பெறும் போதே, போதிய அளவு போலிக் ஆசிட் பெண்ணின் உடலில் இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்களின் ஆலோசனையோடு, ஆண்களும் தங்கள் மனைவிமார்களுக்கு சொல்லி சாப்பிட வைப்பது, பின்னாளில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்.
    கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க உதவும் சில சக்தி வாய்ந்த கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பலன் பெறுங்கள்.
    கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது என்பது சாதாரணம் தான். மலச்சிக்கலுக்கு எத்தனையோ கை வைத்தியங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் கர்ப்ப காலத்தில் மேற்கொள்ள முடியாது. கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இவற்றை சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்குவதுடன், வயிற்றில் வளரும் சிசுவிற்கும் ஆபத்து ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க உதவும் சில சக்தி வாய்ந்த கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

    ப்ளூபெர்ரி பழங்கள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை விரைவில் போக்கும். அதற்கு தினமும் 200 கிராம் ப்ளூபெர்ரிப் பழங்களை வாங்கி சாப்பிட வேண்டும். ப்ளூபெர்ரி மலச்சிக்கலைப் போக்குவதோடு, அதில் வைட்டமின் சி சத்தும் உள்ளது. இது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

    ஆளி விதையும் மலச்சிக்கலைத் தடுக்கும். அதற்கு ஆளி விதையை வறுத்து பொடி செய்து, அன்றாட உணவின் மீது சிறிது தூவி சாப்பிட வேண்டும். மேலும் ஆளிவிதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கர்ப்பிணிகள் இதை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

    சிலருக்கு வெதுவெதுப்பான நீர் நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பருகினால், உடனடியாக கர்ப்ப கால மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.

    உலர்ந்த முந்திரிப் பழமும் மலச்சிக்கலுக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு பாதுகாப்பான உணவுப் பொருள். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால், தீவிர மலச்சிக்கல் உடனடியாக விலகும்.
    கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பார்க்கலாம்.
    தாய்மை என்று வரும் போது, சரியாக சாப்பிட வேண்டியது அவசியம். கர்ப்ப காலத்தில் சரியான சத்துக்கள் நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும்.

    ஒருவேளை நீங்கள் கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால், முதலில் பாதிக்கப்படப்போவது வயிற்றில் வளரும் குழந்தை தான். எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டாவது கர்ப்பிணிகள் நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்ப காலத்தில் பெண்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து காண்போம்.

    கர்ப்பிணிகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால், ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைக்கு பல்வேறு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்படும். இன்னும் சில சமயங்களில், ஊட்டச்சத்து குறைபாடு குழந்தையின் மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகவே கர்ப்ப காலத்தில் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

    கர்ப்பிணிகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருந்தால், அதனால் கருவில் வளரும் சிசு இறக்கும் வாய்ப்புள்ளது. இது மிகவும் அரிது தான். இருப்பினும், இம்மாதிரியான நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதால், கர்ப்பிணிகள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் போதிய ஊட்டச்சத்துக்களுடன் இல்லாவிட்டால், பிறக்கும் குழந்தை மிகவும் எடை குறைவில் பிறக்கும். குழந்தை பிறக்கும் போது சரியான உடல் எடையில் இல்லாமல், ஒரு வருடம் வரையிலும் அப்படியே இருந்தால், அக்குழந்தை விரைவில் இறக்கும் வாய்ப்புள்ளது.

    கர்ப்பிணிகளின் உடலில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் குறைவாக இருந்தால், அது குழந்தையின் வளர்ச்சியையும் தாமதமாக்கும். ஏனெனில் குழந்தையின் வளர்ச்சிக்கு போதிய சத்துக்கள் இல்லாவிட்டால், குழந்தை எப்படி ஆரோக்கியமாக வளர்ச்சி பெற முடியும்.

    பெண்கள் கர்ப்ப காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால், போதிய சத்துக்கள் மற்றும் கலோரிகள் கிடைக்காமல், குறைப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் 2200 கலோரிகளையும், 2 மற்றும் 3 ஆவது மூன்று மாத காலத்தில் 2300-2500 கலோரிகளையும் உட்கொள்ள வேண்டும்.

    தினமும் குறைந்தது மூன்று வேளையாவது தவறாமல் சாப்பிடுங்கள். இதனால் குழந்தைக்கு சீரான அளவில் சத்துக்கள் கிடைத்து, குழந்தையின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும்.
    ×