என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    மதுவை அருந்தும் பெண்களுக்கு அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம்.
    'ஆல்கஹால்' நிரம்பிய மதுவை அருந்தும் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. என்ன   விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம்.

    ஆண்கள் வீதிக்கு வந்து குடித்தால், பெண்களில் பலர் வீட்டிலேயே குடிக்கிறார்கள். உயர்ந்த அந்தஸ்திலுள்ள பல பெண்களும், 'பார்ட்டி' என்று வரும்போது, 'குடிக்க' ஆரம்பிக்கத் தொடங்கி, அதற்குப் பழகி, பிறகு அடிமையாகி விடுகிறார்கள்.

    கூலி வேலை பார்ப்பவர்களோ, வேலை பளுவின் காரணமாக ஏற்படும் உடல்வலி, அசதியைப் போக்க குடிக்கிறேன் என்று கூறுகிறார்கள். காரணங்கள் எதுவாக இருந்தாலும், சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் இன்று பெண்களில் பலரும் குடிக்கிறார்கள். அது மட்டும் உண்மை.

    அதே போல, பெண் 'கர்ப்பமாகி விட்டால்' குடித்தால் என்னவாகும் என்பது தான் பிரச்சினை!

    கர்ப்பமான பெண்கள் ஏற்கனவே மதுவிற்கு அடிமையாகி இருந்தால் அதைத் தவிர்க்க முடியாமல் குடிப்பதுண்டு. சில குடும்பங்களில் கர்ப்பமாகும் போது ஏற்படும் வயிற்றுவலி, இடுப்பு வலி ஆகிய தொந்தரவுகளைப் போக்குவதற்காகக் குடிப்பார்கள். இது பிரசவத்திற்கு முன்பும் உண்டு. பிரசவமான பிறகும் உண்டு.

    'ஆல்கஹால்' மனித உடலில் பல்வேறு வினைகளை உண்டு பண்ணி விளைவுகளை ஏற்படுத்துவதால், அதையும் ஒரு மருந்தாகத் தான் மருத்துவரீதியில் கருத வேண்டியுள்ளது. பல்வேறு திரவ மருந்துகளிலும், பசியைத் தூண்ட 'ஆல்கஹாலை' குறிப்பிட்ட அளவிற்கு சேர்ப்பது உண்டு. எனவே, இவற்றைப் பருகுவதாலும் கர்ப்பமடைந்த பெண்ணின் 'கரு' பாதிக்கப்பட்டு விடும்.

    ஆக, கர்ப்பமடைந்த பெண்கள் இன்று மது (ஆல்கஹால்)வினால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். மது, மாதுவினால் ஆபத்து ஏற்படும் என்பார்கள். ஆனால், இங்கோ மதுவினால் மாது ஆபத்தாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள்.

    மது, பல வகைகளில் மனித உடலைப் பாதிக்கிறது. குடலை பாதித்து 'புண்களை' ஏற்படுத்துகிறது. மூளை, நரம்பு மண்டலங்களை பாதிக்கிறது. இரத்த செல்களைப் பாதிக்கிறது. கணையம், கல்லீரல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. இப்படி கர்ப்பிணியின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும் போது, இவை ஒட்டுமொத்தமாக அவளது உடலை பாதித்து கருவையும் பாதிப்படையச் செய்கிறது! அது மட்டுமல்லாமல் 'ஆல்கஹால்' தனியாகவும் கருவையும் பாதிக்கிறது.

    கர்ப்பம் தரிக்கும் முன்பாக பெண் மது அருந்தினால், அவளுக்கு 'மாதவிடாய்' ஏற்படுவதே சரியாக ஏற்படாது. கருத்தரிப்பே நடக்காமல் பல பெண்களும் 'மலடி'யாகிவிட வாய்ப்புகள் உண்டு. கர்ப்பம் தரித்த பிறகு மது அருந்தினால் பெண்களுக்கு 'கருச்சிதைவு' ஏற்படும்.

    'சிசு ஆல்கஹால் பாதிப்பு' என்றே இந்த பாதிப்பிற்கு (FETAL ALCOHOL SYNDROME) பெயர் வைத்துள்ளார்கள்.

    இந்த பாதிப்பினால், முகம் விகாரமாக இருக்கும். 'எனாமல்' உருவாகாத பல்லுடன் குழந்தை பிறக்கும். இதய அறை சுவர்களுக்கிடையே ஓட்டை உருவாகி இருக்கும். மூட்டுகளில் பாதிப்பு ஏற்படும். தலை சிறியதாக இருக்கும். மூளை பாதிக்கப்பட்டு, அறிவுத்திறன் குன்றியதாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எந்த அந்தஸ்தில் இருந்தாலும், எந்த ரூபத்திலும் மதுவை நாடாமல் இருக்க வேண்டும்.
    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் அல்ல மனம் சார்ந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
    மிக அதிக ஆர்வத்தோடு செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். சிலருக்கு உடல்ரீதியாகவும், சிலருக்கு மனரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும். இந்தப் பிரச்னைக்கு `Sexual burnout condition’ என்றுபெயர். ஏதாவது ஒரு விஷயத்தில் அதீத ஆர்வமும், அதிக ஈடுபாடும் கொண்டிருந்தால் காலப்போக்கில் அதன் மீது சலிப்பு வந்துவிடும். இதை `Emotional fatique’ என்று சொல்வோம்.

    தாம்பத்திய உறவு என்பதே பாலியல் கவர்ச்சி சார்ந்துதான் இருக்கிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையும் போது, மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும். மனைவி சிறிய தவறு செய்தால் கூட அதை பெரிய விஷயமாக்கி சண்டை போடுவார்கள். மனைவியிடம் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.

    இந்தப் பிரச்னையை எப்படி சமாளிப்பது? முதலில் ஆண்கள் விஷயத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறவுக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம். செக்ஸ் தவிர மனைவியிடம் சந்தோஷமாக இருக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. மனநிலையை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். சில நாட்கள் இவ்வித கட்டுப்பாட்டுடன் இருந்தால், இயல்பாகவே செக்ஸ் ஆசையானது ஒருநாள் கிளர்ந்தெழும்.

    அதனால் கவலைப்பட தேவையில்லை.மனைவியும் இந்தப் பிரச்னை கணவனிடம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான நேரங்களில் கணவனை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதரவாக செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் விடும் சிறிய இடைவெளியானது, தாம்பத்திய உறவை பெரிய அளவில் பலப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் செக்ஸ் உறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். செக்ஸ் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல… மனமும் சார்ந்தது!
    பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள். சிறுநீரக கற்கள் வருவதற்கு முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது தான் காரணம்.
    சிறுநீரக கற்கள் என்பது பொதுவான பிரச்சனை அல்ல. சிறுநீரக கற்கள் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதனைக் கரைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் நீக்க முடியும்.

    அதிலும் பெண்கள் தான் சிறுநீரக கற்களால் அதிகம் கஷ்டப்படுவார்கள். சிறுநீரக கற்கள் வருவதற்கு முறையற்ற டயட் மற்றும் அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகளை உண்பது தான் காரணம். அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமாக கால்சியம் நிறைந்த மாத்திரைகளை எடுத்து வந்தாலும், சிறுநீரக கற்கள் உருவாகும். சிறுநீரக கற்கள் வந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும். ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக வருவதால், அதனை பலரும் பொருட்படுத்தாமல் இருந்துவிடுவர். இப்போது பெண்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

    * சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இருந்தால், அதனை சாதாணமாக நினைக்காமல், உடனே அதனை பரிசோதித்து, சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

    * உங்களுக்கு திடீரென்று குமட்டல் வர ஆரம்பிக்கிறதா? அதிலும் அதிகப்படியான காய்ச்சல் இருந்து குமட்டல் வந்தால், உங்கள் சிறுநீரகங்களில் கற்கள் உள்ளது என்று அர்த்தம். கழிக்கும் சிறுநீர் தெளிவின்றி இருந்தால், அதுவும் சிறுநீரக கற்களுக்கான அறிகுறி. மேலும் தெளிவற்ற சிறுநீர், சிறுநீர் பாதையில் தொற்று இருப்பதையும் குறிக்கும். எனவே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தை போக்கிக் கொள்ளுங்கள்.

    * குமட்டல், தெளிவற்ற சிறுநீர் போன்றவற்றுடன் காய்ச்சல் அதிகம் இருந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே மருத்துவரை சந்தித்து போதிய சிகிச்சையைப் பெறுங்கள்.

    * அடிக்கடி தெளிவற்ற சிறுநீருடன், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்தித்தால், உடனே சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டு, உங்கள் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.

    * வழக்கத்திற்கு மாறாக பிறப்புறுப்பைச் சுற்றி மற்றும் முகத்தில் வியர்வை அதிகமாக வெளியேறினால், அதனை சாதாரணமாக நினைக்காமல், உடனே இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

    * சிறுநீர் கழிக்கும் போது, அத்துடன் இரத்தம் வெளியேறினால், சிறுநீரக கற்கள் சிறுநீரகங்களில் காயங்களை ஏற்படுத்தி, அதனால் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

    * பிறப்புறுப்பைச் சுற்றி அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டால், அதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீர் கழிக்கும் போது கற்கள் சிறுநீர் வடிகுழாய் வழியே நகர்வதால் தான் பிறப்புறுப்பைச் சுற்றி வலி ஏற்படுகிறது.

    * சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறதா? அதுவும் சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியே. அதிலும் அந்த எரிச்சலானது சிறுநீர் கழித்து 5-10 நிமிடங்கள் வரை இருக்கும்.

    – பெண்களே இத்தகைய அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது.
    கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம்.  திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும்.

    முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

    தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும்.  நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.

    மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச்சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியம்  புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது.

    அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும்.

    சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.  ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார்.

    ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு.

    அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.

    படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும்.

    உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும். கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும்.

    தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும்.

    குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.

    ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார்.

    கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும்.

    சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை.

    முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத்தரிக்கலாம் என்பதே நிதர்சனம். பொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள் .85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

    சிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.

    எனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.  இதற்காக ஒரு பெண் தனது மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.
    பெண்களை எளிதில் உணர்ச்சி வசப்படச் செய்வது எப்படி என்ற தாரக மந்திரம் தற்போது தெரியவந்துள்ளது. அதை கீழே விரிவாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    இந்த உலகில் ஆண்களுக்கு, பெண் துணை இல்லாமல் வாழ்க்கை நடத்துவதில் இனிமை இருக்காது. அது போல், பெண்களும் ஆண் துணை இன்றி வாழ்வது அவ்வளவு இனிமை தராது.
     
    உறவு என்பது இருவரின் மீதுள்ள காதலினால் வெளிப்பட வேண்டும். மாறாக, உரிமை என்ற பெயரில் ஆண் ஆதிக்கம் கூடாது. பெண்களை மலர் போல் பாவிக்க வேண்டும். அப்போது தான் பள்ளியறையில் ஆண்கள் வெற்றி பெற முடியும்.
     
    செயல்களில் ஆண்கள் சரியாக ஈடுபட வேண்டும்… கட்டுப்பாடும், ஒழுக்கமும் ஆண் தான் உடலுறவில் ஈடுபடுவதில் சிறந்தவன் என என்றும் எண்ணிவிட வேண்டாம். ஆண்களை விட பெண்கள் தான் உறவில் சிறந்து ஈடுப்படக் கூடியவர்கள் என ஆராய்ச்சிகளின் மூலமாகவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். என்ன தான் உறவில் ஈடுபடுவதில் இருவருக்கும் ஆசை இருப்பினும், உங்கள் துணை மீது உங்களுக்கு முழு உரிமை இருப்பினும் கூட, கட்டுப்பாடும் ஒழுக்கமும் மிகவும் அவசியமானது.
     
    குறிப்பாக, ஆண்கள் பெண்களை அந்த நேரத்தில் உறவு கொள்ளும் முன்பும், அதில் ஈடுபடும் போதும், தங்கள் துணையை அடிமை போல் நடத்தக்கூடாது. தங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்க கூடாது. அவர்களது கருத்து அறிந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
     
    அடுத்து, பெண்களை அவர்கள் உடலை தொடுவது மூலமே அவர்கள் விரைவாக உணர்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. பெண்களின் உடல் பாகங்களில் சில முக்கிய இடங்களை ஆண்கள் தொடும்போது அவர்கள் எளிதாக உணர்ச்சி அடைந்துவிடுவார்கள். அந்த இடத்தை தெரிந்துவைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இடம் மாறுபடும்.
     
    மேலும், பெண்களை உடலளவில் நெருக்குவதைவிட, மனதளவிலும் முதலில் தொட வேண்டும். பெண்ணை ஆண் கொஞ்சி விளையாடுதல் மூலம் இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளி குறைந்து இறுக்கம் தளர்கிறது. இன்பம் அதிகரிக்கிறது. உறவுக்கு பின்பும்கூட கொஞ்சல் செய்வதை பெண்கள் விரும்புவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு ஆரம்பித்தாலே, அந்த செயல்பாடுக்கு முழு இன்பம் கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
    பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். பப்பாளியை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று பார்க்கலாம்.
    கர்ப்பமாக இருக்கும் போது எந்த உணவை சாப்பிட்டாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் எதையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து பின்னரே சாப்பிட வேண்டும். ஏனெனில் வயிற்றின் உள்ள சிறு கரு வளர்கிறது. ஆகவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதில் முக்கியமாக பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்களும், முன்னோர்களும் சொல்வார்கள். இப்போது அந்த பப்பாளியை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? என்று பார்க்கலாம்.

    பப்பாளியின் பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடலாம் என்று நிறைய பேர் சொல்வதோடு, மருத்துவர்களும் சொல்கின்றனர். ஏனெனில் அதில் வைட்டமின் ஏ மற்றும் பி, பீட்டா-கரோட்டீன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான சத்துக்கள். மேலும் இந்த பழத்தை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும்.

    பப்பாளியின் காயை கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லதல்ல என்று பிரிட்டிஷ்ஷில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இதில் உள்ள பெப்சின் என்னும் பொருள், கருப்பைக்கு சுருக்கத்தை ஏற்படுத்தி கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் பாப்பைன் கருவின் வளர்ச்சியை குறைத்து, கருவிற்கு செல்லும் அனைத்து சத்துக்களையும் தடுத்துவிடும். மேலும் கர்ப்பத்தில் பிரச்சனைகள் இருந்து கர்ப்பமானவர்கள், இந்த பப்பாளியை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

    கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கருவை அழிப்பதை விட, பப்பாளியின் காயை சாப்பிட்டு வந்தால், கரு உருவாகாமல் தடுக்கலாம். ஏனெனில் பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் பொருள் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் சாப்பிட்டால், அதில் உள்ள லாடெக்ஸ் நிச்சயம் கர்ப்பத்தை கலைத்துவிடும். அதுவே கர்ப்பமாக இருக்கும் போது சற்று தாமதமாக இந்த பப்பாளியை சாப்பிட்டால், குறை பிரசவத்தில் குழந்தை பிறக்கும்.

    நிறைய பெண்களுக்கு பப்பாளி அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் அலர்ஜிக்கு லாடெக்ஸ் அலர்ஜி என்று பெயர். இந்த அலர்ஜியால் பாதிக்கப்பட்ட பெண்கள், இதை பார்த்தாலே அவர்களுக்கு அந்த அலர்ஜி வேலை செய்ய ஆரம்பித்துவிடும். மேலும் இந்த அலர்ஜி உள்ள பெண்கள், வாழைப்பழம், கோதுமை மற்றும் ஆப்பிள் போன்றவற்றை கூட சாப்பிட முடியாத நிலையில் பாதிக்கப்படுவர். ஆகவே பப்பாளி பழமாக இருந்தாலும் சரி, காயாக இருந்தாலும் சரி, கர்ப்பிணிகள் இதை முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பானது. அதிலும் இந்த பப்பாளியை சாப்பிட வேண்டுமென்றால், உங்கள் மருந்துவரை அணுகி பின்னர் சாப்பிடுங்கள்.
    கர்ப்ப காலத்தில் அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு பயணக் களைப்பு, மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும்.
    அலுவலகத்துக்குச் சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக் களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் என்பதும் சற்றுப் பிரச்னைதான். வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்''

    கர்ப்பக் காலத்தில் செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்கும். குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகிக்கொண்டே போகும். இதனால், ஒரே நேரத்தில் நன்றாகச் சாப்பிட முடியாது. ஆனால், இந்தத் தருணத்தில்தான் உடலுக்கு அதிக அளவு சத்துக்கள் தேவைப்படும். எனவே, மூன்று வேளை என்பதை, சிறிது சிறிதாகப் பிரித்து ஆறு வேளைகளாகச் சாப்பிடுங்கள். சரியான நேரத்தில், போதிய இடைவெளியில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கும் என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

    வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப் பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது நல்லது. முடியாத பட்சத்தில் ஜூஸாகச் செய்து சாப்பிடலாம். உடல் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.

    எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என 12 டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது.

    உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களைக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலைச் சுமையின்போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

    நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். இதனால், சிசுவின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டைவைத்துக் கொண்டு, வயிற்றைக் காயப்போடாமல், பசிக்கும்போது சாப்பிடுவது அவசியம்.

    இரவில் ஆவியில் வேகவைத்த அல்லது எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

    நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், வறுத்த, பொரித்த, அதிகம் காரம், எண்ணெய் உணவுகளைச் சாப்பிடக் கூடாது.

    அலுவலகத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது. கடினமான உடற்பயிற்சிகள், அதிக எடைகொண்ட பொருள்களைத் தூக்குவது போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

    அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில் காலாற சிறிது நேரம் நடக்கலாம். கடின வேலைகளைத் தவிர்த்து, முடிந்தவரை கர்ப்பக் காலத்தில் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.
    மாதவிடாய் காலங்களில் நாப்கினை பயன்படுத்துவது பற்றி பெண்கள் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
    சாதாரணமாகவே பெண்களுக்கு பிறப்புறுப்பு பகுதியில் எளிதாக நோய்கிருமி தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதில், மாதவிடாய் காலங்களில் நாப்கினை சரியான முறையில் பயன்படுத்தாமல் இருப்பதனால் தொற்றுகள் அதிகமாக ஏற்படும். இனி, நாப்கின் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை பற்றி பார்க்கலாம்

    சிலர் நாப்கினை மட்டும் மாற்றும் பழக்கத்தை வைத்திருப்பார்கள், இது மிகவும் தவறு. மாதவிடாய் காலங்களில் பிறப்புறுப்பை நன்கு கழுவுதல் அவசியம். வெளிவரும் இரத்தப்போக்கு அவ்விடத்தில் தங்கவிடக்கூடாது.

    மாதவிடாய் காலங்களில் உங்கள் பிறப்புறுப்பை சோப்பு பயன்படுத்தி கழுவாமல், வெறும் நீரை மட்டுமே பயன்படுத்தி கழுவுவது தான் சரியான முறை என்று கூறப்படுகிறது. ஏனெனில், சோப்பு கிருமிகளை கொன்றாலும், தொற்று ஏற்பட காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    வீடாக இருந்தாலும் சரி, வெளியிடங்களாக இருந்தாலும் சரி, உங்களது நாப்கினை அகற்றும் போது, நன்கு காகிதத்தில் சுற்றி குப்பைத் தொட்டியில் எறியவும். இல்லையேல், அது கிருமிகள் பரவ காரணமாகிவிடும்.

    பெரும்பாலும் உங்களுக்கு ஏற்றதாகவும், மென்மையானதாக இருக்கும் நாப்கின்களை தேர்ந்தெடுங்கள். இல்லையேல், பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.

    மாதவிடாய் காலங்களில் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்த்திடுங்கள். இது அசௌகரியமாக உணர வைக்கும். மற்றும் அந்த இறுக்கம் சீரான இரத்தப்போக்கை தடுக்கும்.

    மாதவிடாய் காலங்களில், ஒருவேளை அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டால், ஒரே நாப்கினை நீண்ட நேரம் பயன்படுத்தக் கூடாது. இது நிறைய சரும பிரச்சனைகளை உண்டாக்கும். சரும தடுப்புகள், அரிப்பு, சிறுநீர் பாதை நோய் தொற்று இடங்களில் தொற்று போன்றவை ஏற்படும். நாப்கினை உபயோகப்படுத்தும் போது பிறப்புறுப்பு இடத்தில் ஈரம் இல்லாமல் நன்குதுடைத்த பிறகு பயன்படுத்துங்கள்.

    அதில் எல்லாம் விழிப்புணர்வு அதிகம் தேவையோ, அதில் எல்லாம் தான் நாம் சுத்தமாக விழிப்புணர்வின்றி இருப்போம். உதாரணமாக சொல்ல வேண்டுமானால், ஆணுறை, நாப்கின் போன்ற உடல்நலன் சார்ந்த பொருட்கள். அசிங்க, அசிங்கமாக கொச்சை வார்த்தைகளில் திட்டுவதற்கு கூட கூச்சப்படாதவர்கள் ஆணுறை மற்றும் நாப்கின் பற்றி பேச கூனிக்குறுகுவார்கள்.
    கர்ப்ப காலத்தில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவது முதுகுவலி. அமரும் முறை, நிற்கும் நிலை ஆகியவற்றை கவனமாக கையாளுதல் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம்.
    உங்கள் முதுகெலும்பில் மாற்றங்கள் :

    கர்ப்ப காலத்தில் உடல் சமநிலையை தக்கவைத்துக் கொள்ள உங்கள் முதுகெலும்பின் இயல்பான வளைவுகள் இன்னும் அதிகரிக்கின்றன. மார்புப் பகுதியில் பின்னோக்கியும் வயிற்றுப் பகுதியில் முன்னோக்கியும் இவ்வளைவுகள் அதிகரிக்கின்றன. இது அடிவயிற்றின் இடையை சமாளிப்பதற்காக இயற்கையாகவே நிகழ்கிறது.

    இதய எரிச்சலில் இருந்து விடுபட...

    இந்த உடற்பயிற்சி இதய எரிச்சல் மற்றும் நெஞ்சடைப்பில் இருந்து நிவாரணம் தரும்.

    1. சுவரிலிருந்து சுமார் 30 செ.மீ. (12 இன்ச்) தள்ளி முட்டிக்கால் இட்டுக் கொள்ளுங்கள். உங்கள் முழங்கால்கள் சற்று விலகி இருக்கட்டும்.

    2. உங்கள் கைகளை உயர்த்திக் கொண்டு முன்னோக்கி லேசாக சரிந்து உங்கள் உள்ளங்கைகளை சுவரின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். கைகளை மடக்காமல் நேரே வைத்துக்கொண்டு இயல்பாக சுவாசியுங்கள். இப்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு 10 வரை எண்ணுங்கள். இதை படிப்படியாக அதிகப்படுத்துங்கள்.

    (குறிப்பு: இப்பயிற்சி செய்யும்போது முதுகில் எந்தவித பளுவையும் நீங்கள் உணரக்கூடாது. தோள்களிலும் கைகளிலும் மட்டும் உணர வேண்டும். அதற்கேற்றவாறு உங்கள் உடலின் நிலை இருக்க வேண்டும்).

    முதுகுவலி :

    கர்ப்ப காலத்தில் மிகப்பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுவது முதுகுவலி. உங்களது அமரும் முறை, நிற்கும் நிலை ஆகியவற்றை கவனமாக கையாளுதல் மூலம் முதுகுவலியைத் தவிர்க்கலாம். சில எளிய பயிற்சிகளும் வலியிலிருந்து விடுதலை தரும்.

    1. கை மற்றும் கால்களைத் தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள். உங்கள் முதுகின் மீது ஒரு கண்ணாடித் தட்டை நீங்கள் நிலை நிறுத்தியிருப்பதாக கற்பனை செய்து கொண்டு முதுகை நேராக வையுங்கள். இப்போது உங்கள் சுவாசத்தைப் பிடித்துக்கொண்டு முதுகுத் தசைகளாலேயே அந்தத் தட்டை உந்தித் தள்ள வேண்டும். இது உங்கள் அடிவயிற்றுத் தசைகளை மேல்நோக்கி இழுத்தாலே முடியும். மீண்டும் சமநிலைக்குத் திரும்பி இப்பயிற்சியை 6 முதல் 8 முறை செய்யுங்கள். ஒவ்வொரு நிலையையும் 5 நொடிகளுக்கு மாறாமல் வைத்திருங்கள்.

    2. சுவரைப் பார்த்து நின்று கொண்டு ஒரு காலின் முன்னால் மறுகாலை வைத்து நில்லுங்கள். கைகளை மடித்து முழங்கை முனைகளால் சுவரைத் தொடுங்கள். இவ்வாறு செய்யும்போதே சற்றே முன்னால் சரிந்து உங்கள் உள்ளங்கைகளை தலைக்குப் பின்னால் கொடுத்து விட்டு அடிவயிற்றைப் பின்னால் இழுத்துக் கொள்ளுங்கள். 5 வரை எண்ணுங்கள், பிறகு சமநிலைக்குத் திரும்புங்கள். இதே போல் 6 முதல் 8 முறை செய்யுங்கள். பிறகு அடுத்த காலை முன்னால் வைத்து மீண்டும் இதே பயிற்சியை செய்யுங்கள்.

    3. ஒவ்வொரு தோள்பட்டையையும் முன்னால் திருப்பி 5 முறை பின்னால் திருப்பி 5 முறை பயிற்சி செய்வது, மேல் முதுகு வலியைப் போக்கும் (கனமான மார்பகங்கள் முதுகுவலியை உண்டாக்கும் - உங்கள் பிரா போதுமான அளவு தாங்குகிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்).

    பின்வருபவை ஏற்படும் பட்சத்தில் உங்கள் மருத்துவரை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்...

    *  மிகச்சிவந்த நிறத்தில் பிறப்புறுப்பிலிருந்து ரத்தக்கசிவு...
    *  தண்ணீர் குடத்திலிருந்து கசிவது (திடீரென வருவது அல்லது மெல்லக் கசிவது)...
    *  அடிவயிறில் அல்லது பக்கவாட்டில் நிலைத்திருக்கும் வலி...
    *  கண்கூசும் ஒளிவிளக்குகளைக் காணும்போது - இருளும் அல்லது மங்கலாகும் பார்வை, மோசமான தலைவலி, தலை சுற்றல், முகம் அல்லது உடல் வீக்கம்...
    *  குளிர்க்காய்ச்சல்...
    *  சிறுநீர் கழிக்கையில் வலி...
    *  சிசு அசையாமல் இருப்பது...
    கருத்தரிக்கும் போது, மாதவிடாய் காலங்களில், மாதவிடாய் நிற்கும் தருவாய் என பெண்களின் வாழ்க்கையில் 15 வயதில் இருந்து 45 வயது வரை பல்வேறு மாற்றங்கள் நீடிக்கும்.
    பெண்களிடம் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு மாற்றங்கள் உண்டாகும். இதற்கு காரணம் ஆண்களை காட்டிலும், பெண்களின் உடலில் தான் அதிக ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகின்றன. வயதுக்கு வரும் போது, கருத்தரிக்கும் போது, மாதவிடாய் காலங்களில், மாதவிடாய் நிற்கும் தருவாய் என பெண்களின் வாழ்க்கையில் 15 வயதில் இருந்து 45 வயது வரை இது போன்ற மாற்றங்கள் நீடிக்கும். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் 10 - 20 வருடங்கள் கணவனுடன் கழிக்கிறார்கள். இந்த வயதுகளில் பெண்களிடம் மாற்றங்கள் தென்படும் போது, கணவன்மார்கள் அவர்களை மிகுந்த அன்புடனும், அனுசரிப்புடனும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

    நாற்பது வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்க ஆரம்பிக்கும் 45 - 50 பெரும்பாலானவர்களுக்கு மாதவிடாய் நின்றுவிடும். ஒருசிலருக்கு அரிதாக 55 வயதுகளில் மாதவிடாய் நிற்கலாம். இதன்பால் தான் பெண்களிடம் அதிக மனநல மாற்றங்கள் உண்டாகின்றன.

    பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மூட்ஸ்விங் எனப்படும் மனநல மாற்றங்கள் அதிகரிக்கும். இது மாதவிடாய் முற்றிலுமாக நிற்கும் காலத்தில் அதிகமாக இருக்கும். அவசியமின்றி கோபப்படுவார்கள். அளவுக்கு மீறி அழுவது, சோகமாக காணப்படுவது போன்றவை இருக்கும்.

    திடீரென இன்பமாக இருப்பது, திடீரென சோகமாக மாறுவது போன்ற நிகழ்வுகளும் உண்டாகும். இது இயல்பு தான். மாதவிடாய் நின்ற சில காலத்தில் இவர்கள் தானாக சரியாகிவிடுவார்கள். இதற்காக தனியாக மருத்துவம் அல்லது மருந்துகள் என்று தீர்வுக் காண செல்ல தேவை இல்லை.

    இந்த நேரத்தில் பெண்களுக்கு தேவையான ஒன்று அனுசரித்து போவது தான். கணவர்கள் அவர்கள் கோபப்படும் போதோ, சோகமாக இருக்கும் போதோ திட்டாமல், அவர்களை அனுசரித்து, நீங்கள் அவர்களை பக்குவப்படுத்தி செல்ல வேண்டும்.

    எதிர்த்து நீங்கள் கோபப்படுவது அவர்களின் மனதை மேலும் புண்படுத்தும், அதிக தாக்கத்தை உண்டாக்குமே தவிர, தீர்வை அளிக்காது. பதில் தெரிந்தே ஆகவேண்டும், ஏன் சோகமாய் இருக்கிறாய், கோபப்படுகிறாய் என கேள்விகள் கேட்காமல், நீங்களாகவே இதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

    அதிக அன்பை வெளிப்படுத்துங்கள். உண்மையில், இந்த மாதவிடாய் காலத்தில் இருந்து வெளிவந்த பிறகு, மனைவி உங்கள் மீது அதிக அன்பை வெளிப்படுத்துவார். எனவே, அவர் அவதிப்படும் அந்த காலத்தில் நீங்கள் செலுத்தும் அன்பு இரட்டிப்பு மடங்காக உங்களுக்கே திரும்ப வரும்.
    கருவானது சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து திராட்சைக் கொத்து மாதிரி கர்ப்பப்பையை நிறைத்தாலோ, அதை முத்துப்பிள்ளை கர்ப்பம் என்கிறோம்.
    மாதவிலக்கு தள்ளிப் போவது முதல் வாந்தி மயக்கம் வரை கர்ப்பம் தரித்திருப்பதற்கான அத்தனை அறிகுறிகளும் இருக்கும்... ஆனால், அது ஆரோக்கியமான கர்ப்பமே இல்லை என ஒருநாள் அந்தக் கர்ப்பிணியின் கனவுகள் கருகிப் போனால்..? முத்துப்பிள்ளை கர்ப்பம் எனப்படுகிற பிரச்னையில் இப்படியொரு சோகம் நிகழும். அதென்ன முத்துப்பிள்ளை கர்ப்பம்? அதற்கான காரணங்கள்... அதன் பின்னணியில் உள்ள பயங்கரங்கள்...

    பெண்ணின் கருமுட்டையும், ஆணின்  உயிரணுவும் சேர்ந்து கருத்தரித்ததும், அது சாதாரண கர்ப்பமாக உருவாவதுதான் இயல்பு.

    அப்படிக் கருத்தரித்த கருவானது சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து  திராட்சைக் கொத்து மாதிரி கர்ப்பப்பையை நிறைத்தாலோ, அதை முத்துப்பிள்ளை கர்ப்பம் என்கிறோம். அதாவது, கட்டி மாதிரியான ஒரு தோற்றம்... ஆனாலும், புற்று நோயில்லாத கட்டி.

    முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் 2 வகைகள் உள்ளன. ஒன்று முழுமையானது. இன்னொன்று பார்ஷியல் [partial] எனப்படுகிற பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பம்.

    முழுமையான முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் கருவே இருக்காது, நஞ்சு மட்டும் அசாதாரணமாக இருக்கும். பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் ஒரு அசாதாரண கரு உருவாகியிருக்கும். ஆனால், அது பிழைக்காது. நஞ்சிலும் கொஞ்சம் சாதாரணமானதும், கொஞ்சம் அசாதாரணமானதுமான திசுக்கள் காணப்படும். 1,200 அல்லது 1,500 கர்ப்பங்களில் ஒன்று இப்படி முத்துப்பிள்ளை கர்ப்பமாக வாய்ப்பு உண்டு.

    காரணங்கள்...

    மரபணுக் கோளாறு முதல் காரணம். சாதாரண மனித செல்களில் அம்மாவிடமிருந்து ஒன்றும், அப்பாவிடமிருந்து ஒன்றுமாக 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும்.

    முழுமையான முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் 23 ஜோடிகளுமே அப்பாவிடமிருந்து வந்ததாகவும், அம்மாவுடைய குரோமோசோம்கள் செயலிழந்தவையாகவும் இருக்கும். அதுவே பகுதி முத்துப்பிள்ளை கர்ப்பத்தில் அப்பாவிடமிருந்து 46 குரோமோசோம்களும், அம்மாவிடமிருந்து
    23 குரோமோசோம்களுமாக மொத்தம் 69 குரோமோசோம்கள் இருக்கும்.

    35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களுக்கு முத்துப்பிள்ளை கர்ப்பமாக 2 மடங்கு வாய்ப்புகள் அதிகம். 40 வயதுக்கு மேல் அது 5 மடங்கு அதிகம். முதலில் ஒரு முத்துப்பிள்ளை கர்ப்பம் தரித்திருந்தால், அடுத்த கர்ப்பமும் அப்படியே உருவாக 1.2 முதல் 1.4 சதவிகிதம் வரை வாய்ப்பு உண்டு.

    அதுவே 2 முறைகள் முத்துப்பிள்ளை கர்ப்பம் தரித்திருந்தால் மூன்றாவது கர்ப்பமும் அப்படியே நிகழ 20 சதவிகிதம் வாய்ப்பு உண்டு.
    பெண்களின் வாழ்வில் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு பின்னான காலங்களில் தான் உடலிலும், மனதிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும்.
    பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாகிக் கொண்டிருப்பதும் தான். பெண்களின் வாழ்வில் கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு பின்னான காலங்களில் தான் உடலிலும், மனதிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படும்.

    இக்காலங்களில் பெண்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபட விருப்பம் மனதில் இருந்தாலும், சில நேரங்களில் முடியாமல் தவிப்பார்கள். இங்கு பிரசவத்திற்கு பின் மீண்டும் உடலுறவில் ஈடுபடுவதில் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பிரசவத்திற்கு பின் பெண்களால் மீண்டும் கணவருடன் உறவில் ஈடுபட முடியாமல் போவதற்கு, உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இறுக்கமான மனநிலையில் இன்னும் இருப்பதும் தான் காரணம்.

    குழந்தை பிறந்த பின் பெண்கள் பல முறை உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்சனையை சந்திப்பார்கள். இதற்கு பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி இன்னும் இருப்பது தான். அதிலும் சிசேரியன் செய்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

    பிரசவத்திற்கு பின் பெண்களின் மார்பகங்கள் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், மார்பகங்களில் இருந்து பால் வடியும். இதன் காரணமாக முன் விளையாட்டுக்களில் ஈடுபட்டால், கடுமையான வலியை உணரக்கூடும்.

    பிரசவத்திற்கு பின் பெண்கள் உறவில் ஈடுபடுவதில் சிரமத்தை அனுபவிக்க காரணம், பிரசவத்தினால் யோனியில் சுவர்கள் விரிவடையும். யோனி சுவர்கள் இறுக்கமாக இருந்தால் தான், உறவில் இன்பத்தைக் காண முடியும்.

    பிரசவத்திற்கு பின்னான உடல் பருமன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள், தளர்ந்த சருமம், தழும்புகள் போன்றவை, அவர்களது அழகைக் கெடுப்பது போன்று உணர்வார்கள். இப்படி மனதில் தங்கள் அழகு குறைந்துள்ளதை நினைத்து பெண்கள் புலம்புவதாலும், உறவில் ஈடுபடுவதில் இடையூறாக இருக்கும்.

    பிரசவத்திற்கு பின் குழந்தையைக் கவனித்துக் கொள்வதிலேயே நேரம் சரியாக இருக்கும். இதில் எப்படி உறவில் ஈடுபட நேரம் இருக்கும்.
    ×