என் மலர்
பெண்கள் மருத்துவம்
மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கருத்தரிக்கும் தன்மைகள் உள்ளதா என்பது குறித்து பல சந்தேகங்கள் பெண்களுக்கு உள்ளது. அதற்கான விடையை இப்போது பார்க்கலாம்.
பெண்களின் 45 வயதுக்கு மேல் அவர்களின் உடம்பில் ஹார்மோன் சுரப்புகள் குறைவதால், மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால் அவர்கள் கருத்தரிக்கும் தன்மையை இழந்து விடுவார்கள்.
ஏனெனில் பெண்களின் மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது.ஏனென்றால் அவர்களுக்கு கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்திகள் மற்றும் உணர்ச்சிகளை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்புகள் குறைந்து விடுகிறது.
ஆனால் தற்போதைய காலத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்ற தொழில்நுட்பம் காரணமாக இன்றைய காலத்தில் உள்ள பெண்களின் குழந்தை பேறுக்கு என்று வயது வரம்பு இல்லை என்பது தான் உண்மை. ஏனெனில் பெண்கள் தங்களின் மெனோபாசுஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தையை உருவாகச் செய்கின்ற புதிய சிகிச்சை முறைகள் பிரபலமாகி வருகின்றது.
பெண்களின் மாதவிடாய்க்கு பிறகு கருத்தரிப்பை ஏற்பட செய்வது எப்படி?
ஆண்களுக்கு 80 வயதில் கூட விந்தணு உற்பத்திகள் இருக்கும். ஆனால் பெண்களுக்கு மெனோபாஸுக்கு பிறகு கருமுட்டையின் உற்பத்தி நின்று விடும்.
எனவே பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் அவர்களின் கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்கும். அந்த கர்ப்பப்பை சுருங்குவதை தடுப்பதற்கு, ஹெச்.ஆர்.டி. எனப்படும் ஹார்மோன் சிகிச்சையை கொடுத்து, மீண்டும் அவர்களுக்கு மாதவிடாயை வர செய்வார்கள்.
பிறகு தானமாகப் பெற்ற கருமுட்டையை, ஐ.வி.எஃப் முறையில் கணவரின் விந்தணுவுடன் சேர்த்து, 3 நாட்கள் இன்குபேட்டரில் வைத்து, பின் அதை பெண்ணின் கருப்பையில் செலுத்தி கருவை வளரச் செய்வார்கள்.
ஆனால் பெண்களுக்கு செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு முன்பாக அவர்களின் உடல் மற்றும் கர்ப்பப்பை, சிறுநீரகம், இதயம் போன்ற முக்கியமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மேலும் இந்த சிகிச்சை முறையினால் சிலருக்கு புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கான பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
ஹெச்.ஆர்.டி என்ற சிகிச்சையை செய்து கொள்ளும் பெண்கள் இளமையாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை உணர்வார்கள். ஆனால் இந்த சிகிச்சையை அனுபவம் உள்ள மருத்துவர்களிடன் பெற்றுக் கொள்வதே நல்லது.

நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம்.
பெண்கள் பலரையும் பாடாய்ப் படுத்தும் ஒரு விஷயம் மாதவிலக்கு. சிலருக்கு எளிதாய் கடந்து போய்விடும் அந்த மூன்று நாட்கள். பலருக்கு ஒரு யுகமாக கடக்கிறது. இந்த மாதவிலக்கு இன்னும் சிலருக்கு கூடுதலாக மேலும் சில பிரச்சினைகளை தருகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்‘ என்று அழைக்கிறார்கள். அதாவது மாதவிலக்கு வருவதற்கு முன் பெண்களுக்கு ஏற்படுகிற உடல்நல பிரச்சினைகள்.
பல பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் படபடப்பு, எரிச்சல், காரணமற்ற கோபம், உடல் எடை அதிகரித்து வயிறு உப்பியது போன்ற எண்ணம், மார்பகம் கனமாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், உணவு பிடிக்காமல் இருப்பது, தூக்கமின்மை, அழுகை வருவது போன்ற பலவகையான உணர்வுகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இந்த உணர்வுகள் எல்லாம் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்‘ பாதிப்பு என்கிறது மருத்துவம். சிலருக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் மாதவிலக்கு சமயத்திலும் தொடர்கின்றன.
இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை தொடர்கிறது. இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளும் திணறுகிறார்கள். இதில் என்னவொரு வேடிக்கை என்றால் இந்த பிரச்சினையைப்பற்றி அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் கூட புரிந்துகொள்வதில்லை என்பதுதான். ஏன் ஒவ்வொரு மாசமும் இப்படி பிரச்சினை பண்ற என்பதுதான் அவர்களின் பார்வையாக இருக்கிறது.
அந்தப் பெண்கள் ‘பி.எம்.எஸ்.’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மாதவிலக்குக்கு முந்தைய பிரச்சினையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது நோயல்ல மாதவிலக்குக்கு முந்தைய சமயத்திலும் சிலருக்கு மாதவிலக்கு சமயத்திலும் ஏற்படுகிற சிறிய அளவிலான மன அழுத்தம் என்பதை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.
பொதுவாக மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பாக சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். டென்சன் காரணமாக ரத்த அழுத்தம் உயராமல் இருக்கத்தான் இந்த உப்புக் கட்டுப்பாடு. இதோடு கூட யோகா, தியானம் போன்றவற்றைச் செய்தால் மன அமைதி கிடைக்கும். அந்த சமயத்தில் மன இறுக்கத்தால் தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.
வைட்டமின் குறைபாடு இருந்தால் மட்டும் மருத்துவரின் அறிவுரைப்படி மாதவிலக்கு நாட்களில் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம். நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம். மாதவிலக்கு முடியும் போது இந்தப் பிரச்சினையும் தானாக மறைந்துவிடும்.

முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக குறைமாதத்தில் குழந்தைகள் பிறக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.
முழு கர்ப்ப காலம் முடிவடையாமல் 37 வாரங்களுக்கு முன்பாக (259 நாட்கள்) பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தாய்க்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது கர்ப்ப கால நீரிழிவு, பனிக்குடம் உடைந்து கர்ப்ப வாய் திறந்து கொள்ளுதல், நோய் தொற்று ஏற்படுதல், கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் இருத்தல், செயற்கை முறையில் கருத்தரிப்புக்குள்ளான குழந்தைகள், குறைமாத குழந்தைகளாக பிறக்கின்றன.
முதல் பிரசவத்தில் தாய்க்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுதல் ஆகியவற்றால் இரண்டாவது பிரசவம் குறைபிரசவமாக வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, கருவை சுமந்திருக்கும் தாய், அவரது தாயின் வயிற்றில் வளர்ந்தபோது ஏதாவது கோளாறுகள் இருந்திருந்தாலும், குறைபிரவத்திற்கு வாய்ப்புண்டு.
முதல் பிரசவத்தில் குறைமாத குழந்தை பிறந்திருந்தால் இரண்டாவது பிரசவமும், அதேபோல் இருக்க வாய்ப்புகள் அதிகம். எனினும் காரணமே இல்லாமல் குறைமாதத்தில் குழந்தைகள் பிறப்பதுதான் அதிகமாக நடக்கிறது. குறைபிரசவத்தை எளிதில் தடுக்க முடியாது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவை கட்டுக்குள் வைப்பதால் பிரசவ நாட்களை தள்ளிப்போட முடியும். குழந்தை குறைமாதத்தில் பிறந்தாலும் சரியான சிகிக்சையளித்தால் பெரும்பாலான குழந்தைகளை காப்பாற்ற முடியும்.
நுரையீரல் முதிர்ச்சியடையாமை, நோய்கிருமித் தாக்கம், மூளையில் ரத்த கசிவு, போன்றவையே, குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இறக்க காரணமாகின்றன.

குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல் நிலையை ஏற்ப உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதுண்டு.
கருத்தரித்த ஐந்து அல்லது ஆறாவது மாதத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதே போல குழந்தை பிறந்த முதல் இரண்டு அல்லது நான்கு மாதங்கள் வரை தாயின் உடல் நிலையை ஏற்ப உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுவதுண்டு.
இதற்கு காரணம் பிள்ளை பிறந்த போது அவர்களது பிறப்புறுப்பு விரிவடைந்ததன் காரணமாக மிகுந்த வலி பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனவே, அவர்களது பிறப்புறுப்பு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலும், அவர்களது அங்கு ஏற்பட்ட காயங்கள் குணமடையும் வரையிலும் உடலுறவு வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இது போன்ற ஏறத்தாழ நான்கைந்து மாதங்கள் உடலுறவில் ஈடுபடாமல் இருந்து, குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் என்ன உணர்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. அதைப்பற்றி இனிக் காண்போம்.
ஆய்வு சமீபத்தில் குழந்தை பிறந்த பிறகு தம்பதி மத்தியில் உடலுறவு வாழ்க்கை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் 1,118 தம்பதிகள் பங்கேற்றனர். இவர்கள் மத்தியில் குழந்தை பிறந்ததற்கு முன்பு, பின்னர் உடலுறவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
94% பேர் தாங்கள் உடலுறவில் முழுமையாக ஈடுபடுகிறோம் என்றும், 60% பேர் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் சிறிதளவு மேலோங்கி இருப்பதாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
பெண்களின் அச்சம் முதன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதி மத்தியில் ஏறத்தாழ மூன்றில் இருந்து ஐந்து மாதமாவது இந்த உடலுறவு வாழ்க்கை தடைப்பட்டு போயிருக்கும். இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு, தங்கள் துணைக்கு தன் மீதுள்ள ஈர்ப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சம் பிறக்கிறது.
உடல்வாகு குழந்தை பிறந்த பிறகு மாறும் தன் உடல்வாகினை தனது கணவனுக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆயினும் 14% பெண்கள் குழந்தை பிறந்த பிறகு தைரியத்துடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.
வரம் குழந்தை பிறப்பது என்பது வரம் போன்றது. வரம் கிடைத்த பிறகு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமே தவிர அச்சம் கொள்ள கூடாது.
கணவன், மனைவி குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போதும் சராசரியாக ஆண்கள் வாரத்திற்கு இருமுறையும், பெண்கள் வாரத்திற்கு ஒருமுறையும் தான் ஈடுபட விரும்புகிறார்கள்.
வலி ஏற்படலாம் குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களுக்கு ஆரம்பத்தில் வலி ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட காயங்கள் இதற்கு காரணமாக இருக்கின்றன.

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர்.
கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.
இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.
இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள்(ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.
இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும்.
பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, பாலூட்டுங்கள்.
மேலும், ஒவ்வொரு வாரமும், மாதமும் என குழந்தை பிறந்த முதல் இருவருடம் வரை எலும்பு நல்ல வலிமையடை வேண்டும் எனில், பாலின் அவசியம் அறிந்து, சரியான அளவில் பாலூட்ட வேண்டும் என்றும் அறிவுரைக்கப்படுகிறது. அதைப்பற்றி இனிக் காண்போம்…
முதல் 3 மாதங்கள் :
முதல் மூன்று மாதங்கள் 2-3 மணி நேரத்திற்கு ஒருமுறை 30 - 90 மில்லி என, ஒரு நாளுக்கு 8 - 12 முறை பாலூட்ட வேண்டும். ஓர் நாளுக்கு 250 - 700 மில்லி வரையிலான அளவு பாலூட்ட வேண்டும்.
3 வாரத்தில் இருந்து 3 மாதம் வரை :
ஒரு நாளுக்கு 80 - 120 மில்லி அளவு பால், 6 - 8 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
3 - 6 மாதங்கள் :
மூன்றாவது மாதத்தில் இருந்து ஆறாவது மாதம் வரை, 120 - 240 மில்லி அளவிலான பால், 4 - 6 முறை ஓர் நாளுக்கு ஊட்ட வேண்டும். இதன் மூலம் ஓர் நாளுக்கு 700 - 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
6 - 9 மாதங்கள் :
ஒரு நாளுக்கு 170 - 240 மில்லி அளவு பால், 6 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
9 - 12 மாதங்கள் :
ஒரு நாளுக்கு 200 - 240 மில்லி அளவு பால், 3 - 5 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
12 + மாதங்கள் :
ஒரு நாளுக்கு 120 மில்லி அளவு பால் / சோயா பால், தயிர் 4 முறை ஊட்டலாம்.

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இந்த பிரச்சனையில் பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.
நடுத்தர வயதைத் தொட்ட பல ஆண், பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது பரவலாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.
பெண்களைவிட ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 50 விழுக்காட்டினர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள்.
ஆண்களுக்கு விரைப்பை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகிறது என்பது பொதுவான விஷயம். ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம், வேலைச்சுமை, டென்ஷன், அதிக சொகுசாக வாழ்தல் போன்ற பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.
இதனால்தால் ஆண்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன.

பெண்களின் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு விதமான நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களை தடுக்கும் வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.
பெண்களின் ஒவ்வொரு காலகட்டங்களில் ஒவ்வொரு விதமான நோய்கள் தாக்குகின்றன. அந்த நோய்களை பற்றியும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்க்கலாம்.
10 வயது பிரச்சனைகள் :
கால்சியம் பற்றாக்குறை
இரும்புச்சத்துப் பற்றாக்குறை
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
தீர்வு:
தவறாமல் அனைத்து தடுப்பூசிகளும் போட வேண்டும்.
11 -20 வயது பிரச்னைகள்:
பூப்பெய்துதல், மாதவிடாய் பிரச்னைகள்
சுகாதாரமின்மை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள்
தீர்வு :
ஹெ.பி தடுப்பூசி,இரும்புச்சத்து, கால்சியம் அளவைப் பராமரிப்பது பாலியல் விழிப்புஉணர்வு பற்றிய அறிவைப் பெறுவது
21 - 40 வயது பிரச்னைகள் :
ரத்தசோகை
ஃபோலிக் அமிலக் குறைபாடு
பி.சி.ஓ.டி
பருமன்
தீர்வு :
கர்ப்பப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனை
ஊட்டச்சத்துக்களைப் பராமரிப்பது
தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது
41-60 வயது பிரச்னைகள் :
மெனோபாஸ் பிரச்னைகள்
அதீத மாதவிடாய் ரத்தப்போக்கு, ஃபைப்ராய்ட்ஸ்
எலும்பு அடர்த்திக் குறைவு,
அதீத உடற்பருமனால் ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ்
அதிக கொழுப்பால் ஏற்படும் இதயப் பிரச்னைகள்
சர்க்கரை நோய்
தீர்வு :
தொடர்ச்சியாகக் கால்சியத்தை எடுத்துக்கொள்வது
கொழுப்பு மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள்

60 வயதுக்கு மேல் பிரச்னைகள் :
இதய நோய்கள்
சர்க்கரை நோய்
கண் நோய்கள்
எலும்பு அடர்த்திக் குறைதலால் ஏற்படும் எலும்பு முறிவு
தீர்வு :
சமச்சீர் உணவு - குறைந்த கார்போஹைட்ரேட், குறைந்த கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுஉப்புகள் உள்ள உணவுகள்.
தொடர்ச்சியான உடற்பயிற்சியுடன் சரியான எடையைப் பராமரிப்பது.

காலை வேளையில் பணிக்கு செல்லும் அவசரத்தில் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் அரைகுறையாக காலை உணவை முடித்துக்கொள்ளும் பெண்கள் அதிகம்.
வேலைக்கு செல்லும் பெண்கள் இரட்டிப்பு பணிச்சுமையை சுமக்க வேண்டியிருக்கிறது. காலையில் அவசர, அவசரமாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியதும் மீண்டும் வேலையை தொடர வேண்டியிருக்கிறது.
காலை வேளையில் பணிக்கு செல்லும் அவசரத்தில் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் அரைகுறையாக காலை உணவை முடித்துக்கொள்ளும் பெண்கள் அதிகம். அவர்களால் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும் நேரம் ஒதுக்கமுடியாமல் போய்விடுகிறது. அதுவே அவர்கள் உடல் பலகீனமாக காரணமாகி பல்வேறு வியாதிகள் தொற்றிக்கொள்ளவும் வழிவகுத்துவிடுகிறது. பெண்கள் ஒருபோதும் காலை உணவை தவிர்க்கவோ, குறைத்து கொள்ளவோ கூடாது.
காலை உணவை போதுமான அளவு சாப்பிட முடியவில்லை என்றால் பழ வகைகள் சாப்பிடுவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் குளுக்கோஸ் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். அத்துடன் உலர் பழவகைகள் சாப்பிடுவதும் உடல் ஆற்றலை அதிகப்படுத்தும்.
காலை வேளையில் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்கமுடியாவிட்டாலும் மதிய சாப்பாட்டு வேளையின்போது சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அதுபோல் வாரத்தில் நான்கு நாட்கள் அரைமணி நேரம் வீதம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு எப்படியாவது நேரத்தை ஒதுக்கிட வேண்டும்.
உடல் இயக்கம் சீராக நடைபெற தண்ணீரின் பங்களிப்பு அவசியமானது. அதனால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். நொறுக்கு தீனிகள், சாக்லேட்டுகள், இனிப்பு பலகாரங்கள், அரிசி சாதம் போன்றவற்றை அளவோடு உண்ண வேண்டும். அவை இன்சூலினை அதிகம் சுரக்க வைத்து உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும்.

கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கி விடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் மசக்கை அதிகமாக இருக்கும்.
புத்தம்புதிதாக ஒரு உயிரே உருவாகிறதே. இதுபோன்ற அறிகுறிகள்கூட இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இருக்காதே! இந்தக் காலகட்டத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப்படும்வரை, வாந்தியும் மயக்கமும் ஏற்படும். இதைத்தான் மசக்கை என்கிறோம்.
கரு, கருப்பையில் தங்கி வளர ஆரம்பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும். எதையும் சாப்பிடப் பிடிக்காது. காபி, டீ, ரசம்.. என்று அதுவரை ‘கமகமக்குதே’ என்று சொல்ல வைத்த பல வாசனைகளும் இந்த சமயத்தில் வயிற்றைப் புரட்ட வைக்கும். தொட்டதற்கெல்லாம் வாந்தி வரும்.
அதற்காக வயிற்றை சும்மா காய விடக்கூடாது. அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும். வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும்.
இந்தச் சமயத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது.
டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். ‘எதற்கும் அடங்க மாட்டேன்’ என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், மருத்துவமனையில் சேர்த்து ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.
இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும். இன்னொரு விஷயம்.. சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு.
கர்ப்ப காலம் பற்றி சொல்லப்படும் எத்தனையோ பொய்களில் இதுவும் ஒன்று. வாந்தி பற்றி நினைக்காமல், குழந்தையின் முடி அழகு குறித்த கற்பனையில் தாயின் கவனம் திசைதிரும்பும் என்பதற்காக இப்படிச் சொல்கிறார்களோ என்னவோ.. ஆனால், குழந்தையின் முடிக்கும் தாயின் வாந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வழக்கமானதுதான் என்றாலும், விடாமல். துரத்தும் அதிகபட்ச வாந்தி என்றால் கருவில் இருப்பது இரட்டைக் குழந்தைகளாகவும் இருக்கலாம்! ‘முத்துப்பிள்ளை கர்ப்பம்’ என்றாலும் இப்படி அதிகமாக வயிறு புரட்டும்!

இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக் கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளையும் கூறுகிறது.
இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள்! இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக் கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது. பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பக புற்று ஏற்பட வாயப்பிருக்கிறது. ஆனால் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்றுநோய்களிலும் இறக்கும் பெண்களை போல் இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குதலினால் இறக்கின்றனர்.
நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதயநோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்பு செய்யபட்டு விட்டன.
பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன் உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது. மாதவிடாய் நிற்கும் வேளையில் எஸ்ட்ரோஜன் சுரபில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது. அறுபத்தைந்து வயதாகின்றபோது இதயத்தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது.
அறுபத்தைந்து வயது தானே ஆகிறது? அதற்குள் என்ன? என்று கவனமின்மையாக இருக்கக் கூடாது.
இப்போதிலிருந்தே சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.
கொழுப்பையும், கொலஸ்ட்ராலைம் முடிந்த அளவுக்கு உணவிலிருந்து நீக்கி விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைம், கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும், பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்ப்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நடை பயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருபவர்கள் இளமையுடன் மற்றவர்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எவராலும் எப்போதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற மெனக் கெடல்களை செய்யாமல் தவிர்த்துவிடுவது நல்லது.
பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் முன்றில் ஒரு பங்கு அதிக எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது.
சி.டி.சி. எனப்படும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள். அதிலும் குறிபாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாயப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்ணின் பிறப்பு உறுப்பில் சிலருக்கு அடிக்கடி ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல் ஏற்படுவது உண்டு. அரிப்பு, எரிச்சல், கசிவு, சிறுநீர் செல்லும் பொழுது வலி இவை இத்தாக்குதலின் அறிகுறிகளாக வெளிப்படும்.
பெண்ணின் பிறப்பு உறுப்பில் சிலருக்கு அடிக்கடி ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல் ஏற்படுவது உண்டு. இது 75 சதவீத பெண்களுக்கு ஒரு முறையாவது ஏற்படுவது உண்டு. அரிப்பு, எரிச்சல், கசிவு, சிறுநீர் செல்லும் பொழுது வலி இவை இத்தாக்குதலின் அறிகுறிகளாக வெளிப்படும்.
இது அதிகம் பெருகி வளர்வதற்கான சில காரணங்களைப் பார்ப்போம்.
* அதிக ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்பவர்களுக்கு இத்தாக்குதல் ஏற்படுவது உண்டு. இந்த ஆன்டிபயாடிக் லக்டோபசில்ஸ் எனும் நல்ல பாக்டீரியாவினை குறைத்து விடுவதால் தாக்குதல் ஏற்படுகின்றது.
* கர்ப்ப காலம்
* கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை அளவினை ரத்தத்தில் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு இத்தாக்குதல் ஏற்படுவதுண்டு.
* நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதோர்.
* சத்தில்லாத உணவு மற்றும் மிகக் குறைந்த உணவு உட்கொள்பவர்கள்.
* அதிக சர்க்கரை மற்றும் இனிப்பு வகை உணவுகளை உட்கொள்பவர்கள்.
* மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடு.
* ஸ்ட்ரெஸ் ஆகியவைகள் யீஸ்ட் பூஞ்சை பாதிப்பு பிறப்புறுப்பில் தாக்குதலை ஏற்படுத்துகின்றன.
சில பெண்களுக்கு அடிக்கடி இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. வருடத்திற்கு 4 முறைக்கு மேல் இப்பாதிப்பு ஏற்படுவதும் சிலருக்கு நிகழும். இப்படி அடிக்கடி யீஸ்ட் பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாபவர்களுக்கு சில காரணங்கள் உண்டு.
* ஹார்மோன் சீரான அளவில் இன்மை
* கர்ப்ப காலம்
* அதிக எடை
* இறுகிய ஆடை
இவைகளும் காரணமாகும்.
யீஸ்ட் பூஞ்சை பாதிப்பின் முதல் அறிகுறி அரிப்பும். வெள்ளை நிற திட்டு வெளியேற்றமுமாய் இருக்கும். இதற்கான உள் மருந்தும், பூச்சு மருந்து, க்ரீம் இவை மருந்தாக மருத்துவர் பரிந்துரைப்பார்.
5 சதவீத பெண்களுக்கு இப்பாதிப்பு அடிக்கடி ஏற்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு மருத்துவர் 6 மாத தொடர் சிகிச்சை அளிப்பார். உணவில் கொழுப்பில்லாத தயிர் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். பருத்தி உள்ளாடைகளே அனைவருக்கும் சிறந்தது.
பிறப்புறுப்பில் பாக்டீரியா கிருமி திருமணமான பெண்களிடையே சற்று கூடுதலாகக் காணப்படும். சில நேரங்களில் இவை அறிகுறி இல்லாமல் இருக்கலாம். அநேகமாக நீர் போன்ற கசிவு, துர்நாற்றம், எரிச்சல், அரிப்பு இவை இதன் அறிகுறிகள். அநேகமாக ஆன்டிபயாடிக் சிகிச்சையில் இது எளிதாக சரியாகி விடும். மருத்துவ சிகிச்சை அவசியம். கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாய் உடனடி சிகிச்சை பெற வேண்டும்.
தினமும் காலை ஊற வைத்த வெந்தயம் நீருடன் எடுத்துக் கொள்வதும், கொழுப்பில்லாத தயிர் தினமும் எடுத்துக் கொள்வதும் சிறந்த நிவாரணமாக அமையும்.
இது போன்று சிறுநீர் பாதை நோய் தொற்று அடிக்கடி வருவதற்கும் சில காரணங்கள் உள்ளன.
* மருத்துவமனையில் இருப்பவர்கள்
* நீரிழிவு நோய் பாதிப்பு உடையவர்கள்
* சிறுநீரக கல்
* சிறுநீர் வெளியேற குழாய் பொருத்தப்பட்டவர்கள்
* இவ்வுறுப்புகளில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அறுவை சிகிச்சை பெற்றவர்கள்.
* பிறவியில் சில குறைபாடு உடையவர்கள்
இவைகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையுமே நிரந்தர தீர்வாக அமையும்.