search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களே குளியல் அறையை எப்படி சுத்தம் செய்வது தெரியுமா?
    X

    பெண்களே குளியல் அறையை எப்படி சுத்தம் செய்வது தெரியுமா?

    • குளியலறையில் சூரிய வெளிச்சம் படிவது மிகவும் நல்லது.
    • தினமும் தரமான கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுத்தமான குளியலறைகள் அவசியமானது. நாள் முழுவதும் அது ஈரப்பதமாக இருந்தாலும் தினமும் தரமான கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நகர்ப்புற சூழலில் இடப்பற்றாக்குறை காரணமாக குளியலறையும், கழிவறையும் ஒரே அறையாக அமைக்கப்படுகிறது.

    வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் பரவும் வகையில் அதன் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். குளியலறையில் சூரிய வெளிச்சம் படிவது மிகவும் நல்லது. தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதம் காரணமாக உருவாகும் பாசி கால்களை வழுக்க செய்யும். இதை தவிர்ப்பதற்கு ஆன்டி ஸ்கிட் டைல்ஸ் வகைகளை குளியலறை தரையில் பதிக்கலாம் அல்லது ஆன்டி ஸ்கிட் மேட் பயன்படுத்தலாம்.

    குளியலறைக்கு வெளிச்சம் முக்கியமானது. எனவே தரமான எல்.இ. விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இரண்டு மின் விளக்குகள் பொருத்துவது நல்லது. ஒற்றை அறைக்கு மத்தியிலும், மற்றொன்றை வாஷ்பேசினுக்கு மேற்புறத்திலும் பொருத்த வேண்டும். குளியலறையில் பயன்படுத்தும் சுவிட்ச் வகைகள் மின் அதிர்ச்சியை தடுக்கும் ஷாக் புரூஃப் அல்லது வாட்டர் புரூஃப் தொழில்நுட்பம் கொண்டதாக இருக்க வேண்டும்.

    குளியலறைக்குள் வெளிப்புற காற்று உள்ளே வருவதற்கும் வெப்பம் வெளியேறுவதற்கும் ஏற்ற வகையில் காற்றாடி பொருத்தலாம். இதன் மூலம் தரையையும் ஈரப்பதம் இல்லாமல் உலர வைக்கலாம்.

    குளியலறையில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குவதற்கு ஒரு கிண்ணத்தில் வெள்ளை வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை நிரப்பி, அறைக்குள்ளே ஈரம் படாதவாறு மூலையில் வைக்கலாம். கிண்ணத்தில் உள்ள வினிகர் அல்லது பேக்கிங் சோடாவை வாரம் ஒருமுறை மாற்ற வேண்டும்.

    துணிகள் மற்றும் துண்டுகளை தொங்கவிடும் குழாய் போன்ற பகுதியை சுத்தம் செய்வதற்கும், ஒரு கப் நீரில் 1 தேக்கரண்டி வினிகர், ஒரு தேக்கரண்டி பாத்திரம் கழுவும் திரவம் ஆகியவற்றை கலந்து பருத்தி துணியால் துடைக்கலாம். அதன் பின்பு தண்ணீரில் கழுவி உலர வைக்கலாம். குழாயின் இடுக்குகளில் படிந்திருக்கும் அழுக்கை அகற்றுவதற்கு பெயிண்டிங் செய்ய பயன்படும் சிறிய பிரஷ்மூலம் மேலே குறிப்பிட்ட கலவையை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

    ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி சாறு பிழிந்து அதில் 1 தேக்கரண்டி உப்பு கலந்து கொள்ள வேண்டும். அதை பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட குளியலறை சாதனங்கள் மீது தடவி 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவிய பின்னர் கைக்ரோ ஃபைபர் துணியால் துடைத்து உலர வைக்கவும்.

    குளியலறை கண்ணாடியை சுத்தம் செய்வதற்கு ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் பேக்கிங் சோடாவை பசை போல் கலந்து மேற்பரப்பில் பஞ்சு மூலம் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து கண்ணாடியை தண்ணீர் கொண்டு கழுவினால் பளிச்சென்று ஒளிரும்.

    Next Story
    ×