search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    வீம்பை தவிருங்கள்: வேண்டாம் யார் முதலில் பேசுவது என்ற ஈகோ
    X

    வீம்பை தவிருங்கள்: வேண்டாம் யார் முதலில் பேசுவது என்ற ஈகோ

    • பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வீம்பு முக்கிய காரணமாக இருக்கும்.
    • ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் கடுமையாக பேசுவார்கள்.

    தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வீம்பு முக்கிய காரணமாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் கடுமையாக பேசுவார்கள். சில சமயங்களில் வாக்குவாதம் முடிந்த பிறகு பேசாமலே இருப்பதற்கு முயற்சிப்பார்கள். ஆனால் மனமோ பேச வேண்டும் என்று துடிக்கும். அதற்கு வடிகாலாக குழந்தைகளை பயன்படுத்திக் கொள்வார்கள்.

    ஒருவருக்கொருவர் பேச வேண்டிய விஷயங்களை குழந்தைகள் முன்னிலையில் கொட்டித்தீர்ப்பார்கள். அந்த சமயத்தில் குழந்தைகள் தூதுவராக மாறவேண்டி இருக்கும். நடுவராக இருந்து நடுநிலை வகிக்க வேண்டி இருக்கும். ஆனால் தங்கள் பெற்றோர் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் சில குழந்தைகள் தவித்துப்போவார்கள்.

    இதற்கு காரணமாக இருக்கும் வீம்பு தேவையற்ற பிரச்சினைகளை கிளறிவிடும். யாருக்கு பதில் சொல்வது என்று தெரியாமல் குழந்தைகள் தடுமாறிப்போவார்கள். அவர்களின் நிம்மதியும் சீர்குலைந்துவிடும். ஒருசிலர் வீம்பின் காரணமாக பிரிந்தும் விடுவார்கள்.

    அது குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். சில சமயங்களில் சகோதர-சகோதரிகளுக்கு இடையே தோன்றும் பிரச்சினைகளுக்கு வீம்பு காரணமாகிவிடும். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலேயே நீண்ட காலம் இருக்க வைத்துவிடும்.

    யார் முதலில் பேசுவது என்ற ஈகோவே வீம்புக்கு பக்கபலமாக அமைந்து விடும். அத்தகைய வீம்பை விட்டுவிட்டு யாராவது ஒருவர் முதலில் பேசிப் பாருங்கள். மற்றொருவர் நிச்சயம் எதிர்பார்த்ததை விட நன்றாக பேசத் தொடங்கி விடுவார். அவரும் இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் காத்திருந்திருப்பார். இதுநாள் வரை மனதில் புதைத்து வைத்திருந்த பாசத்தை கொட்டி திக்குமுக்காட செய்துவிடுவார்.

    Next Story
    ×