search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கூந்தல் பராமரிப்பிற்கு உதவும் நெய்
    X

    கூந்தல் பராமரிப்பிற்கு உதவும் நெய்

    • நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது.
    • பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

    சமையலுக்கு உபயோகிக்கும் நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது. நெய்யில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டக்கூடிய வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை நெய்யில் நிறைந்திருக்கின்றன. நெய்யுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, தேன் மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வீட்டிலேயே ஹேர் மாஸ்க் தயாரித்து உபயோகிக்கலாம்.

    நெய் ஹேர் மாஸ்க்

    போதுமான அளவு நெய்யை எடுத்து தலையிலும். கூந்தலிலும் நன்றாக பூசவும். 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். நுனி முடி பிளவுப்படும் பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாகும். நெய், வறண்ட தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும், முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.

    நெய், வேப்பம்பூ ஹேர் மாஸ்க்:

    ஒரு கிண்ணத்தில் 3 டீஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் தேன், 10 முதல் 15 வேப்பிலைகள் கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் அதை சிறு தீயில் வைத்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் இருந்து வேப்பிலைகளை வெளியே எடுக்கவும், பின்பு அந்த நெய் கலவையை மிதமான சூட்டில் எடுத்து தலை முழுவதும் பூசவும். 30 நிமி டங்கள் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். வேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பொடுகு பிரச்சினையை நீக்கும், உடல் சூட்டை குறைக்கும், இளநரை உண்டாகாமல் தடுக்கும்.

    நெய், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:

    2 டீஸ்பூன் நெய்யுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு எசன்ஷியல் எண்ணெய்யை சில துளிகள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தலை பகுதியிலும், கூந்தலிலும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

    நெய், எலுமிச்சம் பழச்சாறு ஹேர் மாஸ்க்:

    2 டீஸ்பூள் நெய்யை உருக்கி, அதனுடன் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கவும். இதை மித மான சூட்டில் எடுத்து தலையில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

    நெய், தேன் ஹேர் மாஸ்க்:

    போதுமான அளவு நெய்யுடன் சில துளிகள் தேன் கலந்து தலையில் பூசவும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும். தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

    Next Story
    ×